இஸ்லாமிய பெண்களுக்கு பிரச்சனை !!!!!!!!
நிர்வாகி
0
அன்பிற்கினிய இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
நான் சில தினங்களுக்கு முன்பாக என் மனைவிக்கு பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்காக என் மனைவியின் புகைபடத்தை பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுத்தேன். அப்புகைபடத்தில் என் மனைவி இஸ்லாம் காட்டித்தந்த முறையில் (முகத்தைத்தவிர காது, கழுத்து, முடி ஆகியவற்றை மறைத்து சரியாக) ஹிஜாப் அணிந்திருந்தாள். ஆனால் அந்த புகைப்படத்தைப் பார்த்த பாஸ்போர்ட் அலுவலகத்தின் ஆஃபிஸர் இப்புகைப்படம் சட்டப்படி செல்லாது, இப்புகைபடத்தில் இப்பெண்ணின் காது தெரியவில்லை, ஆகையால் காது தெரியும் வகையில் புகைப்படம் எடுத்து கொண்டுவாருங்கள், அப்பொழுது தான் பாஸ்போர்ட் அப்ளை செய்ய முடியும் இல்லையென்றால் பாஸ்போர்டிற்கு வாய்ப்பிள்ளை என்று கூறிவிட்டார்.
நான் திடுகிட்டுப்போனேன். உடனே என் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு இச்சம்பவத்தை கூறினேன் அவர்கள் கூறிய பதிலை கேட்டதும் மீண்டும் பதறிப்போனேன். அப்பதிலானது 'சில தினங்களுக்கு முன்பாக என் குடும்பத்தில் ஒரு பெண் ஹஜ் செய்வதற்காக பாஸ்போர்ட் அப்ளை செய்தார்கள், அவர்கள் அப்ளை செய்யும் பொழுதும் இப்பதிலை கூறிவிட்டார்கள். ஆகவே ஹஜ் செல்லக்கூடிய அப்பெண்ணும் காது தெரியும் வகையில் புகைப்படத்தை எடுத்துத்தான் பாஸ்போர்ட் அப்ளை செய்தார்கள் என்று கூறினார்கள்.
இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களே ! விழித்துக்கொள்ளுங்கள்
இன்று புகைப்படத்தில் காது தெரியவேண்டும் என்று கூறுகிறார்கள் நாளை கழுத்து தெரிய வேண்டும் என்று கூறுவார்கள் காலம் செல்லச்செல்ல தலையில் முக்காடே இருக்கக்கூடாது என்பார்கள் பிறகு என்ன ஹிஜாபில்லாமல் புகைப்படம் எடுப்பது சர்வசாதாரணமாகிவிடும். அல்லாஹ்வின் வேதனையை எதிர்பார்க்க வேண்டியது தான்.(அல்லாஹ் காப்பாற்றுவானாக)
இச்சட்டத்தைப்பற்றி ஆராய்ந்து உடனே போராட்டத்தில் இறங்கவில்லையானால் ஆயிரக்கணக்கான மக்கள் காது தெரியும் வகையில் புகைப்படம் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் இது ஹிஜாபே இல்லை. நிச்சயம் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களாகிய நீங்கள் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லி ஆக வேண்டும்.
தயவு செய்து அல்லாஹ்விற்காக இப்பிரச்சனையை கையிலெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இக்கடிதத்தை படிக்கக்கூடிய நூற்றுக்கணக்கான சகோதரர்களே ! நீங்களும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களிடத்தில் வலியுறுத்துங்களேன்.
(அல்லாஹ்வின் மீதாணயாக இச்சம்பவம் உண்மையானதே)
நன்றி:மக்கள் நேசன்