Breaking News

சவூதியில் தவிக்கும் இந்திய தொழிலாளர்களை மீட்க வேண்டும்: கனிமொழி

நிர்வாகி
0
சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் தவிக்கும் 400 இந்தியத் தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கோரிக்கை விடுத்தார்.
மாநிலங்களவையில் இது குறித்து அவர் பேசியது:
சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் 400 இந்தியத் தொழிலாளர்கள் வேலையின்றி மோசமான நிலையில் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜெட்டாவுக்கு வேலைக்குச் சென்ற அவர்கள் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு சரியான சம்பளம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
400 இந்தியத் தொழிலாளர்களும் நாடு திரும்ப சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"இந்தியத் தொழிலாளர் நல நிதி' மூலம் அவர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கனிமொழி.
கனிமொழியின் இந்தக் கோரிக்கையை பி.ஜே. குரியன் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் ஆதரித்தனர்.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, ""இப் பிரச்னை குறித்து சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Tags: கனிமொழி கோரிக்கை

Share this