Breaking News

பண்டாரவாடையில் தமுமுகவின் 71வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

நிர்வாகி
0
தஞ்சை (வ) மாவட்டம் பண்டார வாடையில் தமுமுவின் 71வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஆம்புலன்ஸை அர்ப்பணித்து தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் சிறப்புரை யாற்றினார். மமக துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் தமுமுக மாநிலச் செயலாளர் ஹாஜாகனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் முஹம்மது செல்லப்பா தலைமை தாங்கினார். பாபநாசம் ஒன்றியச் செயலாளர் முஹம்மது ச­ம் வரவேற்புரையாற்றினார்.
பாபநாசம் சட்டமன்ற பேரவை உறுப்பினர் இரா. துரைக்கண்ணு, மாவட்டச் செயலாளர் ஹமீது சுல்தான், முன்னாள் மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆம்புலன்ஸ் சாவியை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஹம்மது யாசிர் பெற்றுக் கொண்டார்.
இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக் கூட்டத்தில் மழை பெய்தாலும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொது மக்கள் கலைந்து செல்லாமல் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Tags: ஆம்புலன்ஸ் தமுமுக

Share this