டெல்லியில் முஸ்லிம் பெண்களுக்கு அரசு பயிற்சி திட்டம்
J.நூருல்அமீன்
0
புதுடெல்லி:முஸ்லிம் மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் விதமாக மதரஸாக்களை மையமாக்கொண்ட பயிற்சிதிட்டத்தை டெல்லி மாநில அரசு விரைவில் துவங்கும்.
அரசு சாரா அமைப்புகளின் உதவியோடு 260 மதரஸாக்களை மையமாக்கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.ஸ்கில் டெவலப்மென்ட் மிஷனின் கீழ் இது நடைபெறும்.
இது சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறினார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.கல்வி,தொழில் நுட்ப இயக்குனரகம்,மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் இன்ஸ்டியூட் ஆஃப் ஓபன் ஸ்கூல் உதவியோடு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
முஸ்லிம் பெண்களுடன் அநாதை பெண்களையும் இதில் உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.தொழில் நுட்பத்தில் திறமையுடையவர்களாக ஆக்குவதே இதன் நோக்கம்.

Tags: பயிற்சி