Breaking News

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5லட்சத்தில் ஸ்கேன் கருவிகள் எம். அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தார்

நிர்வாகி
0
வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதி யிலிருந்து ரூ. 5லட்சத்தில் ஸ்கேன் கருவிகள், மருந் துப் பொருட்கள் மற்றும் மருத்துவ முகாம் நடை பெற்றது.


வேலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்வத் துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம், சார் பனாமேடு, ஆஸ்ரம் பள்ளி யில் நடை பெற்றது.

சிறப்பு சுகாதார முகாமை வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசு கையில் குறிப்பிட்டதா வது:

சுகாதாரம் காக்கப்படு வதுடன் குடிநீர் பிரச் சினை தீர்க்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் கூறிய படி பணிகளை நிறைவேறி வருகிறேன்.

வேலூர் எம்.பி., நிதியிலி ருந்து ரூ. 5லட்சம் செலவில் ஸ்கேன் கருவிகளும், மருந் துகள் மற்றும் பொருட்கள் வாங்கப்பட்டு இந்த மருத் துவ முகாம் நடைபெறு கிறது.

சுகாதாரப் பணிகளுக் காக தொடர்ந்து இந்த மருத்துவ முகாம்கள் தொகுதி முழுவதும் நடை பெறும்.

குடிநீர் தேவையை சமாளிக்கும் பொருட்டு தமிழக அரசின் ஒத் துழைப்போடு மாவட்ட ஆட்சித் தலைவர் முயற்சி யில் பணிகள் முடுக்கி விடப்படும்.

இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் பேசுகை யில், இந்த மருத்துவ முகாம் சார்பாக ரூ. மூன்றரை லட்சம் செலவில் இரண்டு ஸ்கேன் கருவிகள் வாங்கப்பட்டு,அலுவலக பொருட்கள், மருந்துகள் வாங்க ரூ. 1 லட்சமும், முகாமை நடத்த ரூ. 50 ஆயிரமும் என மொத்தம் ரூ. 5 லட்சம் செலவிடப் படுகிறது. இது போல நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 27 ஆயிரம் மக்கள் பயன் பெற்று உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் மழை குறைவானாலும் 5 வருடங்களாக பாலாற்றில் போகாததாலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள் ளது. இதைப் போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரு. ஆறரை கோடி குடிநீர்ப் பிரச்சினைக்காக செல விடப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சிக்காக ரூ. 20 லட்சம் தற்பொது ஒதுக் கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில்அல மேலு மங்காபுரம், நவ்லாக் ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு ஸ்கேன்களையும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் தலா ரூ. 6000 வீதம் 43 பயனாளி களுக்குமாக மொத்தம் 4 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாய்க்கான காசோலை கள் வழங்கப்பட்டன.

விழாவில் வேலூர் சட்ட மன்ற உறுப்பினர் சி.ஞான சேகரன், முன்னாள் எம்.பி. முகம்மதுசகி, மாநகராட்சி துணை மேயர் தி.ஆ.முகம் மது சாதிக்பாஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறப்பு மருத்துவ முகாம், பல்வேறு துறை மருத்துவர் ஆலோசனை, சித்த மருத்துவ பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, ஸ்கேன், இ.சி.ஜி, பல்துறை விழிப் புணர்வு கண்காட்சி, கலைஞர் காப்பீட்டுத் திட்ட பரிந்துரை, நம் பிக்கை மைய ஆலோசனை நடைபெற்ற இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் மற்றும் மாவட்ட ஆட்சி யர் ஆகியோர் பார்வை யிட்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி முகாம் நடைபெற்றது.

Share this