Breaking News

வீராணம் ஏரியில் மீன் வளத்தை பெருக்க 1 லட்சத்து 15 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது

நிர்வாகி
0
வீராணம் ஏரியில் மீன் வளத்தை பெருக்க 1 லட்சத்து 15 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.
வீராணம் ஏரி

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.இந்த ஏரி மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரியின் மூலம் சுமார் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது. சென் னைக்கு தினந்தோறும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ,மே, ஜுன் ஆகிய 3 மாதங்களில் அதிக அளவில் மீனவர்கள் உரிமம் பெற்று மீன் பிடித்து வருவர்.

இந்த ஆண்டு வீராணம் ஏரியில் அதிக அளவு பாசி படர்ந்து உள்ளதால் மீன்களை அதிக அளவில் பிடிக்க முடிய வில்லை என்று மீனவர்கள் புகார் கூறி வருகின்றனர்.இதை அறிந்த தமிழ்நாடு அரசு மீன்துறை ,தேசிய மீன் வள மேம்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் வீராணம் ஏரியில் மீன்வளத்தை பெருக்கிட 37 லட்சத்து 59ஆயிரம் மீன் குஞ்சுகளை விட முடிவு செய்யப்பட்டது.

1 லட்சத்து 15 ஆயிரம் மீன் குஞ்சுகள்

அதன்படி நேற்று முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் திருவாரூர் உள்நாட்டு மீன்வளம் கட்டுப் பாட்டில் உள்ள சட்டமனைப் பட்டி மீன் குஞ்சுகள் வளர்ப்பு நிலையத்தில் இருந்து சாதா கெண்டை 1 லட்சத்து 15 ஆயிரம் மீன் குஞ்சுகள் வீராணம் ஏரியின் மெயின் மதகான கந்தக்குமரன் ராதா மதகு வழியாக விடப் பட்டது.

இதற்கு சென்னை மீன் வளத் துறை உதவி இயக்குனர் தில்லைகோவிந்தன் தலைமை தாங்கி மீன்குஞ்சுகளை ஏரியில் விட்டார். இதில் சிதம்பரம் உதவி இயக்குனர் கலியமூர்த்தி, மீன் ஆய்வாளர் மனுநீதி சோழன், குணசேகரன், மீனவர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வெங்கடேசன், துரை, மீன் வள மேற்பார்வை யாளர் பாப்பையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மீன்கள் 6 மாதங்களில் 1 கிலோ எடை கொண்டதாக வளர்ச்சி அடையும்.இதனால் மீன் வளம் பெருகும்.பாசிகளை இந்த மீன்கள் அழித்துவிடும். இதேபோல் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மீன் குஞ்சுகள் விடப்படும் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் தில்லைகோவிந் தன் கூறினார்.
நன்றி :தினத்தந்தி

Share this