சுதந்திர இந்தியாவை பாதுகாக்க வீரமிகு காலடிகளுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சுதந்திரதின அணிவகுப்பு
நிர்வாகி
0
கும்பக்கோணம்
போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும்,அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுவரும் மக்களுக்கு விடுதலையை பெற்றுதரவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெஞ்சுறுதியுடன் நடத்திய சுதந்திர தின அணிவகுப்பு தென்னிந்திய வரலாற்றில் மறைக்கமுடியாத பக்கங்களாக மாறியது.
தமிழகத்தில் பாசிச சில்லறைக்கும்பல்களுக்கு அடிபணிந்து காவல்துறை நடத்திய கெடுபிடிகளைக்கடந்து கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு ஆகஸ்ட் 15 ஆம் நாள் மதியம் சரியாக 3 மணிக்கு துவங்கியது.
சுதந்திரத்தின் பாதுகாவலர்களாவோம் என்ற கோஷத்துடன் இந்திய தேசத்தின் வீரமிகு வரலாற்றிற்கு சொந்தக்காரர்களான கொள்கையுறுதிக்கொண்ட வீரர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் கம்பீரமாக அடியெடுத்துச்சென்ற காட்சி பார்வையாளர்களின் கண்களில் பரவசமூட்டியது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.தொடர்ந்து அவர் சுதந்திர தின உறுதிமொழியை கூற பொதுமக்கள் அதனை திரும்பக்கூறினர்.
நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்பட்டார்கள்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் சிறப்புரையாற்றினார்.நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் டி.ஜெ.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி,முன்னாள் எம்.எல்.எ நிஜாமுத்தீன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.எ ரவிக்குமார்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ்நாடு துணைத்தலைவர் இஸ்மாயீல்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய பொருளாளர் மெளலவி ஷேஹ் முஹம்மது தெஹ்லான் பாகவி,சோசியல் டெமோக்ரேடிக் கட்சி கேரள மாநிலத்தலைவர் வழக்கறிஞர் கெ.எம்.ஷெரீஃப் ஆகியோர் உரையாற்றினர்.பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக பொதுச்செயலாளர் பக்ருதீன் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் சித்தீக் நன்றி கூறினார்.தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
கண்ணூர்

கேரள மாநிலம் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராணுவ மிடுக்கில் அணிவகுத்து செல்ல டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மைதானத்தில் பொதுக்கூட்டத்துடன் நிறைவுற்றது.அணிவகுப்பு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சரியாக காலை 10.30 மணியளவில் தொடங்கியது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது கேடர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இந்திய தேசியக்கொடியை ஏந்தியவாறு ஆஃபீஸர்ஸ் முன்னணியில் செல்ல பின்னால் ராணுவ கட்டுப்பாட்டுடன் கூடிய மரியாதையுடன் கேடர்கள் அணிவகுத்துச்சென்றனர்.மொத்தம் 40 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் 33 கேடர்கள் பங்கேற்றனர்.ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுப்பைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர்.அவர்கள் ஹிந்துத்துவா பாசிசத்திற்கெதிராகவும்,ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.சுதந்திர தின அணிவகுப்பின் இறுதியாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தை சோஷியல் டெமோக்ரேடிக் கட்சியின் தேசியத்தலைவர் ஈ.அபூபக்கர் சாஹிப் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில்,"கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி புரிந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.சங்க்பரிவாரை காட்டி முஸ்லிம்களை வெறும் ஓட்டுவங்கிகளாக பயன்படுத்தி வருகின்றார்கள்" என்று குறிப்பிட்டார்.பாப்புலர் ஃப்ரண்டின் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல்ஹமீது சுதந்திரதின உறுதிமொழியைக்கூறினார்.அம்பேத்கார் சமாஜ் கட்சியின் தலைவர் தேஜ் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் ஓ.எம்.எ ஸலாம் உள்ளிட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமோக்ரேடிக் கட்சி ஆகியவற்றின் மாநில பொறுப்பாளர்களும் இதில் கலந்துக்கொண்டனர்.
நமதுசெய்தியாளர்மேலும் கும்பகோணத்தில் நட ந்த அணிவகுப்பின் புகைப்படங்கள் இங்கே...

Tags: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா