Breaking News

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பாராட்டு

நிர்வாகி
0
முதல்வர் கலைஞரின் திட்டங்கள் பிறமாநில அரசுகளின் கவனத்தை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைப் பற்றி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகச் சட்டப்பேரவைப் பசுமைக் கட்டடம், முதல்வர் கலைஞர் அவர்களின் இதயத்தில் உதித்த கனவின் நனவு! நவீன கட்டடக் கலையின் ~கவின் பெரும் வனப்பு|!

இப்புதிய மன்றத்தில் தமிழக அரசின் 2010-2011ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகனார் 19.3.2010 வெள்ளியன்று வழங்கி புதிய வரலாறு படைத்திருக்கிறார்.

அரசின் நிதிநிலை அறிக்கையை இந்த ஆண்டின் வரவு செலவு திட்ட வெளியீடு என்று கருதுவது வாடிக்கை! ஆனால், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை, சங்கத் தமிழ் சாயலில் தங்கத் தமிழ் இலக்கியப் பேழையாக ஒளிர்கிறது@ அதைப் பார்க்க, படிக்க, நுகர, சுவைக்க நெஞ்சம் குளிர்கிறது.

~~சமூக நீதி, தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடு எனும் அடிப்படைக் குறிக்கோள்களை|| கலைஞர் அரசு எவ்வாறு நிறைவேற்றி மக்களின் நிறைவான நன்மதிப்பைத் தொடர்ந்து பெற்று வருகிறது என்பதை இந்த அறிக்கை ஒவ்வொருவருக்கும் கற்றுத் தருகிறது. அரசின் கொள்கையோ, திட்டமோ, அனைவருக்கும் பொருந்தியதாகவும், எல்லோரையும் இணைப்பதாகவும், எல்லாத் தரப்பினரையும் வாழ்விப்பதாகவும், மகிழ்விப்பதாக வும் இருக்க வேண்டும் என்னும் பொது நியதிக்கு இந்த நிதி நிலை அறிக்கை புதியதோர் படைப்பிலக்கியம்!

ஆம்! மனிதப் பணிதான் புனிதப் பணி! இதைச் செயல்படுத்தும் கலைஞர் அரசு என்றென்றும் தமிழகத்து அணியாகும்! அழகாகும்!

பட்ஜெட் முழுவதையும் கவனித்துப் பார்த்தால் எதுவும் விடுபடவில்லை@ எவரும் விடுபடவில்லை@ எத்துறையும் விடுபடவில்லை@ எத்தொழிலும் விடுபடவில்லை, ஒவ்வொன்றைப் பற்றிய நேற்றைய நிலையை நினைவு படுத்தி, இன்றைய நிலையை எடுத்துக் கூறி, நாளைய உயர்நிலையை எய்திட வழிவகையை விவரித்துக் கூறிடும் அறிவுப் பெட்டகமாக இது திகழ்கிறது.

நான் எதையும் எவரையும் வசைபாடி அறியேன்@ நல்லதையும், நல்லவர்களையும் வாழ்த்துப்பாடியே பழக்கப்பட்டவன். கலைஞரின்-கலைஞர் அரசின்-கலைஞர் குடும்பத்தின் வாழ்த்துப்பாடியான். ஆனால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் படித்ததும் வாழ்த்துவதற்கு எனக்கு வார்த்தைகள் கிடைத்தில. எல்லோரையும் கலைஞர் அரசுக்குப் படியவைக்கும் படியாக இதன் ஒவ்வொரு வரியும், அதில் அடங்கிய எழுத்தும் அமைந்திருக்கிறது. உயர்தனிச் செம்மொழி தமிழுக்கு ஒல்காப் புகழ் மேவிய தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் சங்கம் வரப்போகிறது என்னும் அறிவிப்பு ஒன்றே தமிழ் கூரும் நல்லுலகிற்கு பேரின்பம் தரப்போதுமானதாகும்.

ஏறும் விலைவாசியை இறக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துக்கும் வரிக்குறைப் பும், வரி விலக்கும் அளித்திருப்பது ஏழை எளிய சாதாரண சாமானியரின் நெஞ்சங்களை மகிழ்விக்கும். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலமே பொருளாதார சுமையைத் தாங்கும் சக்தியைப் பெருக்க முடியும். இது பொருhளாதார நியதி. ஆனால், கலைஞரானா மிக்ஸ்-கலைஞர் பொருளாதார சித்தாந்தத்தில் மக்களின் தேவைக்கு உரிய பொருட்களின் விலை குறைத்தும், இலவசமாகவும், பலவகை உதவிகளும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்வதன் மூலமே விலைவாசி ஏற்றப் பளுவைக் குறைக்க முடியும் என்பது நிரூபனமாகிக் கொண்டிருக்கிறது.

கலைஞரின் குடும்ப நல, சமூக நலத் திட்டங்கள் இன்றைக்கு பிறமா நிலங்களின் கவனத்தை-இந்திய அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பது கண்கூடு.

சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களின் இதயமாக இருப்பவர் கலைஞர் ஆவார். இளைஞர்களின் வாழ்வாதாரத் துக்கு வழிவகை செய்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 12,500 சிறுபான்மையினத் தொழில் முனை வோருக்கு 25கோடி கடனுதவி வழங்க முன் வந்துள்ளது மிகுந்த வரவேற்புக் குரியதாகும். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு ஓர் அமைச்சகத்தை உருவாக்குவது உலக நாடுகளுக்கு ஓர் அரிய முன் மாதிரியாகும்.

மத்தியிலும் பிற மாநிலங்களிலும் உள்ளதுபோல தமிழகத்தில் சிறுபான்மையினர் நல அமைச்சகமும் வரும் என்னும் எதிர்பார்ப்பு ஒன்று உள்ளது. தமிழகத்தில் இதுவரை 117 தமிழ் சான்றோர் நூற்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 110 நூற்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக் காலங்களில்தான் நாட்டுடமையாயின. இப்பொழுது 22 தமிழ்ச் சான்றோரின் நூற்கள் நாட்டுடமை ஆக்கப்படவுள்ளன. இவற்றுள் டாக்டர் எஸ்.எம். கமால் அவர்கள் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. தமிழக முஸ்லிம் சமுதாயம் இதற்கு நன்றி தெரிவிக்கிறது. அதோடு, கூத்தாநல்லூர் கவிஞர் சாரண பாஸ்கரனாரின் பெயரும் இத்துடன் இணைக்கப்பட சமுதாயம் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம். இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றில் சென்ற நூற்றாண்டில் காவியம் எழுதிய கவிஞர் அவர். அவரின் ய+சுப்-ஜுலைகா காப்பியம் இறவாத் தமிழ் இலக்கியங்களில் ஒன்றாக விளங்குகிறது. சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டு வாழ்ந்த சமுதாயத்தினரை-குறிப்பாக அருந்ததியினரை உயர்த்தும் வழிக்கு இட ஒதுக்கீடு அளித்ததோடு, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த ~ஒண்டி வீரன்| என்னும் சுதந்திரப் பேராட்ட வீரனுக்கு நினைவுச் சின்னம் நெல்லையில் எழுப்ப இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய சிந்தனை ப+க்கும் ப+த்தடாகம் கலைஞராகத் தான் இருக்க முடியும்! ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர் அவர்! வாழ்க கலைஞர்! வளர்க தமிழகம்! வெல்க தமிழ் நெறி! இவ்வாறு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: முஸ்லிம் லீக் இணையதளம்

Tags: பாராட்டு முஸ்லிம் லீக்

Share this