மலேசியாவில், பொது இடத்தில், மது அருந்திய முஸ்லிம் பெண்ணிற்கு விதிக்கப்பட்ட கசையடி தண்டனை, புனித ரமலான் மாதம் முடிவடையும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகி
0
கோலாலம்பூர் : மலேசியாவில், பொது இடத்தில், மது அருந்திய முஸ்லிம் பெண்ணிற்கு விதிக்கப்பட்ட கசையடி தண்டனை, புனித ரமலான் மாதம் முடிவடையும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவை சேர்ந்த முஸ்லிம் பெண் கார்த்திகா சரி தேவி சுகர்னோ(32). இவர், பகுதி நேர மாடலாக பணியாற்றுகிறார். இவர், கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓட்டல் ஒன்றில் மது அருந்தினார். இதற்காக, இவருக்கு ஆறு கசையடிகள் கொடுக் குமாறு, தண்டனை விதிக்கப்பட்டது. மலேசியா நாட்டு சட்டப்படி, முஸ்லிம்கள் மது அருந்துவது தவறானது. மது அருந்தும் முஸ்லிம்களுக்கு, அந்நாட்டில், அபராதம், மூன்றாண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆறு கசையடிகள் விதிக்கப்படும்.எனவே,பொது இடத்தில் மது அருந்திய கார்த்திகாவிற்கு, கசையடி வழங்க உத்தரவிடப்பட்டது. தண்டனையை நிறைவேற்ற, நேற்று அவர் பகாங் மாகாணத்தில் உள்ள சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வழியில், அவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கவே, கார்த்திகாவை மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டனர்.இது ரமலான் மாதம் என்பதால், தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பகாங் மாகாண நிர்வாக கவுன்சிலர் முகமது சப்ரி அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
கார்த்திகா கூறுகையில்,"என்னை இவ்வாறு அலைச்சல் படுத்தாமல், எனது உண்மையான நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்' என்றார்.