புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை தமிழ்நாட்டில் மறுபதிவு செய்யாமல் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் - கடலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0
புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை தமிழகத்தில் மறுபதிவு செய்யாமல் இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கடலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் எச்சரித்து உள்ளார்.
கடலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டால், அந்த விவரத்தை போக்குவரத்து துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அந்த வாகனங்கள் தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டால், அவ்வாகனங்களை தமிழகத்தில் மறுபதிவு செய்யவேண்டும்.
எனவே பிற மாநிலத்தில் பதிவு செய்து, கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இயங்கி வரும் வாகனங்களின் உரிமையாளர்கள் குற்ற நடவடிக்கைகளை தவிர்க்க தங்கள் பகுதியில் அமைந்து உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தை அணுகி தங்கள் வாகனங்களுக்கு வரியை செலுத்தவும், மறுப்பின்மை சான்று பெற்று மறுபதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு செய்யத்தவறினால், வாகன சோதனைகளின் போது வாகனம் தென்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்கள் மீதுமோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Tags: கடலூர் தமிழ்நாடு பதிவு பறிமுதல் புதுச்சேரி வாகனம்