சென்னை-அவசரமாய் தரையிறங்கிய ஷார்ஜா விமானம்
நிர்வாகி
0

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை ஏர் அரேபியா ஏர்வேஸ் விமானம் 128 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்டது. விமானம் பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதி கோரினார் விமானி.இதைத் தொடர்ந்து அந்த விமானம் 9.30 மணிக்கு பத்திரமாகத் தரையிறங்கியது.விமானத்தில் இருந்த 128 பயணிகளும் இறக்கப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.