Breaking News

பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி & மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0
கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி மற்றும் மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கம் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜூன் மாதம் 12 ந் தேதி (12.06.2010) சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற இருக்கின்றது.
இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கின்றனர்.
இரண்டாம் நாள் 13 ந் தேதி (13.06.2010) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் நடைபெற இருக்கின்றது.
மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் உள்ளன.


அல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில் செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும் என்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.
இந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

Tags: அரங்கம் கடலூர் காரீ கிராஅத் பரங்கிப்பேட்டை போட்டி மஹ்மூதிய்யா ஹிஃப்ழு

Share this