Breaking News

முஸ்லிம் லீக் தலைமையகத்தில் மீலாதுந் நபி தொடர்சொற்பொழிவு நிகழ்ச்சி - தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு

நிர்வாகி
0
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மை ஒளியாகத் திகழ்ந்தே உலகை மாற்றினார்கள் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் மீலாது நபி விழாவையொட்டி தினமும் மாலையில் மவ்லூது நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சிந்தனைக்கினிய சீறாப் புராணம் பாடலும் - விளக்கமும் என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லா அறக்கட்டளை அறங்காவலரும், முஸ்லிம் லீக் மாநிலப் பொருளாளருமான வடக்குகோட்டை வ.மு. செய்யது அஹமது ஏற்பாடு செய்துள்ளார்.

மார்க்க அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமுதாயப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று சிறப் பிக்கும் இந் நிகழ்ச்சியில் கடந்த புதனன்று (17-2-10) தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசும்போது குறிப்பிட்டதாவது-

நபி பெருமானார் (ஸல்) அவர்களின் பெருமைகளை நினைவுகூரும் வகையில் தினந்தோறும் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் மூன்றாம் நாளான இன்றைய நிகழ்ச்சியில் நேற்று வந்த பலரோடு நேற்று வராத பலரும் கலந்து கொண்டிருக்கிறதைக் காண முடிகிறது. இன்று வராத பலர் நாளை வரக்கூடும். நாளுக்கு நாள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்போர் எண்ணிக்கை பெருகிக் கொண்டேதான் இருக்குமேயொழிய குறையாது. இன்று இந்நிகழ்ச்சியில் நமது அருமைப் பாடகர் கலைமாமணி ய+சுப் அவர்கள் இசை குறித்து ஒரு அருமையான ஆய்வுரையை நிகழ்த்தி யுள்ளார்கள். அதே போன்று செங்கம் ஜப்பார் அவர்கள் பேசும்போது, ஞானசூனியங்களாக இருந்தவர்களையெல்லாம் ஞானசூரியன்களாகவும், ஒட்டகம் மேய்க்கக் கூட தகுதியில்லாதவர்கள் என்று கருதப்பட்டவர்களை உலகையே மேய்க்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிக் காட்டினார்கள் எனக் குறிப்பிட்டார் அதுவும் 23 ஆண்டு காலத்தில் இந்தப் புரட்சிகரமான மாற்றத்தை செய்து காட்டியதாக தெரி வித்தார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 40 வயது வரை முஹம்மது பின் அப்துல்லாவாக மட்டுமே இருந்தார். அப்போது அவரை எல்லோரும் போற்றிப் புகழ்ந்தனர். அல்-அமீன் - உண்மையாளர் என்றும், அஸ்ஸாதிக் - நேர்மையாளர் என்றும் பாராட்டினர். முஹம்மது பின் அப்துல்லாவாக இருந்தவர் தனது 40-ம் வயதில் முஹம்மது ரசூலுல்லாஹ்வாக ஆனதும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். அவற்றையெல்லாம் தாண்டித்தான் அவர்கள் பல முன்மாதிரிகளை உரு வாக்கித் தந்துள்ளார்கள்.

இன்று சீறாப்புராணத் தில் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் பிறப்பு தொடர்பான அழகிய பாடல்களையும் நபிகள் பிறந்தபோது அன்றிருந்த சூழல்கள் குறித்தும் நல்ல முறையில் விளக்கிக் கூறினார்கள்.

பெருமானார் நபிகள் (ஸல்) அவர்களின் பிறப் பானது மற்ற மனிதர்கள் பிறப்பதைப் போன்று அமைந்தது அல்ல என் றும், அவர்களின் பிறப்பே அற்புதமான முறையில் அமைந்ததாக வும் உமறுப் புலவர் தமது சீறாப்புரா ணத்தில் பாடியுள்ளதற்கு விளக்கமளிக்கும் போது இன்றைய சிசேரியன் முறை போன்று ஒரு அறுவை சிகிச்சை மூலம் பெருமானார் பிறந்தார்கள் என விளக்கமளித்தனர்.

நபி (ஸல்) அவர்களை நூரே முஹம்மதிய்யா என்று குறிப்பிடுவார்கள். நூர் என்றால் ஒளி - வெளிச்சம் எனப் பொருளாகும். பஞ்ச ப+தங்கள் என சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு இவற் றில் வெளிச்சத்தைத் தவிர மற்ற நான்கிற்கும் எல்லை உண்டு. தடுப்புகள் உண்டு. குறிப்பிட்ட வரையறை உண்டு. ஆனால், வெளிச்சத் திற்கு ஒளிக்கு எத்தகைய எல்லையுமில்லை. எத்தகைய தடுப்பும் இருக்க முடியாது. தடைகளை யெல்லாம் தாண்டி ஊடுருவிச் செல்லும் ஆற்றல் படைத்தது ஒளியாகும். எங்கெல்லாம் இருட்டு இருக்கிறதோ - இருள் கவ்வியிருக்கிறதோ அங் கெல்லாம் ஒளி சென்றால் புதிய பிரகாசம் வந்து விடுகிறது. மறுமலர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. அத னால்தான், அண்ணல் நபி பெருமானார் (ஸல்) அவர்களை ஒளியோடு இணைத்து நூரே முஹம் மத்திய்யா என உலமா பெருமக்கள் விளக்கமளிக்கின்றனர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வரலாற்றினை அவர்கள் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை நாம் உற்றுக் கவனிக்கிற இடத்தில் ஆழ்ந்து ஆராய்கிற இடத்தில் அவர்கள் ஒளிமயமாகவே இருந்தார் கள் என்பதற்கான சான்று கள் கிடைக்கின்றன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தௌர் குகையில் இருந்த போது அவர்கள் எதிரிகளின் கண்களில் படாமல் இருந் ததும், மக்காவை விட்டு ஹிஜ்ரத் செய்த நாளின் இரவிலே அவர்களின் வீட் டைச் சுற்றி எதிரிகள் சூழ்ந் திருந்தபோதிலும் அவர் களின் கண்ணிற் கெல்லாம் தெரியாமல் பெருமானார் (ஸல்) அவர்கள் வெளியே றியதையும் காண்கின்ற போது அவர்கள் ஒளியாகத் தான் இருந்தார்கள் என் பதை விளங்க முடிகிறது. அவர்கள் மூலமாக இறை வன் அருளிய திருக்குர் ஆனும் - இஸ்லாம் மார்க்க மும் ஒளியைப் போன்ற தேயாகும். அதனை எவரும் தடுத்து விடமுடியாது. அது எல்லாவித தடைகளையும் தாண்டி இருளைப் போக்கி வெளிச்சத்தை தந்து கொண்டே யிருக்கும். இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

நிகழ்ச்சியில் குமரி அப+பக்கர், சீறாப்புரா ணம் பாடல்களைப் புலவர் கமால் மைதீன் விளக்க வுரையாற்றினார்.

மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, சட்ட மன்ற உறுப்பினர் எச். அப்துல் பாசித், செங்கம் ஜப்பார், கலைமாமணி ய+சுப், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே. எம். நிஜாமுதீன், வட சென்னை மாவட்டத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன், ஆலிமான் ஆர்.ஜியாவுதீன், ராயபுரம் ஏ.ஆர். இக்பால், மணிச் சுடர் ஹமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கே.எம். இஸ்மாயில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆர். வெங்க டேசன் நன்றி கூறினார். கள் என்பதற்கான சான்று கள் கிடைக்கின்றன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தௌர் குகையில் இருந்த போது அவர்கள் எதிரிகளின் கண்களில் படாமல் இருந் ததும், மக்காவை விட்டு ஹிஜ்ரத் செய்த நாளின் இரவிலே அவர்களின் வீட்டைச் சுற்றி எதிரிகள் சூழ்ந் திருந்தபோதிலும் அவர் களின் கண்ணிற் கெல்லாம் தெரியாமல் பெருமானார் (ஸல்) அவர்கள் வெளியே றியதையும் காண்கின்ற போது அவர்கள் உண்மை யின் ஒளியாகத்தான் இருந் தார்கள் என்பதை விளங்க முடிகிறது. அவர்கள் மூல மாக இறைவன் அருளிய திருக்குர் ஆனும் - இஸ்லாம் மார்க்கமும் ஒளியைப் போன்றதேயாகும். அதனை எவரும் தடுத்து விடமுடி யாது. அது எல்லாவித தடைகளையும் தாண்டி இருளைப் போக்கி வெளிச் சத்தைத் தந்துகொண்டே யிருக்கும். இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார். நிகழ்ச்சியில் குமரி அப+பக்கர், சீறாப்புரா ணம் பாடல்களைப் புலவர் கமால் மைதீன் விளக்க வுரையாற்றினார். மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, சட்ட மன்ற உறுப்பினர் எச். அப்துல் பாசித், செங் கம் ஜப்பார், கலைமாமணி ய+சுப், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே. எம். நிஜாமுதீன், வட சென்னை மாவட்டத் தலைவர் ஜெய்னுல் ஆபி தீன், ஆலிமான் ஆர். ஜியா வுதீன், ராயபுரம் ஏ.ஆர். இக்பால், மணிச்சுடர் ஹமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கே.எம். இஸ்மாயில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆர். வெங்க டேசன் நன்றி கூறினார்.

Tags: மீலாது நபி முஸ்லிம் லீக்

Share this