Breaking News

சிராஜுல் மில்லத்தின் இதயக்கனி! பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்!! - கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்

நிர்வாகி
0
இறை வேதம் திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்த்த அல்லாமா அப்துல் ஹமீது பாகவி அவர்களின் புதல்வராக அன்றைய பிரஞ்சு ஆட்சியில் இருந்து காரைக்காலில் பிறந்த நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய சத்தனத்தமிழறிஞர் சிராஜுல் மில்லத் ஆ.கா. அ. அப்துஸ் ஸமத் ஸாஹிபின் 84வது பிறந்த தினம் இன்று (04-10-2009) சமூக நல்லிணக்க விழாவாக தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்படுகின்றது. எவ்வளவு பொருத்தமான விழாவை அவர் வழி நடத்திய பேரியக்கம் நடத்துகின்றது. பாசிச சக்திகளால் இறை இல்லம் (பாபரி மஸ்ஜித்) சஹிதாக்கப்பட்டபோது தமிழகம் அமைதி ப+ங்கவாக திகழ சமாதான புறாவாக திகழ்ந்தவர் சிராஜுல் மில்லத். ஷரீஅத் சட்டம் குறித்து நாடு தழுவிய இயக்கம் நடைபெற்ற போது, சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஷரிஅத் என்றால் என்ன? என்று வினவிய நேரத்தில், இஸ்லாமிய வாழ்க்கை முறைகளை மற்றவர்களும் புரியக் கூடிய வகையில், கையை காண்பித்து நகத்தை வளர்க்காமல் கத்திரிப்பதும் கூட ஷரீஅத் கூறியிருக்கும் நெறிகளாகும் என்பார் சிராஜுல் மில்லத். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு இஸ்லாமியர்கள் செய்த தியாகங்களை பட்டியலிட்டு காட்டுவார், இந்தியா சுதந்திர காற்றை அனுபவித்திட அலி சகோதரர்களின் தியாகங்கள், ஹஜ்ரத் மோஹானி அவர்களின் ப+ரண சுதந்திர முழக்கம், திருமண மேடையில் காயிதே மில்லத் அவர்கள் கதர் ஆடை அணிந்து தேசப்பற்றை வெளிப்படுத்தியது, சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற போரில் உடல் முழக்க வெடி பொருள்களை கட்டி உருண்டு சென்று இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் உயிரை தியாகம் செய்த ஹவில்தார் அப்துல் ஹமீது கானின் தியாக வரலாறு என சிராஜுல் மில்லத் அவர்கள் பேசினால், எழுதினால் அனைவர்களும் மெய் மறந்து போவர். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொன் விழா 1999ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றபோது அதன் முழுக்கமும் இதயங்கள் இணைந்த சமூக நல்லிணக்கம் என சிராஜுல் மில்லத் அறிவிப்பு செய்து தன் இறுதி மூச்சு வரை சமூக நல்லிணக்கத்திற்காகவும், சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைக்காகவும் உழைத்தார். காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் சிராஜுல் மில்லத்திற்கு சமய நல்லிணக்க விருது வழங்கப்பட்டது.

சிராஜுல் மில்லத்தும் முனீருல் மில்லத்தும்
தமிழக முஸ்லிம் லீகின் வரலாற்றில் தலைவராக சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் ஸாஹிபும் பொதுச் செயலாளராக முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் சாகிபும் பொருப்பேற்ற காலம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இவ்விருவரின் இதயங்கள் இணைந்த நட்பிற்கு சமுதாயத்தின் ஒற்றுமை பணிகளே முக்கிய இடம் பெற்றிருந்தன. முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள் நாவலர் ஏ.எம். ய+சுப் சாகிபை அரசியலில் ஆசானாக ஏற்றுக் கொண்டவர், சிராஜுல் மில்லத்தின் சிந்தனையில் செயலாற்றியவர். தமிழ்நாடு முஸ்லிம் லீக் எனும் தனி இயக்கத்தை 1978 தாய்ச்சபையில் இணைக்க வித்திட்டவர் பேராசிரியர்.

தலைவர் சிராஜுல் மில்லத்தின் ஆனைக்கிணைங்க திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியர் பணியை ராஜினாமா செய்து 1980 தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள். அதன் பின் முழு நேர அரசியல் பணியில் தலைவரின் கட்டளைகளுக்கு முழு மனதுடன் உடன் பட்ட இயக்கத்தின் தளபதியாகவும், சோதனையான கால கட்டத்தில் எல்லாம் தலைவர் சிராஜுல் மில்லத்திற்கு உற்ற துணையாக இருந்தவர் நமது இன்றைய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள். சிராஜுல் மில்லத் தலைமையில் முஸ்லிம் லீகின் மாநில இளைஞரணி அமைப்பாளர், கல்வி - கலாச்சார துறை செயலாளர், அமைப்புச் செயலாளர், பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் முனீருல் மில்லத் பேராசிரியர்.

இக்கால கட்டங்களில் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகளில் புதிய மாற்றங்களும், மஹல்லா ஜமாஅத்துக்கள் சமூக பணிகளாற்ற திட்டங்கள், அரசியல் ஒற்றுமைக்கான புதிய விய+கங்களின் அழைப்புப் பணிகள் என பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றது எனலாம். 1984 ஆண்டு கிளியனூரில் இளைஞர் முஸ்லிம் லீக் மாநாடு, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிற்சி பாசறை 1983 ஆண்டு மதுரையில் மஹல்லா ஜமாஅத்துக்களில் பைத்துல் மால், ஷரீஅத் பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக பணிகள் ஆற்றிடும் திட்டங்கள் ஏற்படுத்திய தமிழக தழுவிய முதல் மாநாடு நடைபெற்றது. நெல்லை ரஹ்மத் நகர், முகவை கூரிய+ர் உள்ளிட்ட ஊர்களில் சகோதர சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தீனுல் இஸ்லாத்தை ஏற்ற போது பாசிச சக்திகளின் தவறான பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட்டது போன்ற பணிகளில் சிராஜுல் மில்லதும் பேராசிரியரும் இணைந்து காரியம் ஆற்றியது வரலாற்று செய்திகளாகும்.

1989 ஆண்டு இயக்கத்தின் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்ட போது தலைவர் சிராஜுல் மில்லத்துடன் இணைந்து நாடெங்கிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாய்ச்சபையை நிலை நிறுத்திய பெருமை முனீருல் மில்லத் பேராசிரியரை சாரும். 1990 ஆண்டு பேராசிரியர் ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரியும் தமிழக முஸ்லிம்களை முஸ்லிம் லீக் பணிகளில் ஒருங்கிணைத்திடும் நோக்கில் காயிதே மில்லத் பேரவை எனும் அமைப்பை தலைவர் சிராஜுல் மில்லத் வழிகாட்டுதலில் நிறுவினர். துபை காயிதே மில்லத் பேரவை அங்கத்தினர்களின் வேண்டுகோளை ஏற்று பன்மொழி புலவர் அப்துல் லத்தீப் சாகிப் மீண்டும் தாய்ச்சபையில் இணைக்கும் முயற்சியில் தலைவர் சிராஜுல் மில்லத்துடன் இணைந்து, இரண்டு தலைவர்களுக்கும் பாலமாக செயல்பட்டவர் பேராசிரியர் அவர்கள், அக்கால கட்டங்களில் சிராஜுல் மிலலத் - முனீருல் மில்லத் ஆகியோரின் அழைப்புச் செய்திகளை அப்துல் லத்தீப் சாகிபிற்கு எடுத்துக் கூறும் தாய்ச்சபையின் தொண்டனாக நான் செயலாற்றியிருக்கின்றேன். இதன் பலனாக பல்வேறு இயக்கத்தினரையும் தாய்ச்சபையில் இணைக்கும் முயற்சியாக, | சமுதாய ஒற்றுமை மாநாடு | 1993 ஆண்டு சென்னையில் வரலாற்றுச் சிறப்போடு நடைபெற்றது.

1995 ஆண்டிற்கு பின் முஸ்லிம் லீக் நடவடிக்கைகளில் மீண்டும் சற்று தொய்வு ஏற்பட்டது 1997 ஆண்டு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவராக சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் ஸாகிபும், பொதுச் செயலாளராக பேராசிரியர் காதர் மொகிதீன் ஸாகிபும் செயலாற்றினர். இக்கால கட்டத்தில் தேசிய - மாநில - மாவட்ட அளவிலான அமைப்புப் பணிகளை முறைப்படுத்தி, பலப்படுத்திட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. மணிச்சுடர் நாளிதழ் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தப்பட்டது, சமூக பணிகளில் ஒருங்கிணைந்த ஈடுபாடுகளுக்கு அறக்கட்டளை நிறுவப்பட்டது. தலைவர் சிராஜுல் மில்லதின் வேண்டுகோளை ஏற்று பேராசிரியர் மணிச்சுடர் நிர்வாக ஆசிரியர் பொறுப்பேற்றார். தலைவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பல சிரமங்களுக்கு மத்தியில் சென்னையில் துர்நாற்றமும், கொசு தொல்லையும் நிறைந்த வாலஸ் தோட்ட பகுதி அலுவலகத்தில் தங்கி தியாக வாழ்க்கை மேற்கொண்டவர் நமது இன்றைய தலைவர் பேராசிரியர். அ.தி.மு.க. வுடன் ஏற்படுத்திய கூட்டணியால் இயக்க நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கப்பட்டது. சிராஜுல் மில்லதின் உடல் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மறுநாள் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. பல்வேறு மாவட்ட நிர்வாகிகளின் காரசாரமான விவாதங்கள், தலைவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தனர். அன்றைய பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அனைத்தையும் சமாளித்து, அனைவர்களிடமும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி இயக்கத்தின் கட்டுக்கோப்பை நிலைநிறுத்தினார். சிராஜுல் மில்லத்திற்கு தொடர்ந்து பணியாற்ற உற்சாகம் மூட்டினார். தாய்ச்சபையின் மாநில செயற்குழு - பொதுக் குழு கூட்டங்கள் அதிகமாக திருச்சியில் தான் நடைபெறும். பேராசிரியரிடம் தெரிவித்து விட்டால் எல்லாம் நல்லபடியாக நடைபெறும் என்பது தலைவர் சிராஜுல் மில்லத்தின் அழுத்தமான நம்பிக்கை . சிராஜுல் மில்லத் மனம் சோர்வாக இருந்தால், அவர்களின் துணைவியார் நர்கீஸ் அம்மா அவர்கள், சிராஜுல் மில்லத்திடம் திருச்சி வரை சென்று வாருங்களேன் . என்று கூறுவதை நான் பல முறை கேட்டிருக்கின்றேன். சிராஜுல் மில்லத் திருச்சியை தமிழகத்தின் நெஞ்சத்தாமரை என்பார், பேராசிரியரை தனது இதயக்கனியாக போற்றினார்.

பேராசிரியர் சென்னையில் இருந்த காலகட்டங்களில் தலைவர் சிராஜுல் மில்லத் அதிக நேரத்தை அலுவலகத்தில் செலவிடுபவராகவே இருந்தார்கள். இருவரும் இணைந்து மணிச்சுடர் வளர்ச்சி பணிகள், இயக்கத்தின் எழுச்சிக்கான திட்டங்கள் என பல மணி நேரம் விவாதிப்பதை பார்த்திருக்கின்றேன். எப்போதாவது மாலை நேரங்களில் கடலோரப் பகுதிகளிலுள்ள உணவகங்களுக்கு சென்று வரலாம் என சிராஜுல் மில்லத் விரும்புவார்கள், பேராசிரியரை அலுவலகத்திலிருந்து கிளப்புவது என்பது பெரிய விஷயம் தம்பி செல்லுங்கள் என சிராஜுல் மில்லத் என்னை பணிப்பார்கள், மேல் தலத்திலிருந்த பேராசிரியரை அழைத்து வருவேன், உணவகங்களில் கலந்துரையாடல் பல மணி நேரம் நீடிக்கும், அனைத்தும் அறிவார்ந்த விவாதங்கள், சரித்திர நிகழ்வுகள், எனக்கோ அனைத்தும் மாலை நேர பாடங்கள்.

சிராஜுல் மில்லத் - முனீருல் மில்லத் இணைந்த அறிவார்ந்த முயற்சியால் கண்ணியத்திற்குறிய தலைவர் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் ( ரஹ்) அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தமிழகம் எங்கிலும் நடைபெற்றது. சென்னையில் முதல்வர் முன்னிலையில் அனைத்து மாவட்டங்களிலும் சிராஜுல் மில்லத், முனீருல் மிலலத் பேராசிரியர், அமைச்சர்கள் மற்றும் தாய்ச்சபை முன்னணியினர் பங்கேற்கிற விழா தமிழக அரசின் சார்பில் நடைபெற்றது. பாசிச சக்திகள் காயிதே மில்லத்தை விமர்சித்த நேரத்தில் அரசை விழா எடுக்க வைத்து தலைவர் காயிதே மில்லத்தின் நாட்டுப்பற்றையும் , தமிழ் உணர்வையும் மேடைதோறும் பேச வைத்தது தமிழக முஸ்லிம் லீகின் வரலாற்று சாதனையாகும். அதே போல் இந்திய அரசின் சார்பில் காயிதே மில்லத் தபால் தலை வெளியிடப்பட்டது, இதன் வடிவமைப்பை தமிழக முஸ்லிம் லீக் அலுவலகத்திலிருந்து தான் அனுப்பப்பட்டது. அன்று சென்னையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் அப+ பேலஸ் ஹோட்டலில் பெருந்தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா சாகிப் தலைமையில் நடைபெற்றது. இந்தியாவின் பதினெட்டு மாநிலங்களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்ட நடவடிக்கைகளை தீர்மானங்களை வடிவமைத்து வெற்றி பெற செய்தவர்கள் சிராஜுல் மில்லத்தும் முனீருல் மில்லத் ஆவர். சென்னையில் காயிதே மில்லத் மணி மண்டபம் அரசின் சார்பில் ஏற்படுத்தியதும் இவ்விருவர்கள் தான்.

முஸ்லிம் லீகின் நிர்வாகத் தேர்தல் நடைபெற்ற போது, அனைத்து மாவட்டங்களுக்கும் தலைவர் சிராஜுல் மில்லத், பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆகியோர் சென்று சிறப்பாக நடத்தினர். உடல் நலக்குறைவையும் கருத்தில் கொள்ளாமல் சிராஜுல் மில்லத் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்றார்கள். குறிப்பாக அன்று சென்னை மாவட்டத்தில் இயக்க பணிகள் மிகவும் தொய்வடைந்த நேரம், அன்று சென்னையில் மட்டும் அறுபதிற்கு மேற்பட்ட வட்ட கிளை தேர்தலை சிராஜுல் மில்லதும் முனீருல் மில்லத் நேரடியாக நடத்தி வைத்தனர். இருதய நோயால் அவதிப்பட்ட நேரத்திலும் கூட கவலை படாமல் பல மாடிகள் ஏறி வந்து தேர்தலை சிராஜுல் மில்லத் நடத்தி வைத்து ஊழியர்களை உற்சாக மூட்டினார்கள். மாவட்ட தேர்தல்கள் நடைபெறற பின் மாநில நிர்வாகிகள் தேர்தல் சென்னை பெரியார் திடல் அரங்கில் எழுச்சியோடு நடைபெற்றது. அன்று தான் மாநில அளவில் பேராசிரியர் முயற்சியால் சிராஜுல் மில்லத் பேரவை துவங்கப்பட்டது. இக்கால கட்டங்களில் தமிழகத்தில் பல பகுதிகளில் தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிராஜுல் மில்லத்தும், முனீருல் மில்லத்தும் ஷரீஅத் யாத்திரை மேற்கொண்டனர்.

சிராஜுல் மில்லத் அவர்களின் 69வது பிறந்த நாள் சென்னை கலைவாணர் அரங்கில் பேராசிரியர் தலைமையில் தேசிய தலைவர் ஜி.எம். பனாத்வாலா சாகிப் பங்கேற்ற விழா நடைபெற்றது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொன்விழா வரலாற்று சிறப்போடு 1999 ஆண்டு சென்னை சீரணி அரங்கில் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடாக சிராஜுல் மில்லத் தலைமையில் தமிழக முதல்வர் கலைஞர், காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார். ஜி.எம். பனாத்வாலா சாகிப், செய்யது முஹம்மதலி சிகாப் தங்ஙள், இ. அஹமது சாகிப் உள்ளிட்டவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இம்மாநாடு பேராசிரியர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் சிராஜுல் மில்லத் | முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் | என வலியுறுத்தினர், தமிழக முதல்வர் அவர்களும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என உறுதியளித்தார். இம்மாநாட்டில் கலைஞர் அவர்களையும் மூப்பனார் அவர்களையும் அரசியல் கூட்டணியில் இணைந்தே பார்க்க விரும்புவதாக சிராஜுல் மில்லத் பேசியதை சமய நல்லிணக்கவாதிகள் பாராட்டினர். இம்மாநாட்டிற்கு பின் கடைய நல்லூரில் நடைபெற்ற மஸ்ஜித் திறப்பு விழாவில் கலந்து கொண்டதே சிராஜுல் மில்லத் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியாகும்.

1991ம் ஆண்டு தமிழகத்தில் முஸ்லிம் மாணவர் பேரவை முனீருல் மில்லத்தின் முயற்சியால் சிராஜுல் மில்லத் அவர்களால் துவங்கப்பட்டு, அதன் மாநில அமைப்பாளராக நான் நியமனம் செய்யப்பட்டேன். என் கல்லூரி வாழ்க்கையில் விடுமுறை நாட்களின் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களுக்கு உதவியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா - கர்நாடகா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யக்கூடிய வாய்ப்பை பெற்றேன். அப்பிரயாணங்கள் அனைத்தும் எனக்கு வாழ்க்கைக்கு பல நிலைகளிலும் தெரிந்து கொண்ட விஷயங்களாக இருந்து வருகின்றது. மாணவர் பேரவை இஃப்தார் நிகழ்ச்சிகளுக்கு சிராஜுல் மிலலத் அவர்களே வீட்டிலிருந்து தின் பண்டங்களை எடுத்து வந்து மாணவர்கள் நோன்பாளிகளை கண்ணியப்படுத்துவார்கள், தாய்ச்சபையின் தலைமை எதிர்காலத்தில் கல்லூரி வாசலில் இருந்து உருவாக வேண்டும், நம் மாணவர்களை நன்கு பயின்று திறமையுடன் அனைவர்களுடனும் சமமாக அமர்ந்து பேசும் அளவிற்கு திறமை உடையவர்களாக இருக்க வேண்டும், ஒழுக்க சீலர்களாக - செயலாற்றும் வீரர்களாக இருக்கும் வேண்டுமென தொடர்ந்து சிராஜுல் மில்லத் மாணவர் பேரவை கூட்டங்களில் வலியுறுத்துவார்கள். நான் சிராஜுல் மில்லத் வீட்டிற்கு செல்லப்பிள்ளை , என்னை தலைவரின் (ஞசடிவடிஉடிட) என்றே அவர்களின் பிள்ளைகள் அழைப்பர். முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள் மீது அளவிலா அன்பும், உயரிய எண்ணமும் சிராஜுல் மில்லத் கொண்டிருந்தார். இருவரும் குடும்ப நலனிலும், இதயங்கள் இணைந்த, உடன் பிறந்த சகோதரர்களை போல் பழகுவர்.

சிராஜுல் மில்லத் - முனீருல் மில்லத் ஆகியோருடன் நாம் பழகி வருவது நாம் பெற்ற பாக்கியம் . அவ்உயரிய நல்பண்பாளர்களுக்கு தொண்டனாக, சமுதாய போர்படை தளபதிகளின் நெஞ்சத்தில் இடம் பிடித்தவர்களாக, அவர்களின் துஆவுக்குரியவர்களாக திகழ்வது நாம் பெற்ற பேறு.

இன்று சிராஜுல் மில்லத் கனவுகளை நிறைவேற்றக்கூடியவராக , சிந்தனைகளை செயலாற்றக் கூடிய வகையில் இன்றைய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள் சென்னை பட்டணத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழக்கூடிய மண்ணடியில் முஸ்லிம் லீகிற்கு என நான்கு மாடி சொந்த கட்டடிம் காயிதே மில்லத் மன்ஸில், கட்சிப் பொறுப்புகள், சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்களாக இளைஞர்களுக்கு இடம் அளித்து புரட்சித் திட்டங்களை நடைமுறை படுத்தி சாதனைபடுத்தி வருகின்றார்.

சிராஜுல் மில்லத் ஆ.கா. அ. அப்துஸ் ஸமத் ஸாகிபின் 84வது பிறந்த நாள் - சமய நல்லிணக்க விருது வழங்கும் நன்நாளில் | இந்திய ஒருமைப்பாடு நிலைக்க வேண்டும் சமய நல்லிணக்கம் தலைத்தோங்க வேண்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் கலாச்சார தனித்தன்மையோடும் உரிமைகளை பெற்று வாழ வேண்டும் என்ற முத்தான முப்பெரும் கொள்கைக்காக உழைத்து வரும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பேரியகத்தின் வளர்ச்சிக்கு, எழுச்சிக்கும் நாம் தூய எண்ணத்துடனும், தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக பணிகளாற்றிட சூளுரை ஏற்போமாக.

Tags: முஸ்லிம் லீக்

Share this