Breaking News

சிறைவாசிகள் விடுதலைக்காக நம்பிக்கையோடு காத்திருப்போம் - |காயல் மஹப+ப் பேச்சு

நிர்வாகி
0
சிறைவாசிகள் விடுதலைக்காக நம்பிக்கையோடு காத்திருப்போம் - காயல் மஹப+ப் பேச்சு

சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி சமுதாயம் கொண்டுள்ள உணர்வுகளை முதல்வர் கலைஞரின் கவனத்துக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கொண்டு சென்றுள் ளது நல்ல செய்தி வரும் என்று நம்புவோம் என தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப் குறிப் பிட்டார்.
ஏழு ஆண்டுகள் தண்டனை கழித்த சிறை வாசிகள் விடுதலை கோரி மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் தமிழ்நாடு, மக்கள் உரிமை கூட்ட மைப்பு புதுச்சேரி ஆகிய வற்றின் சார்பில் சென்னை ப+ந்தமல்லி நெடுஞ்சாலை கேரள சமாஜம் கலைய ரங்கில் கருத்தரங்கம் 11-9-2009 அன்று நடை பெற்றது.
பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகப+ப் பேசுகையில் குறிப் பிட்டதாவது-
நீண்ட காலம் சிறையில் உள்ளோர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இன்று சமுதாய அமைப்பு களும் - மனித உரிமை அமைப்புகளும் குரல் எழுப்பி வருகின்றன.
கடந்த ஆண்டு ஜுன் 21-ல் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களை அதனுடைய மாநிலச் செயலாளர்கள் ஒவ்வொருவராக முன் மொழிந்தோம். ஒரு தீர்மானத்தை எங்களின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தானே முன்மொழிவதாக கூறி முதல்வர் கலைஞர் முன்னிலையில் ஒரு தீர் மானத்தை முன் மொழிந் தார்.
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நீண்ட காலம் சிறையில் இருக்கும் சிறைவாசிகளை யெல்லாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என் பதுதான் அந்த தீர்மானம். மாநாட்டில் குழுமியிருந்த லட்சக்கணக்கானோர் பலத்த கரகோஷத்தால் அதை ஆதரித்தனர். அந்த ஆண்டு 1405 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர். இந்த வாய்ப்பு முஸ்லிம் சிறை வாசிகளுக்கு கிடைக்கா மல் போனது. உள்துறை செயலாளர் அனுப்பிய தாக்கீதில் ஆயுத தடைச் சட்டம், வெடி பொருள் தடை சட்டம் உள்ளடக் கிய கைதிகளை முன்கூட் டியே விடுதலை செய்யக் கூடாது என குறிப்பிடப் பட்டிருந்ததும், சிறைத் துறைத் தலைவர் அனுப் பிய சுற்றறிக்கையில் மத மோதல் தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை முன் விடுதலைக்கு பரிந்துரைக் கக் கூடாது என இருந்த தும் தான் காரணம் என சொல்லப்பட்டது. எனவே, இந்த ஆண்டு இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டு விடாமல் அனை வருக்கும் விடுதலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்து வதற்காக முதல்வர் கலைஞர் அவர்களை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் அப+பக்கர் உள்ளிட்ட நாங்கள் சென்று சந்தித்து முறையீடு செய்தோம்.
முதல்வர் கலைஞரிடத் தில் தலைவர் வலியுறுத்திய கோரிக்கைகளில் ஒன்று 7 ஆண்டு சிறைவாசம் அனுப வித்த அனைவரையும் மத - சட்டப்பிரிவுகள் காரணம் காட்டாமல் விடுவிக்கப் பட வேண்டும் என்பதும், இரண்டாவது 12 ஆண்டு காலமாக விசாரணை சிறை வாசியாகவே சிறையில் இருக்கும் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட விசா ரணை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதுமாகும்.
சிறைவாசிகளுடைய விடுதலை விஷயத்தில் சமு தாயத்தினுடைய உணர்வு களை முதல்வர் கலைஞரு டைய கவனத்துக்கு எந்த வகையில் கொண்டு செல்ல முடியுமோ, அந்த வகையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மிகுந்த அக்கறையோடு கொண்டு சென்றுள்ளது.
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் நல்லது நடக்கும் என்கின்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரையில் எங்களுடைய அணுகு முறை வேறு. அநி யாயங்கள் நடக்கின்ற போது அதை நாங்கள் கண்டு கொள்ளாமல் விட் டதும் இல்லை.
மவ்லானா ஹாமித் பக்ரீ, அப்துல் மஜீத் மஹலரி ஆகியோர் மார்க்க அறிஞர்கள் இதே போன்ற ஒரு ரமளான் மாதத்தின் புனித இரவில் அவர்கள் காயல்பட்டினத்தில் கைது செய்யப்பட்டு போலீசா ரால் அழைத்துச் செல்லப் பட்டவர்கள், சென்னை கொடுங்கைய+ரில் பயங்கர மான வெடிமருந்து பொருட்களோடு பதுங்கி யிருந்த போது போலீசார் கைது செய்ததாக கூறி அவர்கள் மீது தேசிய பாது காப்புச் சட்டமும் பாய இருந்தது.
இதனையறிந்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் காயல்பட்டினத்திற்கே வந்து செய்தியாளர்களிட மும், பொதுக் கூட்டத்தி லும் வெளியிட்ட கருத்துக் களின் வாயிலாக அந்த மார்க்க அறிஞர்களும் அவர்களோடு கைது செய்யப்பட்டவர் களும் வெளிவரக் கூடிய ஒரு சூழ்நிலை உருவானது.
காவல் துறையின் சில அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவதற்கும், ரிவார்டும் - அவார்டும் பெறுவதற்கும் சட்டத்துக்கு புறம்பான இன்று இப்படிப்பட்ட கருத்தரங்குகள் மூலம் மக்களிடையே நல்ல ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருகிறது. மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நட வடிக்கைகளை எப்படி கையாள்வது என்பதை இப்படிப்பட்ட நிகழ்ச்சி கள் மூலம் அறிய முடிகி றது. ஏனெனில், இந்த மனித உரிமை மீறலில் நானே பாதிக்கப்பட்டவன்.
என்னை கைது செய்து 12 வழக்குகளின் அடிப் படையில் ஒரு வருடம் சிறையில் வைத்திருந்தும் ஒரு வழக்கில் கூட ஒரு நாள் கூட நீதிமன்றத்தின் முன் னால் நான் நேர் நிறுத் தப்படவில்லை. இப்படிப் பட்ட அநீதிகள் நாட்டில் நடைபெறாமல் தடுப்ப தற்கு மனித உரிமை பற்றிய சட்ட விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தொடர்ந்து நாம் முயற்சிப் போம்.
கலைஞர் தலைமையி லான தமிழக அரசு நாம் வைத்துள்ள கோரிக்கை களை பரிவுடன் பரிசீலிக் கும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் கோவை சென்றி ருந்தபோது சிறைவாசி களின் உறவினர்கள் அவரை சந்தித்து விடுத்த உருக்க மான கோரிக்கையையும் அவர் அனுதாபத்தோடு கேட்டுள்ளார். ஆகவே, அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் கோரிக் கைகள் நிறை வேற்றப்படும் என்கின்ற நம்பிக்கையோடு நாம் காத்திருப்போம்.
இவ்வாறு காயல் மஹப+ப் பேசினார். புதுச் சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பு வழக்கறிஞர் கோ. சுகுமாறன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, தமிழக மனித உரிமைக் கழக வழக்கறிஞர் புகழேந்தி, இந்திய மக்கள் வழக்கறி ஞர் சங்கம் உதயம் மனோ கரன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஜே. முஹம் மது நாஸிம், இந்திய தவ் ஹீத் ஜமாஅத் நாசர், பகு ஜன் சமாஜ் கட்சி ராஜேந் திரன், புதிய போராளிகள் துரை சிங்கவேல், குடியுரி மைப் பாது காப்பு நடுவம் வழக்கறிஞர் கேசவன், அர சியல் கைதிகள் விடுதலைக் குழு அப்துல் கைய+ம், இந்திய கம்ய+ னிஸ்டு கட்சி வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.

Tags: கருத்தரங்கு

Share this