Breaking News

அரசியல் மேதைகளாலும் ஆன்மீகத் தலைவர்களாலும் போற்றப்பட்ட ஷங்கை மிகு செய்யத் ஷிஹாப் தங்ஙள் தங்கமான தங்ஙள்

J.நூருல்அமீன்
0
தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் களில் ஒருவரும் கேரள மாநில முஸ்லிம் லீக்கின் தனிப் பெரும் தலைவருமான ஷங்கைமிகு செய்யிதுனா ஷிஹாப் தங்ஙள் அவர்கள் மறைந்த செய்தியை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும் தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் எனக்கு அலைப்பேசியில் தெரிவித்தார்கள். இச்செய்தி எனக்கு கவலையை தந்தது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தில்மறைந்த ஷிஹாப் தங்ஙள் அவர்கள் செய்த சேவை மிக மகத்தானதாகும். அரசியல் மேதையாகவும், ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்து, தக்வாவின் தென்றல் தங்கமான தங்ஙள் அவர்களின் மறைவு இஸ்லாமிய சமுதாயத்துக்கும் தாய்ச் சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும்
நம் நாட்டு அரசியல் தலைவர்களாலும், மார்க்க மேதை களாலும் போற்றப்பட்ட தங்ஙள் அவர்களின் தியாகமிகு சேவையால்சமுதாயம் சிறப்பான நன்மைகளைப் பெற்றது.
சமுதாயத்தை நோக்கி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் புனித ஸ்தாபனத்தை நோக்கி தேவையற்ற சர்ச்சை களையும், சோதனைகளையும் சிலர் உருவாக்கிய காலக் கட்டத்தில் அவைகளையெல்லாம் தனது அன்பான அழகு மிகு பஷாரத் எனும் இன்முகத்துடனும் துஆவுடன் எதிர் நோக்கி வெற்றியைத் தேடித்தந்த மார்க்க மேதை தங்கள் அவர்களாகும்.
நம் நாட்டு தலைவர்களாலும், உலகத் தலைவர்களா லும் பெரிதும் மதிக்கப்பட்ட ஷிஹாப் தங்ஙள் அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பொன்விழா மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி தங்ஙள் அவர்கள் ஆன்மீக ஒளியும், அரசியல் தெளிவும் மிக்க அவர்களின் உரையைக் கேட்டு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரும் நெஞ் சம் நெகிழ பாராட்டி மகிழ்ந்த நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
1993ம் ஆண்டில் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களுடன் நானும் புனித ரமளானில் உம்ராவுக்கு சென்றிருந்த போது புனித மக்காவில் கஃபத்துல்லா ஷரீபில் ஷங்கை மிகு ஷிஹாப் தங்கள் அவர்களை சந்தித்த போது. இரு தலைவர்களும் சமுதாயத் தைப் பற்றியும், நாட்டு மக்களின் நன்மையைப் பற்றியும், சமுதாய ஒற்றுமையைப் பற்றியும் ஒருவருக்கொருவர் அன்புடனும் அக மகிழ்வுடனும் பேசிக்கொண்டிருந்த இந்நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை.
காயிதே மில்லத் அவர்களின் நூற்றாண்டு விழாவை யொட்டி 1995ம் ஆண்டில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயற்குப முஜாஹிதே மில்லத் பனாத் வாலா சாஹிப் தலைமையில் நடைபெற்றபோது அக் கூட்டத்தில் பங்கேற்று தங்ஙள் அவர்கள் நிகழ்த்திய உரை இன்னும் நமது நெஞ்சை நெகிழவைக்கிறது.
2004ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் துறைமுகப் பகுதியில் காயிதே மில்லத் மன்ஜில் என்ற பெயரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு மகத்தான மாபெரும் கட்டிடத்தை அமைத்து கொடுத்த தமிழகத் தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை பெரிதும் பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், தமிழக நிர்வாகிகளை முன்னோடிகளை பாராட்டி துஆச் செய்த காட்சியும் அதேக் கூட்டத்தில் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக போட்டியிட்ட தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றி வாகைச் சூடுவார் என்று கேரள மாநில முஸ்லிம் லீக்கின் தலைவர்களுடனும் முன் னோடிகளுடனும் சென்னைக்கு வந்து மனமாற வாழ்த்தி துஆச் செய்ததை சுட்டிக் காட்டுவதில் மகிழ்கிறேன். நம்முடைய பெருந் தலைவர் முஜாஹிதே மில்லத் பனாத் வாலா சாஹிப் மறைந்த நேரத்தில் கேரளத்தின் பாலக்காட்டில் ஷிஹாப் தங்கள் இல்லத்தில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. அவர்களுடன் சென்றிருந்தேன்.
அக்கூட்டத்தில் தேசியத் தலைவர் மத்திய அமைச்சர் இ.அஹ்மது, கேரளப் பொதுச் செயலாளர் குஞ்சாலி குட்டி, இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் இ.டி.பஷீர், முனீர் கோயா மற்றும் கேரள தலைவர்களும், தேசிய தலை வர்களும் பங்கேற்ற கூட்டத்தில் நம்முடைய தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. அவர்களின் சேவையைப் பற்றி ஷிஹாப் தங்ஙள் அவர்கள் மகிழ்வுடன் சொல்லிக் காட் டிய நிகழ்ச்சி மகிழ்ச்சியான நிகழ்ச்சி.
நம் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் கய்ய+ம் அவர்களையும் அவர்கள் அரசையும் அங்குள்ள கடல் கொள்ளையர்கள் சூழ்ச்சிக் காரர்களைப் பற்றி அந்நாட்டு அதிபரை சிறைப் பிடிக்க திட்ட மிட்டு புரட்சி செய்த காலத்தில் மாலத்தீவு அதிபரின் நண்பரான ஷிஹாப் தங்ஙள் அவர்களுக்கு இச்செய்தியை அதிபர் கைய்ய+ம் தெரியப்படுத்தினார்.
அன்றைய நம் நாட்டு பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஷிஹாப் தங்ஙள் அவர்கள் தொடர்பு கொண்டு நட வடிக்கை எடுத்து காப்பாற்றி கொடுத்த சிறப்பு ஷிஹாப் தங்ஙள் அவர்களைச் சார்ந்ததாகும்.
உலகத் தலைவர்களாலும், அரசியல் மேதைகளாலும், ஆன்மீக தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஷிஹாப் தங்ஙள் அவர்களின் கப்ரை கருணையுள்ள ரஹ்மான் பிரகாசமாக்கிவைப்பானாக.
அன்னாரின் மறைவால் வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் முஸ்லிம் லீக்கினர்களுக்கும் ஹஸப்ரே ஜமீலை அல்லாஹ் வழங்குவானாக.

Tags: முஸ்லிம் லீக்

Share this