Breaking News

தமிழ்நாடு மாநில முஸ்லிம் லீக் பொதுச் செயலாளராக கே.ஏ.எம். அபூபக்கர் தேர்வு

நிர்வாகி
0
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற் றது.

முஸ்லிம் லீகின் பணிகளை விரிவுபடுத்தவும், தாய்ச் சபையை பலப்படுத்தவும் மாவட்டவாரியாக கலந் தாய்வுக் கூட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட வாய்ப்பு உள்ள தொகுதிகளில் பணி களை முடுக்கிவிட முடிவு செய்யப் பட்டது.
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு துவங்கியது.

மாநில முஸ்லிம் லீகின் அணிகளின் அமைப்பாளர் கள், துணை அமைப்பாளர் கள், குழுக்களின் உறுப்பி னர்கள் சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்றனர்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் முதன்முறையாக நடை பெற்ற இந் நிர்வாகி கள் கூட்டத்தில் இயக்கத் தின் எதிர்கால செயல் திட் டங்கள் விரிவாக ஆலோ சிக்கப்பட்டன.

இந்த ஆலோசனையின் அடிப்படையில் மாவட் டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயல் பாட்டை விரிவுபடுத்தவும், எதிர்கால பணிகளை திட்டமிட்டு அமைக்கவும் மாவட்ட வாரியாக மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், நகர, கிராம, பிரைமரி அளவிலான நிர் வாகிகளை உள்ளடக்கிய கலந்தாய்வு கூட்டங்களை நடத்துவது, சென்னை, வேலூர், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்த மண் டலங்களுக்குள் வருகின்ற மாவட்டங்கள் அம் மண் டலத்தில் உள்ள ஒரு ஊரில் மாவட்டவாரியாக இந்த கலந்தாய்வு கூட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் போட்டியிடும் வாய்ப் புள்ள தொகுதிகள் கண்ட றியப்பட்டு அந்த தொகுதி களில் முழு கவனமும் செலுத்தப்பட்டு வாக்கா ளர்களை சரிபார்த்தல், பிரைமரி அமைப்புக் களை ஊர்கள்தோறும் ஏற்படுத் துதல், வீடு வீடாக சென்று முஸ்லிம் லீக் உறுப்பினர் களை சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில செயற்குழு கூட்டத்தை வரும் ஆகஸ்டு மாதம் 2-ம் தேதி ஞாயிற் றுக்கிழமை திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் நடத்துவது என்று இக் கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.


தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு பொதுச் செயலா ளர் பொறுப்பு பதவியில் இருக்கின்ற கே.எ.எம். முஹம்மது அபூபக்கர் இனி பொதுச் செயலாளராக செயல்படுவார் என இக் கூட்டம் ஏகமனதாக தேர்வு செய்தது.
கூட்டத்தில் கலந்து கொண்டோர் விவரம் வருமாறு-

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் - பொதுச் செயலாளர் (பொறுப்பு), வடக்குகோட்டையார் அல்ஹாஜ் வ.மு. செய்யது அஹமது - பொருளாளர். துணைத் தலைவர்கள் வாணியம்பாடி அரூர் அப்துல் காலிக், சேலம் எம்.பி. காதர் ஹ{சேன், திருநெல்வேலி பேட்டை எஸ்.எம். கோதர் மொய் தீன், திருப்பூர் பி.எஸ். ஹம்ஸா. செயலாளர்கள் லால்பேட்டை மவ்லவி ஷபீகுர் ரஹ்மான், இராம நாதபுரம் எம்.எஸ்.ஏ. ஷாஜ ஹான், கடையநல்லூர் நெல்லை அப்துல் மஜீத், காயல் மஹபூப், கமுதி பஷீர். அரசியல்ஆலோசனைக் குழு அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., ஆம்பூர் எச். அப்துல் பாஸித், எம்.எல்.ஏ., சொத்து பாதுகாப்புக்குழு எஸ்.எம். கனி சிஷ்தி, திருவாரூர் எம்.எம். ஜலாலு தீன், கணக்கு தணிக்கைக்குழு பள்ளப்பட்டி எம்.ஏ. மஹபூப் அலி, கம்பம் எம். ஷாகுல் ஹமீது, வாணியம் பாடி முஹம்மது நயீம், சென்னை கே.பி. இஸ்மத் பாஷா. ஒழுங்கு நடவடிக்கைக்குழு வாணியம்பாடி எஸ்.டி. நிஸார்அஹமது, சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன். அணி அமைப்பாளர்கள் வழக்கறிஞர் அணி வெ. ஜீவகிரிதரன், ஆலிம் அணி மவ்லவி எம். ஹாமித் பக்ரீ, சுதந்திர தொழிலாளர் ய+னியன் கோவை எம்.எஸ். முஹம்மது ரஃபீக், காயிதெ மில்லத் பேரவை - திருப்பூர் எம்.எஸ். சத்தார், சிராஜுல் மில்லத் பேரவை - கோட் டக்குப்பம் வி.ஆர். முஹம்மது இப்ராஹீம், மாணவர் பேரவை - மேலப் பாளையம் எல்.கே. எஸ். மீரான் மைதீன், இளைஞர் அணி- சென்னை கே.எம். நிஜாமுதீன், தொண்டர் அணி - திருச்சி ஜி.எம். ஹாஷிம், மருத்துவர் அணி - கோட்டக்குப்பம் டாக்டர் இக்பால் பாஷா, கொள்ளிடம் ரஷீத் ஜான், முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் இஸ்மாயில், வர்த்தகர் அணி - விழுப் புரம் கே.எம். ஷேக் தாவ+து, ரயில்வே தொழிற்சங்கம் - அப்சல். துணை அமைப்பாளர்கள் விவசாய அணி திருச்சி வி.எம். பாரூக், சிராஜுல் மில்லத் பேரவை துணை அமைப் பாளர் கண்ண மங்கலம் கவிஞர் ஹ{சைன் தாசன், கல்வி மேம்பாட்டு அணி - கவிஞர் ஏ. ஷேக் மதார், மாணவர் பேரவை ஏ.டபிள்ய+. காதர் ஷெரீப், மற்றும் அமீரக காயிதெ மில்லத் பேரவை பொதுச் செயலாளர் குத்தாலம் எம். லியாகத் அலிகான், ஹபீ புர் ரஹ்மான், கோவை அல்ஹாஜ் எல். எம். அப்துல் ஜலீல், சென்னை ஏ.எச். இஸ்மா யில், ப+வை எம். எஸ். முஸ்தபா, நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர், திண்டுக் கல் அல்தாப் உசைன், புதுப் பேட்டை கே.எஸ். முஹம் மது ஆரிப், ரப்பானி அப்துல் குத்தூஸ், காஞ்சி புரம் கே.எம். அப்துல்லா பாஷா, வேலூர் ரஹமத் துல்லாகான். நிறைவாக நாடாளு மன்ற உறுப்பினர் எம்.அப் துர் ரஹ்மான் நன்றி கூறினார்.

Tags: முஸ்லிம் லீக்

Share this