Breaking News

ஈகைத் திருநாள் தலைவர்களின் வாழ்த்துச் செய்தி!

நிர்வாகி
0
எல்லோருக்கும் உடலை வருத்தி, உள்ளத்தைத் திருத்தி, தன்னிலை உணர்ந்து, பிறர்நிலை அறிந்து, தாழ்ந்து கிடப்போரின் உயர்வுக்கு உதவிபுரிந்து வாழும் சிறந்த வாழ்வு முறையைக் கற்பிக் கிறது. ஒரு மாதம் முழு வதும் பெற்ற பயிற்சி யையும் கற்ற பாடத் தையும் ஆண்டு முழுவதும் நடைமுறைப் படுத்துவதில்தான் சிறப்பு அமைந்திருக் கிறது. இன்றையத் தேவை, எல்லாரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வே ஆகும். மனித சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் வேறுபாடுகளை நீக்கவும், வன்முறை எண்ணம் மறையவும், எங்கும் எதிலும் நன்முறையும் மென் முறையும் நிறையவும், அமைதி வழியில் அறநெறியில் ஆக்கப்பூர்வ மாகப் பாடுபடுவோம். என்றும் அன்புடன் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு.



லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் முஃப்தி காரி அல்ஹாபிஜ் நூருல் அமீன் ஹஜ்ரத்'


இன்பம் பொங்கும் இந்த இனிய நன்னாளில் எல்லா வளமும்

பெற்று வாழ வாழ்த்துகிறேன் ....."ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்" ....





இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்
மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் அவர்களின்

பெருநாள் வாழ்த்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அன்பார்ந்த சகோதரர்கள் சகோதரிகள் உங்கள் அனைவர்களுக்கும் எங்களின் ஈதுல் பித்ர் இனிய` ஈத் முபாரக் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் புனித ரமளானில் நோன்பின் மாண்பை பேணி,கண் சிவக்க திருக்குர்ஆன் ஓதி,கை சிவக்க வாரி வழங்கி ,கால் கடுக்க தொழுது வணங்கி புனித ரமளானை கண்ணியப்படுத்திய கண்ணியச்சீலர்களான உங்கள் அனைவர்களுக்கும் இனிய ஈத் முபாரக்

இன்பம் பொங்கும் இந்த இனிய நன்னாளில் எல்லா வளமும்
பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

எல்லாருக்கும் இனிய வாழ்வு மலரட்டும்! தமுமுகவின் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை குறிப்பிட்டிருப்பதாவது:


புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் முதல் நாளில் ‘ஈதுல் ஃபித்ர்’ என்னும் ஈகை பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

ஏக இறைவனை வணங்கி வாழ்வதும், இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும் எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இஸ்லாமிய வாழ்வியல் ஆகும்.

ஈத்துவக்கும் இன்பம் அறியாரிகொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் என்பார் வள்ளுவர். பிறருக்கு கொடுத்து உதவுவதால் வரும் இன்பத்தை அறியாத வன்நெஞ்சர்கள்தான் தங்கள் செல்வங்களை தாமே வைத்திருந்து பிறகு அதை இழந்து செல்வார்கள் என்பது இதன் பொருளாகும்.

‘‘மாபெரும் உஹது மலை அளவு செல்வம் என்னிடம் தரப்பட்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் அதை வைத்திருக்க மாட்டேன், ஏழை எளியோருக்கு தர்மம் செய்து விடுவேன்’’ என்று கூறிய நபிகள் நாயகம் தனது செல்வங்களை எல்லாம் வாரி வழங்கிவிட்டு இறுதிவரை எளிமை வாழ்வையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

பல லட்சம் டன் உணவு தானியங்கள் அரசு கிடங்குகளில் புழுத்து வீணாவது ஒருபுறம், பல கோடி மக்கள் வறுமை யிலும், பசியிலும் உழல்வது மறுபுறம் என உள்ள நம்நாட்டு சூழ்நிலை ஈகையின் அவசியத்தை உணர்த்துகின்றது. தனி நபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்திற்கும் ஈகை பண்பு இருந் தாக வேண்டிய அவசியத்தை நாட்டின் நிலைமை வலியுறுத்துகிறது.

நாட்டு மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுபட்டு வளமான, நலமான, இணக்கமான வாழ்வை இனிதே வாழ்ந்திட, மகிழ்ச்சி பூக்கள் வாழ்வில் மலர்ந்திட ஈகை பெருநாளில் இதயங்கனிந்து வாழ்த்துகிறோம்.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

ஈத் முபாரக்!
கண்ணியமும், அருளும் மகிழ்வும் ஒருங்கே பெற்ற ரமதான் மாதம் நம்மை விட்டு விடை பெறும் ஷவ்வால் முதல் பிறையை மகிழ்வுடன் கொண்டாடும் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளின் மகிழ்வை அனைத்து சகோதர, சகோதரகளிடம் பகிர்ந்து கொள்வதில் உங்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெருமை கொள்கிறது.


அனைவருக்கும் உள்ளம் மகிழும் ஈகை திருநாள் வாழ்த்துக்கள் (ஈத் முபாரக்!).
-இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
தலைமை நிர்வாகிகள்,
மாவட்ட நிர்வாகிள்,
கிளை நிர்வாகிகள்
வெளி மாநில நிர்வாகிகள்
வளைகுடா மண்டல நிர்வாகிகள்
வெளிநாட்டு கிளை பொறுப்பாளர்கள்
தொண்டர் அணி
மருத்துவ அணி
மாணவர் அணி
மற்றும்
மகளிர் அணிகள்.
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்து செய்தி

அல்லாஹ்வின் பேரருளை அகமகிழ்ந்து பெற்றிட முனைந்தவர்களாய் முப்பது நாளும் நல்லறம் திளைத்து இறையோன் வழங்கிட பணித்த ஏழை வரிகளை [ஜகாத்] இன்முகத்தோடு இருகரங்களால் அள்ளிக் கொடுத்து இல்லாதவர்களின் முகங்களில் இன்பம் பொங்கச் செய்து இறைவனின் விருந்தாளிகளாய் இந்த இனிய ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளை கொண்டாடிடும் முஸ்லிம் உம்மத்திற்கு உன்னதமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் உலகிலுள்ள அனைவரும் ஒரே தாய் தந்தையருக்கு பிறந்தவர்கள் உங்களை அடையாளம் காணும் பொருட்டே பல கோத்திரங்களாக ஆக்கினோம் என்கின்ற குர் ஆன் வசனத்திற்கு ஒப்பாக ஒரு குடும்பத்தை சார்ந்தவர்கள் போன்று இந்நாட்டின் வாழக் கூடிய அனைத்து சமூக இன மக்களும் ஒற்றுமையோடும், உள்ளன்போடும் வாழ்ந்திட இந்நன்நாளில் வாழ்த்துகின்றேன். ஒரு சமூகம் வலிமையவதற்கு மிக மிக அவசியமானது கல்வி, பொருளாதரம், அரசியல் ஆனால் முஸ்லிம் சமூகம் இவை அனைத்திலும் அகல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. எனவே இந்நன்நாளில் ஒரு மகத்தான மாற்றத்தை கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படுத்துவோம் என உறுதி ஏற்ப்போம். அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்.

Tags: வாழ்த்துக்கள்

Share this