Breaking News

லால்பேட்டை பேரூராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகள் சுட்டுக் கொல்லப்படும்

நிர்வாகி
0
லால்பேட்டை,ஏப்.1-


லால் பேட்டை பேரூராட் சியில் சுற்றித்திரியும் பன்றி களை 10 நாட்களுக்குள் அப்புறப் படுத்தாவிட்டால் சுட்டுக் கொல்லப்படும் என்று செயல்அதிகாரி பாலசுப்பிரமணியன் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

பன்றிகள் தொல்லை

கடலூர் மாவட்டம் லால் பேட்டை பேரூராட்சியில் அதிக அளவு பன்றிகள் சுற்றித்திரிந்து வருகிறது.இத னால் சுகாதார சீர்க்கேடு ஏற் படும் நிலை உருவாகி உள் ளது.பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைïறு விளைவிக்கும் வகையில் அங்கும், இங்குமாக பன்றிகள் சுற்றித்திரிந்து வருகிறது.

கடந்த மாதம் பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த பன்றி களை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டன.இதில் 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டன.அதன்பிறகு பன்றிகள் தொல்லை இல்லாமல் இருந்தது.தற்போது மீண்டும் பேரூராட்சி பகுதியில் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து உள் ளது.

சுட்டுக்கொல்லப்படும்

ஆகவே பேரூராட்சி பகுதி களில் சுற்றித்திரியும் பன்றி களை அதன் உரிமை யாளர்கள் 10 நாட்க ளுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்.இல்லையென்றால் பன்றிகள் சுட்டுக் கொல்லப்படும்.

மேற்கண்ட தகவலை செயல் அதிகாரி பாலசுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் சபியுல்லா ஆகியோர் தெரிவித்தனர்.

Tags: பேரூராட்சி லால்பேட்டை

Share this