Breaking News

மார்ச் 10 மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

நிர்வாகி
0
2010 மார்ச் 10 மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு - மத்திய அமைச்சர்கள் இ. அஹமது, மு.க. அழகிரி பங்கேற்கின்றனர்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவன தினத்தையொட்டி 2010 மார்ச் 10-ம் தேதி புதன் கிழமை திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளை யத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தேசியப் பொதுச் செயலாளரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலை வரும், மத்திய ரயில்வே துறை இணையமைச்சரு மான இ.அஹமது, தி.மு.க. தென் மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய ரசா யன மற்றும் உரத்துறை அமைச்சருமான மு.க. அழகிரி, தமிழக அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் மற்றும் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில - மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்கின் றனர் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தாவது- இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 1948-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி சென்னை அரசினர் தோட் டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் தொடங்கப்பட்டது. அதன் 62-வது நிறுவன தினத்தையொட்டி திரு நெல்வேலி, மேலப்பாளையத்தில் சமுதாய மறு மலர்ச்சி மாநாடு மிகச்சிறப் பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
அன்று காலை 9.30 மணிக்கு மேலப்பாளையம் முஹம்மது அலி ஜின்னா திடலில் நடைபெறும் மாநாட்டை விழாக்குழு அமைப்பாளரும், நெல்லை மாவட்டத் தலைவருமான எம்.எஸ். துராப்ஷா திறந்து வைக்கிறார். மதுரை மாவட்டத் தலைவர் மவ்லவி பிகே. என். காதர் ஆலிம் பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றி வைக்கிறார். மாநில துணைத் தலைவரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான எஸ். கோதர் முகைதீன் மற்றும் மதுரை மாநகர் மற்றும் புறநகர், ராமநாத புரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியா குமரி மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் லீகின் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். காலை 10 மணிக்கு முற்றிலும் பெண்கள் பங்கேற்கும் முஸ்லிம் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறு கிறது. மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் தலைமையில் நடை பெறும் இந்த கருத்தரங்கில் குடும்ப விழிப்புணர்வு, மருத்துவ விழிப்புணர்வு, பொருளாதார விழிப் புணர்வு, கல்வி விழிப் புணர்வு மற்றும் அரசியல் விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் பேரா சிரியைகள் மற்றும் மருத் துவ நிபுணர்கள் உரையாற் றுகின்றனர். இந் நிகழ்ச்சியில் மதுரை பேராசிரியை தஸ்ரீப் ஜஹான் சேவைக்கு பாராட்டு தெரிவித்து விருது வழங்கப்படுகிறது. மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இன் னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சமூக நல்லிணக்கப் பேரணி
இம் மாநாட்டை யொட்டி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் லட்சியங் களில் ஒன்றான சமூக நல்லி ணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் பேரணி நடை பெறுகிறது. மாலை சரி யாக 4.15 மணிக்கு மேலப் பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரி சாலையிலுள்ள வி.எஸ்.டி. பள்ளி அருகில் இருந்து புறப்படும் இப் பேரணி கொட்டிக்குளம் சந்திப்பு, மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் வீதி, அறிஞர் அண்ணா வீதி, காயிதெ மில்லத் பள்ளி சாலை வழியாக ஜின்னா திடலில் வந்தடையும்.
சங்கைக்குரிய உலமா பெருமக்கள், முஸ்லிம் லீக் இளைஞர் அணியினர், மாணவர் அணியினர் அணிவகுத்து வரும் இப் பேரணியை ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் களில் ஒருவரான மவ் லானா டி.ஜே.எம். சலாஹ{ தீன் ரியாஜி ஹஸரத் ஒருங் கிணைத்து வர, மாநில உலமாக்கள் அணி அமைப் பாளர் மவ்லவி ஹாமித் பக்ரீ மன்பஈ தலைமை யேற்கிறார்.
தென்மாவட்டங்களிலிருந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீகினர் பல்லாயி ரக்கணக்கானோர் இப் பேரணியில் பங்கேற்கின்றனர்.
மத்திய அமைச்சர்கள்
மாலையில் நடை பெறும் இம்மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை வகிக்கிறார். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சருமான இ.அஹமது மாநாட்டு பேருரையாற்றுகிறார்.
தென் மண்டல தி.மு.க. செயலாளரும், மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சருமான அஞ்சா நெஞ்சர் மு.க. அழகிரி சிறப்புரையாற்றுகிறார். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், நெல்லை மாநகர மேயர் ஏ.எல். சுப்பிரமணியம், நாடாளு மன்ற உறுப்பினர்கள் எம். அப்துர் ரஹ்மான், இ.டி. முஹம்மது பஷீர், ராம சுப்பு, சட்டமன்ற உறுப்பி னர்கள் வி. கருப்பசாமி பாண்டியன், எம். மாலை ராஜா, எம். கலீலுர் ரஹ்மான், எச். அப்துல் பாசித் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில செயலாளர்களான கவிஞர் இஸட். ஜபருல் லாஹ், ராமநாதபுரம் ஷாஜஹான், நெல்லை அப்துல் மஜீத், கமுதி பஷீர், காயல் மஹப+ப் ஆகியோர் உரை யாற்றுகின்றனர். நெல்லை மாவட்டச் செயலாளர்கள் எல்.கே. எஸ். மீரான் மொய்தீன் வரவேற்றுப் பேசுகிறார். டி.எஸ். செய்யது முஹம் மது நன்றி கூறுகிறார். இம்மாநாட்டிற்கான சிறப்பான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக முஸ்லிம் சமுதாயம் இம்மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.
10 லட்சம் உறுப்பினர் சேர்ப்பு
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு தமிழ் நாட்டில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகி றது. உறுப்பினர் சேர்ப்பு முடிவடைந்த பகுதிகளில் கிளைத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடை பெற்று வருகிறது. கொங்கு மண்டலத்தில் மே மாதம் இந்த பயிற்சி முகாம் நடைபெறும்.
திருமண கட்டாயப் பதிவு சட்டம்
இந்திய உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக அரசு அமல்படுத்தி யுள்ள திருமண கட்டாயப் பதிவு சட்டம் சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு ஏற்பட் டுள்ள ஐயப்பாடுகளை நீக்க தமிழக அரசிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்பட உள்ளது. அதற்கு விரைவில் தீர்வு காணப்பட்டு விடும். இதுபற்றி சமுதாயம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கும் மத்திய அரசில் முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்கான அக்கறை காட்டப்பட்டு வருகிறது. தற்போதைய பட்ஜெட்டிலும் சிறுபான்மையினர் நலனுக்கு ரூ.2600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags: மாநாடு முஸ்லிம் லீக்

Share this