Breaking News

பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் இந்திய தேசிய லீக் தலைவர் பேட்டி

நிர்வாகி
0
இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய அரசியல் நிர்வாக குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அகில இந்திய தலைவர் முகமது சுலைமான் தலைமை தாங்கினார்.
 மாநில தலைவர் எஸ்.ஜே.இனாயத்துல்லா, கேரள மாநில எம்.எல்.ஏ. பி.எம்.ஏ. சலாம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் சமத் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, கட்சியின் அகில இந்திய தலைவர் முகமது சுலைமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், உள் ஒதுக்கீட்டுடன் அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ஜஸ்டிஸ் மிஸ்ரா கமிஷனின் இஸ்லாமியர்கள் மற்றும் வேறு சில சிறுபான்மை மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு பரிந்துரையை உடனடியாக தாக்கல் செய்து அமல்படுத்த வேண்டும்.

6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாய கல்வி என்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this