Breaking News

காயிதெ மில்லத் 114வதுபிறந்த நாள்: ஜூன் 9 பள்ளப்பட்டியில்; முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு

நிர்வாகி
0
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் அவர்களுடைய 114-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது.


2010 ஜூன் 9-ம் தேதி புதன்கிழமை கரூர் மாவட் டம் பள்ளப்பட்டியில் நடைபெறும் இம் மாநாட் டில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது பங் கேற்கிறார். மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென் னரசு மற்றும் மாநிலம் முழுவதிலுமிருந்து கல்வித் துறை நிபுணர்கள் இம் மாநாட்டில் பங்கேற்க வேண்டுகோள் விடப்பட் டுள்ளது.

காயிதெ மில்லத் பிறந்த நாள்

இந்திய முஸ்லிம்களின் அரசியல் பேரியக்கமான இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நாடு தழுவிய அளவில் சமுதாயப் பணிகளை முடுக்கி விடவும், ஒருங்கி ணைக்கவும் உரிய ஏற்பாடு களை செய்து வருகிறது. 2010 ஜனவரி 15, 16 தேதிகளில் பெங்களுருவில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அகில இந்தியப் பிரதிநிதி கள் மாநாட்டில் அதன் தேசியப் பொதுச் செயலா ளர் பேராசிரியர்கே.எம். காதர் மொகிதீன் சமர்ப் பித்த 7 சேவைத் திட்டங்க ளில் ஒவ்வொரு ஆண்டும் காயிதெ மில்லத் பிறந்த நாள் விழாவை மாநிலம் தழுவிய அளவில் நடத்த வேண்டும். கட்சிக்காக உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் இந்த விழாவில் கவுரவிக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி திருச்சியில் நடை பெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட் டத்தில் நிறைவேற்றப்பட் டுள்ள தீர்மானத்தில் காயிதெ மில்லத் பிறந்த நாளை கல்வி தினமாக அறிவித்து ஏழை எளிய மாணவ - மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங் கள், சீருடைகள், காலணி கள் வழங்குவதோடு, உயர் கல்வி பயில வாய்ப்பில்லா மல் இருக்கும் மாணவ - மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்க வேண்டும்.

10 மற்றும் 12 வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் முஸ்லிம் மாண வர்களுக்கும், மாணவியருக் கும் ரொக்கப்பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும்.

இதுதவிர மிகச் சிறப்பான சேவையாற்றும் முஸ்லிம் லீகினர் மூவரைத் தேர்வு செய்து அவர்க ளுக்கு ஹகாயிதெ மில்லத் சமுதாய சேவை விருது
வழங்கி கவுரவிக்க வேண் டும். அந்த விழாவில் முஸ்லிம்களைப் பற்றிய நூல் ஒன்றும் வெளியிடச் செய்து அதை எழுதியவ ருக்கு தக்க சன்மானம் வழங்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட் டது.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டு காயிதெ மில்லத் அவர்களின் 114.வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற உள் ளது.

பள்ளப்பட்டியில் மாநாடு

கரூர் மாவட்டம் அர வாக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி மக்கள் மன்ற திருமண கூடத்தில் வரும் 2010 ஜூன் 9-ம் தேதி புதன்கிழமை காயிதெ மில்லத் பிறந்த நாள் விழா, கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது.


இம் மாநாட்டில் இந் திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ.அஹமது, தேசியப் பொதுச் செயலாளர் பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் முஸ்லிம் லீகின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பி னர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இம் மாநாடு கல்வி விழிப்புணர்வு மாநாடாக இருப்பதால் இம் மாநாட்டில் பங்கேற்க செய்ய பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசை அழைப்பது என்றும், மாநிலம் தழுவிய அளவில் தலைசிறந்த கல்வி யாளர்கள், கல்வி நிறுவனங் களின் தலைவர்கள் அனை வரையும் அழைத்து அவர் கள் ஆலோசனையை பெற்று கல்வித் துறையில் சமுதாயத்தின் கோரிக் கையை தமிழக அரசுக்கு எடுத்துரைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மாணவர்களுக்கு பரிசுத் தொகை

நடைபெற்றுள்ள 10 ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் முதல் இடம் பெறும் முஸ்லிம் மாணவர் மற்றும் மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.4 ஆயிரமும், மூன்றாவது பரிசாக தலா ரூ.3 ஆயிரமும் வழங்குவது என்றும்,

மேல்நிலைத்தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெறும் முஸ்லிம் மாணவ - மாணவியருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பெறுவோருக்கு தலா 8 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பெறுவோருக்கு தலா 6 ஆயிரம் ரூபாயும் ரொக்கப்பரிசு வழங்கப் படும்.


முஸ்லிம் லீக் பற்றி நூல் வெளியீடுவோருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

முஸ்லிம் லீகின் மிகச் சிறந்த ஊழியர்கள் மூவர் தேர்வு செய்யப்பட்டு அவர் களுக்கு காயிதெ மில்லத் சமுதாய சேவை விருது வழங்கி கவுரவிக்கப்படும்.

மாநாட்டு வரவேற்புக் குழு

இம் மாநாட்டிற்காக எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ. தலைமையில் மாநாட்டு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக் குழுவில் உறுப் பினர்களாக கீழ்க்கண்ட வர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர்.

கரூர் மாவட்டத் தலைவர் டி.எம்.ஏ. முபாரக் பாஷா, மாவட்டச் செய லாளர் எம்.ஏ. மஹப+ப் அலி, மாவட்டப் பொரு ளாளர் ராசி சேக் அப்துல் காதர், திருச்சி மண்டல அமைப்புச் செயலாளர் உசேன் லெவை ஓ.எம். காஜாமொய்தீன், பள்ளப் பட்டி 5-து வார்டு உறுப் பினர் மோதி எம்.எம். முபா ரக் அலி எம்.சி., பள்ளப் பட்டி 6-வது வாருடு உறுப்பினர் நெட்ட வான என்.எஸ். லியாகத் அலி, பள்ளப்பட்டி நகரத் தலைவர் கம்பத்து கே.ஏ. கமால் பாஷா, பள்ளப் பட்டி நகரச் செயலாளர் வாப்பு வி.ஏ. அப+தாஹிர், நகர பிரைமரி பொருளா ளர் சேமியான் எஸ்.ஏ. அப்துல் சமது,

பள்ளப்பட்டி நகர இளைஞர் அணி அமைப் பாளர் கான்ரத்த கே.எ. அர்ப் அலி, மாவட் டப் பிரதிநிதிகள் மன்னான் ஃபுர்கானுல்லாஹ், அரவை கோட்டை ஏ.ஏ. முஹம்மது சலீம், கேர்நகர்பிரைமரி தலைவர் பி. சாதிக் பாட்ஷா, அரவக்குறிச்சி பிரைமரி தலைவர் எம்.சி .எம்.ஏ. காஜாமைதீன்,

சின்னதாராபுரம் பிரை மரி தலைவர் எச். ஷாகுல் ஹமீது, ஜமீன் ஆத்தூர் பிரைமரி தலைவர் முஹம் மது ஷபி காதிரி, தோட் டக்குறிச்சி பிரைமரி அமைப்பாளர் எம். முஹம் மது ய+சுப், வேலாயுதம் பாளையம் பிரைமரி அமைப்பாளர் வி.எம். ரஹ மத்துல்லாஹ், வெங்கவேடு பிரைமரி அமைப்பாளர் பஷீரி, குருணிகுளத்துப்பட்டு பிரைமரி கவுரவத் தலைவர் எம். மஜீத், சிந்தாமணிப் பட்டி பிரைமரி தலைவர் சுல்தான் சையது இப்ரா ஹீம் ரஷாதி,

மைலம்பட்டி பிரைமரி தலைவர் எஸ்.எம். அப்துல் வஹாப், தோகை மலை பிரைமரி தலைவர் இ. இப்ராஹீம் ஷா, நெய் தலூர் காலனி பிரைமரி தலைவர் இ. காதர் அலி, வாங்கல் பிரைமரி தலைவர் எம்.எஸ். அப்துல் காதிர் ஷக்காபி, இனாம் கரூர் நகராட்சி பிரைமரி தலைவர் ஒய். முஹம்மது பஷீர், குளித்தலை பிரை மரி தலைவர் கே.எஸ்.எம். அப+பக்கர், கரூர் பிரைமரி தலைவர் எஸ்.எம். முஹம் மது ஷபி,


இம் மாநாட்டிற்கான முழு ஏற்பாடுகளை அர வாக்குறிச்சி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.எ. கலீலுர் ரஹ்மான் தலைமையில் கரூர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர் வாகிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர். இம் மாநாட்டில் தமிழ கம் முழுவதிலுமிருந்தும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகினரும், கல்வியாளர் களும் கலந்து கொள்கின்ற னர்.

முஸ்லிம் கல்வியாளர்களின் ஆலோசனைக் குழு

கல்வித் துறை சம்பந்த மாக முஸ்லிம்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கல்வியாளர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் விவரம்-

சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மற்றும் ஓமியட் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ். சாதிக், கோவை மன்பவுல் உலூம் மேனிலைப்பள்ளி தாளாளர் எல்.எம். அப்துல் ஜலீல், கூடலூர் தாலுகா முஸ்லிம் எதீம்கானா நிறுவனங்க ளின் தலைவர் கே.பி. முஹம்மது, தஞ்சை - சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பெற் றோர், ஆசிரியர் கழகத் தலைவர் எம்.ஏ. குலாம் மைதீன், தென்காசி அல் ஹிதாயா கல்வி அறக் கட்டளை செயலாளர் எம்.எஸ். துராப்ஷா.


ஈரோடு ஈ.கே.எம். அப்துல் கனி மத்ரஸ இஸ்லாமியா ஆரம்ப உயர்நிலைப்பள்ளி தாளாளர் ஜி. தாஜ் முஹிய் யத்தீன், கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபி உயர் நிலைப்பள்ளி தாளாளர் எம். சாகுல் ஹமீது, ஓமியட் நிர்வாகக் குழு உறுப்பினர் இன்ஜினியர் பி. ஷப்பீர் அஹமது, நாகூர் கௌ தியா மேல்நிலைப் பள்ளி தாளாளர் எம்.ஓ.எம். செய்யது அலி,


தமிழ்நாடு உர்தூ ஆசிரியர் ய+னியன் மாநில அமைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான், காயல்பட்டினம் வாவு வஜிஹா பெண்கள் கல் லூரி தாளாளர் எ.எம். முஹ்தஜிம், பள்ளப்பட்டி கல்விச் சங்க செயலாளர் முஹம்மது இக்பால், வாணியம்பாடி மத்ரஸயே முபீதேஆம் செயலாளர் எம். நிஸார் அஹமது, மேலப்பாளையம் அன்னை ஹாஜரா பெண்கள் கல்லூரி செயலாளர் இன் ஜினியர் செய்யது அஹ மது, சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்க லைக்கழக இயக்குனர் வி.என்.ஏ. ஜலால்.


இம் மாநாட்டின் முன்னதாக இக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-05-2010 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு முஸ்லிம் லீக் தலைமை நிலையம் காயிதெ மில்லத் மன்ஸி லில் 23-ம் தேதி சென்னை யில் நடைபெறுகிறது.

மேற்கண்ட தகவல்களை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் அறிவித்துள்ளார்.

Share this