Breaking News

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவை இஸ்லாமிய சிறைவாசி 9 பேர் இன்று விடுதலையானார்கள்: சிறை வாசலில் உறவினர்கள் வரவேற்பு

நிர்வாகி
0
கோவை, செப். 15அண்ணா பிறந்த நாளை யொட்டி ஆண்டு தோறும் நன்னடத்தை விதிகளின் கீழ் கைதிகள் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு 10 பேரை விடுதலை செய்வதாக அரசு அறிவித்தது.
இவர்கள் அனைவரும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்கள். குண்டு வெடிப்பு வழக்கில் இவர்கள் 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். இவர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவு கோவை ஜெயிலுக்கு வந்தது. இதை தொடர்ந்து 10 பேரில் 9 பேர் இன்று காலை 7.15 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
யூசுப் என்கிற ஷாஜகான் என்பவருக்கு விடுதலை உத்தரவு வந்துள்ளது. அவருக்கு வேறு வழக்கில் தொடர்பு இருப்பதால் விடுதலை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட கைதிகள் விவரம் வருமாறு:
1. முகம்மது இப்ராகிம், 2. அப்துல் ரகீம், 3. அப்துல் பாரூக், 4. அப்பாஸ், 5. முகம்மது ரபீக், 6. அப்துல் ரவுப், 7. அஷ்ரப், 8. பத்ருதீன் அலிமுகம்மது, 9. சாகுல் அமீது. விடுதலையான 9 பேரின் தண்டனை அடுத்த மாதம் முடிவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கைதிகள் விடுவிக்கப்படும் தகவல் கிடைத்ததும் அவர்களின் உறவினர்கள் அதிகாலையிலேயே ஜெயில் முன் குவிந்து இருந்தனர். கைதிகள் வெளியில் வந்ததும் கட்டித்தழுவி மகிழ்ச்சி தெரிவித்தனர். சில கைதிகள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

விடுதலை குறித்து அஷ்ரப் கூறியதாவது:லி நாங்கள் ஒரு வாரத்தில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆகிவிடுவோம். ஆனால் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்தோம் என அரசு கண் துடைப்பு செய்கிறது. மேலும் 65 பேர் உள்ளே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டியது தானே. இவ்வாறு அவர் கூறினார்.
சாகுல் அமீது கூறியதா வது:விடுதலை ஆகி குடும்பத் தினரை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இன்னும் 10 நாளில் விடு தலை ஆக வேண்டிய எங்களை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்தோம் என்பது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் எங்களின் அமைப்பு விடுத்த கோரிக்கையின்படி யாரும் விடுதலை செய்யப் படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

படம்: கோவை தங்கப்பா







Tags: கோவை சிறை விடுதலை

Share this