Breaking News

வீராணம் ஏரி நீர் மட்டம் 10.6 அடியாக உயர்வு

நிர்வாகி
0
காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதை அடுத்து சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.சென்னை மக்களின் குடிநீர் தேவைகளை போக்கும் முக்கிய ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. இந்த ஏரியில் இருந்து சென்னை மாநகருக்கு தினமும் சுமார் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் விடப்படுகிறது.

ஆனால், சமீபகலாமாக நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வரண்டுவிட்டது. இதனால் சென்னையின் குடிநீர் பிரச்சனைகளை சமாளிக்க அருகிலிருக்கும் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டது. இதிலிருந்து தினமும் 25 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைத்தது.

இதனால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் விடப்பட்டது. ஆனால், நிலம் வறண்டு இருந்ததால் தண்ணீர் விரைவாக வந்து சேரவில்லை. இதையடுத்து கீழ் அணையில் இருந்து காவிரி நீர் திறந்துவிடப்பட்டது.

கீழ் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,600 கன அடி என்ற அளவில் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டமாக வேகமாக உயர்ந்து வருகிறது.

நீர் வரத்து தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் அணையின் மொத்த அளவான 15.6 அடியை எட்டிவிடும் என தெரிகிறது. இன்று காலை அணையின் நீர் மட்டம் 10.6 அடியாக இருந்தது. இதையடுத்து தற்போது அணையிலிருந்து வினாடிக்கு 18 கன அடி வீதம் சென்னைக்கு குடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இன்று காலையில் வீராணம் ஏரியில் 425,
புழல் ஏரியில் 1923,
பூண்டியில் 262,
செம்பரம்பாக்கத்தில் 805,
சோழவரம் ஏரியில் 165 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags: லால்பேட்டை வீராணம்

Share this