Breaking News

1944ல் நேதாஜியுடையப் படை அதிரடியாக முன்னேறி வருவதை அறிந்த பிரித்தானியப் படை

நிர்வாகி
0
ஏகஇறைவனின் திருப்பெயரால்....


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


இந்தியாவின் பூரண சுதந்திரத்திற்காக முஸ்லீம்கள் பிரித்தானிய வல்லரசை எதிர்த்து ஆயுதப்புரட்சி செய்தக் காரணத்தால் பிரித்தானியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியினால் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என்று உறவு முறைக் கூறிப் பழகி வந்த ஹிந்துக்களிடமிருந்து முஸ்லீம்களை தூரப்படுத்தும் முதற் கட்ட முயற்சியை கையாண்டனர்.

ஆதாரம்:1837ல் பகதுர்ஷா அவர்கள் டில்லி அரியணையில் ஏரியதும், மக்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிட்டீஷார் செய்த முயற்சிகள் பல. அதில் ஒன்று 1847ல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள் என்பதால் முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பானி கொடுப்பர் இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நாளை டில்லியில் இந்து, முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று எழுதினான்.


இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, இந்த வருடம் மட்டும் ''ஆடுகளை மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும் மாடுகளை குர்பானி கொடுக்க வேண்டாம்'' என்று பிரகடனப் படுத்தினார் இதனால் கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது... காஸிம் ரிஸ்வி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகதுர்ஷா ஜஃபர். வீரசாவர்க்கர், எரிமலை. பக்கம்,58.


அன்று மாமன்னர் பகதூர்ஷா அவர்களின் அறிவுக் கூர்மையால் கெய்த்தின் சதித்திட்டம் தற்காலிகமாக முறியடிக்கப்பட்டாலும் அன்று முதல் இன்று வரையிலும் இதைப் பிரச்சனையாக்கி ஹிந்து, முஸ்லீம்களிடையே பிளவை ஏற்படுத்த திட்டம் தீட்டி வருகின்றனர் கெய்த்தின் இந்திய மோடி, தொகாடியா வாரிசுகள்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லீம்கள் பிரித்தானிய வல்லரசை எதிர்த்து ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டக் காரணத்தால் பெரும் கோடீஸ்வரர்களாக, பேரரசர்களாக, சிற்றரசர்களாக, தொழிலதிபர்களாக கோலோச்சிய முஸ்லீம்களை வெள்ளையர்கள் தங்களது அதிகாரத்தை அவர்கள் மீது துஷ்பிரயோகம் செய்தனர் அதனால் முஸ்லீம்கள் இன்று இந்தியாவில் வறுமை கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டனர்.

ஆதாரம்:

பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை, காலாட் படையினரின் புரட்சியால் கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொல்லப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது. அதில் கைதான, கொல்லப்பட்ட, தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்யங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.

முஸ்லிம்களைப் பொருளாதாரத்தில் வீழ்த்தி விட்டால் அவர்களது ஆங்கில எதிர்ப்பு குறையும் என்ற திட்டத்துடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்த்தும் நடவடிக்கையில் பிரிட்டீஷார் இறங்கினர்.

1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்,

இஸ்லாமியர்கள் நடத்திய அரசுகள், அதன் கஜானாக்கள் அபகரிக்கப்பட்டன,

முஸ்லிம்களின் அசையாச் சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினை தண்டமாக அபரித்தது.டில்லியில் இருந்த முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அவர்களுடைய வீடுகளையும், உடமைகளையும் பறிமுதல் செய்தனர்.

இன்று தென்னிந்திய முஸ்லிம்களை விட வட இந்திய முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இதுவேக் காரணமாகும். அதனால் தான் இன்று சாலை ஓரத் தொழிலாளிகளாக, கூலிகளாக, ரிக்ஷா ஓட்டுபவர்களாக வட இந்திய முஸ்லிம்களை நாம் காண்கின்றோம். வரலாற்றாசிரியர் திவான் அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள், பக்கம்,57.


உயிருக்குப் பயந்து முன்னெடுத்தக் காலை பின்னெடுத்துப் பழகாத முஸ்லீம்கள் இறுதியாக எஞ்சியப் பொருளாதாரத்தை துடைத்தெடுத்து நோதாஜி கையில் கொடுத்து ராணுவத்தை பலப்படுத்தி 1944ல் இறுதி தாக்குதலை வெள்ளையர்களின் மீது அபாராமாகத் தாக்கினர்.

இந்திய தேசிய ராணுவ வீரர்களின் அடி இடி போல் விழுந்ததை தாங்க முடியாமல் பிரித்தானிய வல்லரசு திணறி நிலைத்தடுமாறியது.

உயிரைக் காப்பாற்றியாக வேண்டும் எனும் நிலைக்குத் தள்ளப்பட்ட பிரித்தானிய ராணுவம் அமெரிக்காவை நோக்கி அபயக்குரல் எழுப்பியது.

இந்திய தேசிய ராணுவ வீரர்களின் தாக்குதலினால் நிலைகுலைந்த பிரித்தானியப் படையினரின் அபயக்குரலை செவிமடுத்த அமெரிக்கா அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது.

ஆதாரம்:

1944ல் நேதாஜியுடையப் படை அதிரடியாக முன்னேறி வருவதை அறிந்த பிரித்தானியப் படை அமெரிக்கா, ஜப்பானுடைய உதவியை நாடியது. பிரித்தானிய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா உபி யில் உள்ள மனிப்பூர் என்ற இடத்தில் நிலைகொண்டிருந்த நேதாஜியின் இலக்கின் மீது 6.000 டன் எடையுள்ள குண்டை வீசியது தொடர்ந்து நேதாஜியுடையப் படை நிலை கொண்டிருந்த அதிகபட்ச இடங்களில் அதைப்போன்றே அதிக பவர் கொண்ட குண்டுகளை வீசியதால் நேதாஜியின் படை பின்னடைவை சந்தித்தது. ராஜ் நியூஸ் வியப்பின் குறியீடு.

இதில் ஏராளமான வெள்ளையர்கள் கொல்லப்பட்டக் காரணத்தினாலும், நோதாஜியின் படை பின்வாங்கி விட்டதாலும், நேதாஜி அவர்கள் மறைந்து விட்டாலும் நோதாஜி அவர்கள் உருவாக்கிய ராணுவத்தில் உயர் பொறுப்புகளில் அதிகபட்சம் முஸ்லீம்கள் இருந்து வழிநடத்துவதால் அடுத்த தயாரிப்பில் அவர்கள் இறங்குவதற்குள் சுதந்திரம் வழங்கும் திட்டத்தை உருவாக்கினார்கள் வெள்ளையர்கள்.

இந்தியாவின் நெருக்கடியான காலகட்டமாகிய வெள்ளையர்களின் ஆக்ரமிப்பை அகற்றுவதற்காக சுதந்திரப் போரில் மொத்தப் பொருளாதாரத்தையும், ஒன்றுக்குப் பின்னால் எண்ணற்ற பூஜயங்களை இட்டுக் கணக்கிட முடியாத அளவுக்கு உயிர் தியாகம் செய்த முஸ்லீம்களில் பெரும்பாலோர் இன்று இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாடி வதங்குகின்றனர் அதில் இன்னும் மோசமான நிலையை வடக்கில் வாழும் முஸ்லீம்கள் அனுபவித்து வருகின்றனர் என்பதைக் கூறும் திவான் அவர்களின் கூற்றை உறுதிப்படுத்துகின்றது இன்றைய ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் ஆய்வு செய்து அரசுக்கு அளித்த இந்தியாவில் முஸ்லீம்களின் அவலநிலையின் அறிக்கை.

ஆதாரம்:இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரை விடவும் முஸ்லீம்கள் தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்


2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்


அதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர்.வறுமைகோடு என்றால் என்ன ?அரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர். ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன.இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.· இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். · தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார்மாதவருமானம் (பக்கம் 30)


ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு).ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையின் முழு விபரத்தையும் காண கீழ்காணும் லிங்கை சொடுக்கிப் பார்வையிடவும்.

http://www.tntj.net/?p=12863
அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Share this