Breaking News

வீராணம் ஏரியிலிருந்து ஆகஸ்ட் 17-ல் தண்ணீர் திறப்பு

நிர்வாகி
0
லால்பேட்டை வீராணம் ஏரியிலிருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா விவசாயப் பாசனத்துக்கு ஆகஸ்ட் 17-ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் தெரிவித்தார்.
கீழணையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வடவாறு மூலமாக ஏரிக்கு 500 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரி நிரம்பி வருகிறது.
ஏரி நிரம்ப 10 தினங்கள் ஆகும் என்பதால் ஆகஸ்ட் 17-ம் தேதி வேளாண் பாசனத்துக்கு நீர் திறந்து விடுவதற்கான ஆயத்தப் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Tags: லால்பேட்டை வீராணம்

Share this