Breaking News

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ் சிறப்புப் பேட்டி...!

நிர்வாகி
0
லால்பேட்டை,டிச,01
லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ் லால்பேட்டை இணையதளத்திற்க்காக சிறப்புப் பேட்டி அளித்தார்.

பதவியேற்று ஒரு சில மாதங்களே ஆனாலும் தான் செய்த, செய்யப் போகின்ற திட்டங்கள் குறித்து ஆர்வத்துடன் நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார். உலகெங்கும் பரவி வாழும் லால்பேட்டை மைந்தர்களின் பார்வைக்காகவும்,ஊரின் திட்டங்கள் என்ன என்பதை அனைவரும் அறிந்துக் கொள்வதர்க்காகவும் இதை வெளியிடுகிறோம்.

கேள்வி : நமது லால்பேட்டை பேரூராட்சிக்கு தற்போதைய புதிய திட்டங்கள் என்ன?

பதில் : ஒரு பேரூராட்சிக்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் அரசு ஒதுக்கும் நிதிகளை முறையாக ஊரின் வளர்ச்சிக்கு செலவிட முயற்ச்சி மேற் கொண்டுள்ளோம்,

இத்துடன் அல்ஜமா பைத்துல் மாலுடன் இணைந்து புதிய சாலை அமைக்கும் பணி நேற்றுடன் சிறப்பாக முடிவடைந்தது,

மழை நீர் சேகரிப்புத் திட்டத்தில் அல்ஹாஜ் அய்யுப் அவர்களுடன் இணைந்து பணிகள் துவங்க இருக்கின்றோம்

கேள்வி : லால்பேட்டையில் உள்ள சாலை வசதிகள் எந்த நிலையில் உள்ளன?

பதில் : கடந்த இருபது ஆண்டுகள் செய்யாத பணிகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது,

அனைத்துத் தெருக்களுக்கும் தார் சாலை வசதி,குறிப்பிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் திட்டமும் இருக்கிறது.

கேள்வி : இன்று வரை நமது ஊரில் உள்ள பல தெருக்களை அரசுப் பதிவில் காணமுடிவதில்லையே?

பதில் : நாம் நமது குடும்ப அட்டையை கூட முறையாக பதிவதில்லை இதில் தெருக்களின் பெயர்களை பதியவைப்பது என்று வரும் போது அதில் யாரும் அக்கறை காட்டவில்லை,

பலர் ஒன்று கூடி தெருக்களின் பெயரை தேர்வு செய்து விட்டு அப்படியே விட்டு விடுகிறார்கள் அத்தோடு முந்தைய பேரூராட்சி நிர்வாகமும் இதை கண்டு கொள்ள வில்லை.

ஒருவர் தலைவர் பதவிக்கு வந்து விட்டால் அதில் தொடர்ந்து நீடிக்க என்ன வழி என்று பார்க்கிரார்களே தவிர ஊரின் வளர்ச்சியில் அக்கறையோ குறிக்கோளோ இல்லாமல் இருந்து விட்டார்கள்.

இனி இப்படி ஒரு தவறு நிகழாமல் ஊரின் வளர்ச்சியே என் குறிக்கோளாக கொண்டு செயலாற்றுவேன்.

இன்றும் நமது ஊரில் ஒரு வீட்டில் நான்கு,ஐந்து குடும்பங்கள் சேர்ந்து வசிப்பதை காண்கிறோம் அந்த அவலங்களை நீக்க பல புறம்போக்கு நிலங்கள் உள்ளன,அவைகளை முறையாக கண்டறிந்திருக்கிறேன்.

ஊரில் நாற்பதாயிரத்திற்க்கு விற்க்க வேண்டிய நிலத்தின் மதிப்பு இன்று லட்சங்களை தாண்டி விற்க்கிறது,இதையும் முறை படுத்தி ஏழைகளுக்கு இலவச பட்டாக்களை பெற்று தருவதுதான் என் குறிக்கோள்.

கேள்வி : அரசின் இலவசத் திட்டங்கள் நம் ஊரை அடைந்திருக்கிறதா?

பதில் : இலவசத் தொலைக்காட்சி வழங்கும் விஷயத்தில் தகுதியுடையவர்களின் பட்டியலை நாம் தயார் செய்து அனுப்பி இருக்கின்றோம்

ஆனால் இலவச சமையல் எறிவாயு வழங்கும் விஷயத்தில் ஈ. ஓ. என்று சொல்லக்கூடிய மணியார் அறுநூற்றி ஐம்பது நபர் பயன் பெற வேண்டிய இடத்தில் வெறும் நூற்றி ஐம்பது நபருக்கு மட்டும் கணக்கு எடுத்து வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளார் இந்த விஷயத்தில் நான் தலையிட்டு நடந்த தவறை கண்டறிந்து அனைவருக்கும் கிடைக்க முழு மூச்சாக பாடுபடுவேன்.

கேள்வி : பேரூராட்சி நிர்வாகத்தில் மற்ற உருப்பினர்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

பதில் : எனக்கு அனைத்து உருப்பினர்களும் மிகுந்த ஒத்துழைப்பும்,அரிய ஆலோசனைகளையும் தருகிறார்கள்.

கேள்வி : தங்களிடம் வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுகிறீர்கள்?

பதில் :யாரையும் அதிக நேரங்கள் காக்க வைப்பதில்லை,அரசு பணிசார்ந்த அனைத்து தேவைகளுக்கும் எனது கையொப்பம் தேவை படும் பட்சத்தில் உடனடியாக அவர்களுக்கு செய்து தருகிறேன்,

நான் இல்லாத அசமயத்தில் அலுவலக அதிகாரிகள் தேவையறிந்து பணியாற்றவும் பணித்திருக்கிறேன்.

( பேட்டியின் போதே வரக்கூடிய சிலரின் பணிகளை அங்கேயே நிவற்த்தி செய்து அனுப்புகிறார் )

கேள்வி : லால்பேட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராகவும் பணியாற்றும் தாங்கள் அதைப் பற்றியும் சிலசெய்திகள்...?

பதில் : மிக நீண்ட காலமாக இந்த பொறுப்பில் நான் இருந்து வருகிறேன்,

இங்கு வசதியுள்ளவர்களும் ,வசதியற்றவர்களும் கல்வி பயின்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று.நீண்ட காலமாக பெண்களுக்கென்று தனிப் பிரிவு துவங்க வேண்டும் என்கிற ஆர்வமும் ஆசையும் இருக்கிறது இதற்க்கு அரசும் ஒரு கோடிக்கு மேல் பணம் தற தயாராக உள்ளது,

ஆனால் மூன்று ஏக்கர் நிலம் தேவை படுகிறது.-இந்த மூன்று ஏக்கர் நிலத்தையும் நமது மதரஸா காட்டும் பட்சத்தில் இதையும் நிறைவேற்ற முடியும்.

இப்பள்ளியில் கல்வி பயிலும் மாணாக்கர்களில் நூற்றில் என்பது சதவிகிதம் நமது பிள்ளைகள் படித்து பயன் பெறுகிறார்கள்.

இங்கு எந்த பிரச்சினை ஏற்ப்பட்டாலும் அடுத்த சில நிமிடங்களில் அங்கு சென்று நிலமையை கட்டுப்படுத்தி வருகிறேன்.

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அலைப் பேசி அழைப்பு வருகிறது பள்ளிக் கூடம் நோக்கி விரைகிறார் கூடவே நம்மையும் அழைத்துச் செல்கிறார்,அங்கு நிகழ்ந்த நிகழ இருந்த பெரிய பிரச்சினையை சுலபமாக தீர்த்து வைத்து புன்னகையோடு விடை கொடுத்தனுப்பினார்.
பேட்டி : இப்னு ஷஃபீக்.
படங்கள் : அபூ ஆதில்
நன்றி :லால்பேட்டை .காம்

Tags: பேரூராட்சி லால்பேட்டை

Share this