Breaking News

வீராணம் ஏரியில் குறைந்து வரும் நீர்மட்டம்: விவசாயிகள் கவலை

நிர்வாகி
0

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சம்பா சாகுபடிக்கு நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள டெல்டா பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.5 அடியாகும். ஆனால், ஏரியில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 41.30 அடிதான் உள்ளது. சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 60 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. பாசனத்துக்கு 330 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆனால், ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக 200 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. போதிய மழை இல்லாததாலும், கீழணையிலிருந்து குறைவான நீர் ஏரிக்கு அனுப்பப்படுவதாலும் ஏரியின் நீர்மட்டம் விரைவாக குறைந்து வருகிறது.

Tags: லால்பேட்டை வீராணம்

Share this