Breaking News

சூரிய, சந்திர‌ கிரகண தொழுகைகள்:

நிர்வாகி
0
இந்தியாவில் சூரிய கிரஹண நேரம் காலை J5:31 - 7:25 )

விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன!
அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்ர்றான்

இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (7:54)

இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. (21:33)

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:05)

நபியவர்களது காலத்தில் (அவர்களது மகனான) இப்றாஹீம் மரணித்த தினத்தன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களெல்லாம் அது இப்றாஹீமின் மரணத்தினாலே ஏற்பட்பது என்று பேசிக்கொண்டனர். (இதனைக்கேட்ட) நபி(ஸல்) அவர்கள் சூரியனும் சந்திரனும் யாருடைய இறப்பிற்கும் மறைவது கிடையாது நீங்கள்(அதனைக்) கண்டால் தொழுங்கள் மேலும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை புரியுங்கள் எனக் கூறினார்கள் (புஹாரி)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து ‘முஹம்மதின் சமுதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள். புஹாரி: 1044 ஆயிஷா (ரலி)

சூரிய கிரகண தொழுகை:

கிரஹண சமயத்தில் 2 ரக்அத் நஃபில் தொழுவது சுன்னத். இதற்கு ஸலாத்துல் குஷூஃப் என்று சொல்லப்படும். இந்த தொழுகையை பாங்கு, இகாமத் இல்லாமல் ஜமாஅத்தோடு தொழ வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது:

அதிகமாக துஆ செய்வது
பாவங்களைநினைத்து, வருந்தி,
அஞ்சுவதுசுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று அதிகமாக ஓதுவதுஇஸ்திஃக்ஃபார் அதிகமாக செய்வதுதர்மம் செய்வதுசந்திர கிரஹண தொழுகை:சந்திர கிரஹண நேரத்தில் 2 ரகஅத் நஃபில் (ஸலாத்துல் ஃகுஷூஃப்)
தொழுவது சுன்னத்தாகும். இந்த தொழுகை ஜமாஅத் இல்லாமல் தனித்தனியாக தொழவேண்டும்.
சூரிய கிரகணம் பற்றிய‌ முழு விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
http://www.shadowandsubstance.com/

Tags: கிரகணம் தொழுகை

Share this