Breaking News

அபுதாபியில் மிஃராஜ் இரவு நினைவு சொற்பொழிவு

J.நூருல்அமீன்
0
அஸ்ஸலாமு அலைக்கும்


அபுதாபியில் மிஃராஜ் இரவு நினைவு சொற்பொழிவு


அபுதாபியில் அய்மான் சங்கம் நபிகள் பெருமானாரின் விண்ணேற்ற பயணத்தை நினைவு கூறும் சொற்பொழிவுகளை நடத்தியது.இன்று மாலை நஜ்தா சாலை ஈடிஏ எச்ஆர்டி ஹாலில் நடந்த நிகழ்சி அய்மான் தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமையில் நடந்தது. அய்மானின் மூத்த தலைவரும் கீழ்க்கரை நகர காஜியாருமான காதர் பக்ஷ் ஹாஜியார் அய்மான் கல்லூரித் தலைவர் கனிமொழி கவிஞர் ஷம்சுதீன் ஹாஜியார் முதலானோர் கலந்து கொண்டனர். மவுலவி ஷர்புதீன் மன்பயீ, மவுலவி நஹ்வி இஸ்ஹாக் லப்பை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.


ஆரம்பமாக அய்மான் செயலாளர் இரவாஞ்சேரி இக்பால் வரவேற்புரை ஆற்றினார். அத்தர் முஹம்மது ஹாஜா திருமறை வசனங்களை ஓத அய்மான் பொதுச்செயலாளர் காயல்பட்டினம் எஸ் ஏ சி ஹமீது அதன் தமிழாக்கத்தை வழங்கினார்.இந்த நிகழ்வில் லால்பேட்டை எஸ்.அப்துல் ரஹ்மான், லால்பேட்டை இனாமுல் ஹக் ஆகியோர் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இறுதியாக அய்மான் செயலாளர் லால்பேட்டை அப்துர் ரஹ்மான் நன்றி நவின்றார். நிகழ்ச்சி காயல்பட்டினம் மவுலவி ஏஎஸ் முத்து அகமது ஆலிம் அவர்களது பிரார்த்தனையோடும் இரவுத் தொழுகையோடும் இனிதே நிறைவு பெற்றது. தமிழகத்தின் பல ஊர்களின் பிரதிநிதிகளும் இன்றைய அய்மான் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

Tags: அபுதாபி மிஃராஜ்

Share this