Breaking News

பரங்கிப்பேட்டையில் சுனாமி பீதி

J.நூருல்அமீன்
0
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடலோரப் பகுதி கிராமங்களில் செவ்வாய்க்கிழமை சுனாமி முன்னெச்சரிக்கையால் அப் பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகில் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையொட்டி மத்திய அரசால் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுனாமி முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையொட்டி சிதம்பரத்தை அடுத்த கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதியில் பில்லுமேடு, எம்ஜிஆர்திட்டு உள்ளிட்டப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊதப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் கடலோரப் பகுதியில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லப்பட்டதாக கிள்ளை பேரூராட்சி தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார். பின்னர்சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதால் கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகள் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பின.

Tags: எச்சரிக்கை சுனாமி

Share this