Breaking News

தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கின்றது

நிர்வாகி
0
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றறக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தமிழக நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்த வரவு செலவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. கரும்பு மற்றும் நெல் கொள்முதல் விலையை உயர்த்தியது, சொட்டு நீர் பாசன திட்டத்தை விரிவுப்படுத்தியது, இயற்கை விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பது போன்ற சில வரவேற்க்கத் தக்க அம்சங்கள் இந்த வரவு செலவு திட்டத்தில் இருந்த போதினும் கடுமையான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உருப்படியான எவ்வித நடவடிக்கையும் இந்த வரவு செலவு திட்டத்தில் அளிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கின்றது.


செம்மொழி மாநாட்டிற்காக கோடானக் கோடி ரூபாய் இந்த வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போதினும், தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நிதி உதவி பெறும் தமிழ் மற்றும் சிறுபான்மை மொழி வழி பள்ளிக்கூடங்களில் சுயநிதி திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அரசு மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற நீண்டக் கால கோரிக்கையை திமுக அரசு இந்த வரவு செலவு திட்டத்திலும் புறக்கணித்திருப்பது வேதனை அளிக்கின்றது. இதே போல் சிறுபான்மை மக்களின் நலனுக்காக புதிதாக எந்தவொரு நலத்திட்டமும் இந்த வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்படாததும் ஏமாற்றத்தை அளிக்கின்றது.

மொத்தத்தில் இந்த வரவு செலவு அறிக்கை சுமையாக இல்லாவிட்டாலும் சுகம் தராத வகையில் அமைந்துள்ளது.
 தகவல் ஆதாரம்:  தமுமுக

Tags: தமிழக பட்ஜெட்

Share this