Breaking News

கேள்விக்குறியாகும் மக்தப் கல்விமுறை...!

நிர்வாகி
0

  தமிழகத்தின் முக்கிய உலமாக்களில் ஒருவரான மெளலானா சதீதுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள் தமிழகத்தில் நடந்துவரும் எல்லா  மக்தப் பாடத்திட்டங்களும் ''ஃபெயிலியர் '' என வருத்தத்துடன் பேசினார்.. 


பல ஆண்டுகளாகவே முஸ்லிம் மாணவர்களின் மக்தப் விவகாரம் விடைதெரியாத கேள்விக்குறியாகவே தொடர்கிறது...


ஒருகாலத்தில் மக்தப் என்றழைக்கப்படும் மத்ரஸா மாணவர்களுக்கு இஸ்லாமிய கல்வி கற்க போதுமான நேரம் இருந்தது...அன்று குறைந்த பட்சமாக குர்ஆனை பார்த்து ஓதும் அளவிற்கு மக்தப்கள் நடந்தது.. அதை தாண்டி அதற்கு தேவையான கல்விமுறை,வசதி,நவீணமயமாக்கல் இல்லாமல் இருந்தது.. அப்போது மக்தப் மத்ரஸாவில் படித்த மாணவர்களுக்கு எவ்வாறான கல்வி கற்பிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.. குறிப்பாக தஜ்வீத் என்ற உச்சரிப்பு முறை அறவே இல்லாமல் இருந்தது... கொஞ்சம் ஓப்பனாக பேச வேண்டும் என்றால்  இமாமாக பணியாற்றிய  பலர்  தஜ்வீத் முறை தெரியாதவர்களாக இருந்தனர்... 


காலம் காலமாக ஒரு சரியான பாடத்திட்டம், திட்டமிட்ட கல்விமுறை  தேவை, என்ற  கோரிக்கை மக்தப் உலமாக்களிடமிருந்து வந்துகொண்டே இருந்தது....ஆனால் அதற்கான தீர்வை தேடி பயணிக்க யாரும் தயாராகவில்லை..


கடந்த காலங்களில் சில உலமாக்கள் அதற்கான சில முயற்சிகளை முன்னெடுத்தனர். ஆனால் அது ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே செயல்படுத்த முடிந்தது... இதில் சில இயக்கங்களும் அடங்கும்... 


பொதுவாக பிற மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் மக்தப் பாடத்திட்டங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக பள்ளிவாசல் நிர்வாகிகளும் தங்களால் முடிந்த அளவு உதவியாக இருக்கின்றனர். சிறிய பள்ளிகளில் கூட இரண்டு மூன்று பகுதிநேர இமாம்கள் மக்தப் பாடம் நடத்துவார்கள்... பருவவயதை அடைந்த பெண்களுக்கு  தனியாக மக்தப்கள் பள்ளியிலேயே இன்றளவும் நடக்கிறது. 

காலை,மாலை இரண்டு வேளை  மாணவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் போதுமான அளவு அவர்களுக்கு இஸ்லாமிய கல்வியை போதிக்கிறார்கள்..நல்ல ரிஸல்டும் கிடைக்கிறது... 


தமிழகத்தில் பள்ளிவாசல்களின் நிலை என்ன என்பது அனைவரும் அறிந்ததே....!  ஒரு இமாமுக்கு சம்பளம்  கொடுக்கவே திண்டாட்டம் என்ற  நிலைதான்  இன்றளவும் தொடர்கிறது..... வசதிபடைத்த பள்ளிகளிகளின் நிலைமையும் இதுதான்.. கொஞ்சம் வசதியான பள்ளியாக இருந்தால் தலைமை இமாம் மக்தப் நடத்தமாட்டார்  (அது தனி சப்ஜெக்ட்)


இப்படி இருக்கும் சமூகத்தில் யார் மக்தப் பாடம் பற்றியோ..!  ஆசியர் பற்றாக்குறை பற்றியோ...! பாடத்திட்டம் பற்றியோ..! 

மக்தப் மாணவர்களின் எதிர்காலம் பற்றியோ கவலைப்படப் போகிறார்கள்....? 


இப்படி இருக்கும் சூழலில் இன்று மக்தப் மாணவர்களுக்கு பல பாடத்திட்டங்கள் வந்துவிட்டது.. ஆன்லைன் கல்விமுறை வந்துவிட்டது, .வாட்சாப் வகுப்புகள், அப்ளிகேஷன்கள்  என நிறைய வந்துவிட்டது...


ஆனால் அதை படிக்க  தேவையான நேரம் இன்றைய மாணவர்களிடத்தில் இல்லை..

பள்ளி,ஸ்டுஷன்,ஆக்டிவிடி என லீவு நாளில் கூட மாணவர்கள் ஃபிரியாக இல்லை. 


வசதியுள்ளவர்கள் இஸ்லாமிய பள்ளிகள். (இஸ்லாமிய பள்ளிகள் என்றாலே ஹைகிளாஸ் தான்), தனி உலமாக்கள் , அல்லது விடுமுறை கால வகுப்புகள், என தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான கல்வியை கற்றுத்தர  முயற்சிக்கிறார்கள். 

அதுவும் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே.. 


பெரும்பாலான முஸ்லிம்களின் குழந்தைகள் மக்தப் மத்ரஸா  செல்வது ஒரு சடங்கு போல ஆகிவிட்டது... காலையில் சிறிதுநேரம் நமது பிள்ளை  மத்ரஸாவிற்கு சென்றால் போதும்.என்ற நிலையில்தான் பெற்றோர்களும் உள்ளனர்... என்ன ஓதினார்..?  எப்படி ஓதுகிறார்..?  என்ற எந்த எதிர்பார்ப்பும் இன்றைய பெற்றோரிடம் இல்லை (அதற்கு காரணம் முந்தைய தலைமுறைக்கு இஸ்லாமிய கல்வியை கற்பிக்காததன் விளைவு) அதுவும் ஒரு குறிப்பிட்ட வயதுவரை மட்டுமே மாணவர்கள் மத்ரஸா செல்கிறார்கள்..  பத்தாம் வகுப்பு வந்துவிட்டால் முதலில் அவர்கள் முழுக்கு போடுவது மத்ரஸாவைதான்...


ஒரு காலத்தில் திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது, பெண்ணுக்கு குர்ஆன் ஓத தெரியுமா?  என கேட்பது வழக்கமாக இருந்தது... இன்று அதைக்கூட யாரும் கேட்பதாக தெரியவில்லை...


இன்றைய மாணவர்களுக்கு நேரமின்மை. ஆசியர் பற்றாக்குறை, நிர்வாக ஒத்துழைப்பின்மை, இமாகளுக்கு சம்பள பிரச்சனை என மக்தப் மத்ரஸாக்கள் சடங்கு சம்பிரதாயம் போலவே இன்றுவரை நடந்துவருகிறது... இப்படி கடமைக்கு மக்தப் மத்ரஸா நடக்கும் ஒரு சமூகத்தில்.. எப்படி குட் ரிஸல்டை எதிர்பார்க்க முடியும்....? 


போதாகுறைக்கு ஒவ்வொரு ஊரிலும் பல பிரிவுகள்,இயக்க,அரசியல்,அகீதா,கொள்கை ,வஹாபி,கபரு வணங்கி  சண்டை வேறு..... 


பாடத்திட்டம் என்பது ஒரு குறைந்தபட்ச திட்டமிடல் ஒரு பாடத்திட்டத்தால் எதுவும் மாறிவிடாது.. 


ஒரே பள்ளியில், ஒரே பாடத்திட்டத்தின் கீழ் படித்த எல்லோரும் பாஸ் மார்க் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது... பத்தாம் வகுப்பு வரை ஆங்கில மீடியம் படித்த ஆங்கிலம் தெரியாத மாணவர் இன்றளவும் நம்முடன் உண்டு. 


ஒவ்வொறு இமாக்களும் தனிப்பட்ட முறையில் மக்தப்  மத்ரஸாக்கள் மீது கவனம் செலுத்தி ஒவ்வொறு மாணவனின் நேரமும் அமானிதம் என்ற சிந்தனையில்  மாணவர்களுக்கு கற்பித்தால் மட்டுமே அடுத்த தலைமுறையை இஸ்லாமிய கல்வியுடைய சமுதாயமாக உருவாக்க முடியும்...  குட் ரிஸல்டை எதிர்பார்க்க முடியும்.

Tags: சமுதாய செய்திகள்

Share this