Breaking News

அடப்பாவிகளா! இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா?

நிர்வாகி
0
சில வருடங்களுக்குமுன் சானியா மிர்ஸா டென்னிஸ் விளையாடும்போது அணியும் குட்டைப் பாவடை குறித்து முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது "எந்த ஆடையணிந்து விளையாடுவது என்று முடிவெடுக்க வேண்டியது சானியாவே தவிர மற்றவர்களல்லர்" என்று வியாக்கியானம் பேசப்பட்டது. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர் சோயப் மாலிக்கை திருமணம்செய்ய முடிவெடுத்திருப்பதற்கு அப்போது பெண்ணுரிமைபேசிய கழிசடைகள்தான் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றன(ர்).

சானியாவுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்பப்பெற வேண்டுமாம்.சானியா இந்தியாவுக்காக இனி விளையாடக் கூடாதாம்! சானியாவை நாடுகடத்த வேண்டுமாம்!அதெல்லாம் சரி! போனமாதம்வரை வாய்கிழியக்கூக்குரலிட்ட பெண்ணுரிமை என்னானது? யாருடைய விந்தை தன் கருப்பையில் சுமக்க வேண்டுமென்று முடிவுசெய்ய வேண்டிய உரிமைகோரிய தஸ்லிமாவுக்கு இந்தியாவில் இருக்கும் உரிமையை விடவா சானியா மோசமான உரிமை கோரிவிட்டார்?

இருவர் மனம்விரும்பி முறையற்ற உறவு கொள்வதே தவறல்ல என்று நமது உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளபோது முறையாகத் திருமணம் செய்வதைத் தடுப்பது சட்டப்படியும் சானியாபடியும் உரிமைமீறலே!!

************ *

நடிகை குஷ்பு பேசிய கற்பு விவகாரத்தில் கருத்துச்சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதிகள், இருவர் விரும்பி தவறான உறவு வைத்துக் கொண்டால் சட்டப்படி குற்றமில்லை.அதைத் தடுப்பதற்கு இந்திய குற்றவியல் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் வழியில்லை" என்றதோடு குஷ்புவுக்கு எதிராக வழக்காடிய வக்கீலைப் பார்த்து,"குஷ்புவின் கருத்தால் நீங்கள் எப்படி நேரடியாகப் பாதிக்கப்பட்டீர்கள்? உங்களுக்கு மகள் இருக்கிறாரா?" என்றெல்லாம் கேட்டுள்ளனர்.

நமது விபச்சாரத் தடுப்புச் சட்டத்திலுள்ள ஓட்டைகளைச் சொல்லி,அவற்றை அடைக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்திருந்தால் நீதிபதியின் சமூக அக்கரை பாராட்டப் பட்டிருக்கும். பொது நலனுக்காக வழக்கிட்டவரை நேரடியாக எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதன் மூலம்,நேரடி பாதிப்பு ஏற்படாதவரை எந்தக் குற்றமும் சட்டப்படி தவறல்ல என்று சொல்கிறார்களோ?

இனிமேல் விபச்சார வழக்குகளில் பிடிபடுபவர்களெல்லாம் இதே காரணத்தை போலீஸாரிடம் திருப்பிக்கேட்டால் சமூக ஒழுங்கு,கலாச்சாரம் என்னாவது? இருவர் மனம்விரும்பி விபச்சாரம் செய்வதைப்போல்,விரும்பி போதை மருந்து சாப்பிட்டாலும் இதே லாஜிக் பொருந்தும்தானே!மேலும் அதனால் நீதிபதி நேரடியாகப் பாதிக்கப்படவில்லையே! நித்தியானந்தாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 'நியாயம்' கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றம் செல்லலாம்!

************ ***

ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் ஆனந்தக்கூத்தாடிய நித்தியானந்தாவை போலீஸார் எப்போது பிடித்து சட்டத்தின் முன் கொண்டுவருவார்கள் என்று தெரியவில்லை. கும்பமேளாவிலிருந்து வீடியோ விளக்கங்கள் கொடுத்து வரும் இவனைப்பிடிப்பதில் போலீசுக்கு என்ன சிரமமோ தெரியவில்லை. சங்கராச்சாரியாருக்குக் கிடைத்ததுபோல் பல்டியடிக்கும் சாட்சிகளுக்காகக் காத்திருக்கிறார்களோ என்னவோ?

************ ****

காஞ்சி சங்கராச்சாரியார் ஆண்டவனின் அணுக்கிரகத்தால் இன்னும் சில நாட்களில் விடுதலை அடைந்து புதுப்பொழிவுடன் காஞ்சிமடத்திலிருந்து அருளாசி வழங்குவார் என்றே தெரிகிறது. அவருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த சாட்சிகள்பலர் அடுத்தடுத்து அந்தர்பல்டி அடித்துள்ள நிலையில் இனிமேலும் மகா அப்பாவி சங்கராச்சாரியாரை கோர்ட்டு வழக்கு என்று நீதிமன்றப் படியேறச் செய்வது தர்மமல்ல! துறவிகள் பாவம் பொல்லாதது!

Share this