Breaking News

ஒண்ணுமில்லை… பக்தி கொஞ்சம் ‘முத்திடுச்சி’!

நிர்வாகி
0
ரசிகர்களின் பக்தி முற்றினால் நடிகைகளுக்கு கோயில் கட்டுவார்கள்… அதுவே சாமியார்கள் என்றால் அதே நடிகைகளை ஆஸ்ரமத்துக்கு அல்லது கோயிலுக்கு வரவழைத்து ஆசி வழங்குவார்கள். சன்னியாசத்தை விளம்பரமாக்காத சாமியார்கள் இதில் சேர்த்தியில்லை!

சில தினங்களுக்கு முன் ஸ்ரீராமச்சந்திரபுரா மடத்தின் 36வது பீடாதிபதியான சங்கராச்சாரி ஸ்ரீ ராகவேஸ்வர பாரதி சுவாமி என்பவர் பிரபல இந்தி நடிகை மல்லியகா ஷெராவத்தை தமது மடத்துக்கு வரவழைத்து அவரது கையால் ஹனுமான் பூஜையைத் தொடங்கி வைக்கச் சொல்லி சந்தோஷப்பட்டார்
ஒரு சங்கராச்சாரி, அதுவும் அனுமன் பூஜையைகவர்ச்சி நடிகையை வைத்துத் துவங்குவதா என பரபரப்பு எழுந்தது அப்போது.
இப்போது இன்னொரு சாமியார் (பூசாரி?) ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள பொவாய் நாக தேவதை ஆலயத்துக்கு நாக பஞ்சமிக்காக சென்ற ஷில்பா ஷெட்டிக்கு ராஜ மரியாதை தந்த அந்த பூசாரி, அவரை தொட்டு உச்சி முகர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டு தன் பக்தி மற்றும் ஷில்பாவுக்கான ஆசீர்வாதத்தை உலகுக்குத் தெரிவித்தார். அந்தப் படங்கள் :


















Share this