Breaking News

காட்டுமன்னார்கோவில் அருகே மாணவர்கள் மயக்கம் தாசில்தார் விசாரணை

நிர்வாகி
0
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூர் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது. காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூரில் நடுநிலைப்பள்ளி உள்ளது. 210 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி ஆரம்பித்துடன் 7ம் வகுப்பு மாணவி செல்லக¢கண்ணுக்கு தலைவலி, மயக¢கம் ஏற்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து மாணவிகள் இளவரசி, சௌமியா, ஷர்மிளா, ஐஸ்வரியா, அகல்யா, சந்திரா, கௌசல்யா ஆகியோருக¢கு தலைவலி, மயக¢ கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. பெரும்பாலான மாணவர்கள், தங்களுக்கு மயக்கம் வருவ தாக ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர்.
இந்த தகவல் அருகில் உள்ள கிராம மக்களுக்கு காட்டுத்தீப் போல பரவி யது. உடனே பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் மக்கள் திரண்ட னர். ஒருசிலர் கதறி அழுதப்படியே பள்ளிக்கு வந் தனர். இதுகுறித்து எள் ளேரி டாக்டருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவர்களை டாக்டர் குண பாலன் பரிசோதித்தார். காட்டுமன்னார்கோவில் தாசில்தார் (பொ) ராமசந்திரன், வரு வாய் ஆய் வாளர் வசந்தி சம்பவத்துக்கு இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் பள்ளி அரு கில் உள்ள கடையில் சாக¢ லெட் வாங்கி மாணவி செல்லகண்ணு சாப்பிட்டுள்ளார். அதனை தனது நண்பர்களுக்கும் கொடுத்துள்ளார். காலவதியான சாக்லெட்டை சாப்பிட்டதால் தலைவலி, மயக¢கம் ஏற்பட்டிருக்கலாம் அல் லது ஊருக்கு வந்த புதிய தண்ணீரில் குளித்ததால் தலைவலி ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள் ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். மாணவர்களுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்ட தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Share this