Breaking News

+2 தேர்வில் முதலிடம் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி

நிர்வாகி
0
பிளஸ்2 தேர்வில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த காயல்பட்டணம் மாணவி ஃபாத்திமுத்து, தனது மேற்படிப்பு தொடர யாராவது பணஉதவி செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்தவர் ஃபாத்திமுத்து. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர், பிளஸ் 2 தேர்வில் உளவியல் பாடத்தில் 200க்கு 172 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவரது தந்தை அபுமுகமது, சென்னையில் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பால் அமீனா, இவருக்கு ஆறு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

ஃபாத்திமுத்து கூறுகையில்,"எனது இந்த சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள் காரணம். நர்சிங் அல்லது ஆசிரியர் பயிற்சி படிக்க விரும்புகிறேன். அதற்கு போதுமான பண வசதியில்லை. யாராவது பண உதவி செய்தால் மேற்படிப்பை தொடர தயாராகவுள்ளேன்" என்றார்.

உதவி செய்ய நீங்கள் தயாரா ? உதவி செய்ய விரும்புவோர்
பாத்திமுத்து,
பா/கா .நாகூர் முத்து ,
49 பள்ளிமார்தெரு,
காயல்பட்டணம்,
தூத்துக்குடி மாவட்டம் ,
மொபைல் எண்: 9698386885

சென்னை:சென்னை கீழ்பாக்கம் சி.எஸ்.ஐ., பெயின் பள்ளி மாணவி கதீஜா பாவஸா, மைக்ரோ பயாலஜி பாடத்தில் மாநிலத்தில் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் சி.எஸ்.ஐ., பெயின் பள்ளி மாணவி கதீஷா பாவஸா, பிளஸ் 2 மைக்ரோ பயாலஜி பாடத்தில் 198 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதித்துள்ளார்.

அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 190, ஆங்கிலம் 193, இயற்பியல் 178, வேதியியல் 170, உயிரியல் 172, மைக்ரோ பயாலஜி 198. மொத்தம் மதிப்பெண்கள்: 1,091. 'எங்கள் மாணவி மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்' என பள்ளி ஆசிரியர்கள் பெருமிதமடைந்தனர்.


திருச்சி மாவட்ட அளவில் சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ஷமீமா 1182 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:-
தமிழ்- 192, ஆங்கிலம்- 191, இயற்பியல்- 191, வேதியியல்- 200 உயிரியில்- 200, கணிதம்- 200 மொத்தம் 1182 மதிப்பெண்

திருச்சி மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற ஷமீமாவின் தந்தை முகமது பாரூக் தஞ்சை மாவட்டம் ராஜகிரியை பண்டாரவாடையை சேர்ந்தவர் இவர் சார்ஜாவில் வேலை அக்கவுண்டட்டாக பார்த்து வருகிறார். தாய் லைலா ஜான். சகோதரி ஷாய்மா. இரட்டைக்குழந்தைகளான இருவரும் எஸ்.ஆர்.வி., பள்ளியில் படித்தனர். ஷாய்மா 1,169 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தற்போது கோடை விடுமுறைக் காக ஷமீமா சார்ஜா சென்றுள்ளார். சார்ஜாவில் இருக்கும் ஷமீமா, மொபைல்ஃபோன் மூலம் அளித்த பேட்டி:

"எங்களது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை. நான் 8வது படிக்கும்போதே, மாநில அளவில் ப்ளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் படித்து வந்தேன். அதற்காக, கடந்த இரு ஆண்டாக குடும்பத்தை பிரித்து ஹாஸ்டலில் தங்கி படித்தேன்.

தினமும் 10 மணி நேரம் வரை படிப்பேன். பள்ளியில் வாரத்திற்கு 5 முறை டெஸ்ட் வைப்பார்கள். டெஸ்ட்டில் செய்யும் தவறை சுட்டிக்காட்டி, அதை திருத்துவார்கள். அவர்கள் வைத்த டெஸ்ட் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எஸ்.எஸ்.எல்,ஸி.,க்கு பிறகு 'டிவி' பார்ப்பது இல்லை. எனக்கு கால்பந்துதான் பிடித்த விளையாட்டு. எனது வெற்றிக்கு பெற்றோர், பள்ளி முதல்வர், ஆசிரியர், பள்ளி நிர்வாகிகள்தான் காரணம்.

இருதய நோய்க்கான டாக்டர் ஆவதே எனது லட்சியம். உயிரை காக்கும் சிக்கலான மருத்துவம் என்பதால் அது எனக்கு பிடிக்கும். மருத்துவ படிப்பை தமிழகத்திலும், மேற்படிப்பை இங்கிலாந்திலும் படிக்க உள்ளேன்". இ௦வ்வாறு அவர் கூறினார்.
நன்றி : பாலைவன தூது

Tags: +2 தேர்வு

Share this