Breaking News

இடஒதுக்கீடு - பேச்சுரிமை - அதிகாரப்பங்கு என அனைத்தையும் பெற்றுத் தந்தது முஸ்லிம் லீக் குணங்குடி ஆர்.எம். ஹனீபா புகழாரம்

நிர்வாகி
0

நாங்கள் பிறப்பதற்கு முன்பே எழுத்துரிமை, பேச்சுரிமை, ஆட்சி அதி கார உரிமை, இடஒதுக்கீடு என அனைத்தையும் பெற் றுத் தந்த பெருமைக்குரிய பேரியக்கம் முஸ்லிம் லீக் என குணங்குடி ஆர்.எம். ஹனீபா குறிப்பிட்டார்.


தாய்ச்சபை என் தாய் வீடு

13 ஆண்டு காலம் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்துள்ள இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலுக்கு வருகை தந்தார். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்று கொண்டிருந்தது.
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு பொன் னாடை அணிவித்து நன்றி தெரிவித்து உரையாற்றிய குணங்குடி ஆர்.எம். ஹனீபா குறிப்பிட்டதா வது-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைமை யகத்துக்கு வந்துள்ள நான் தாய் வீட்டிற்கு வந்த உணர்வோடு இருக்கிறேன். ஏனெனில் இந்த தாய்ச்சபைதான் இந்திய முஸ்லிம்களுக்கு முழுமை யான சுதந்திரத்தை பெற் றுக் கொடுத்த பேரியக்கம். இன்றைக்கு எல்லோரும் பேசுகின்ற இடஒதுக் கீட்டை 1919ம் ஆண்டி லேயே இந்த சமுதாயத் துக்கு பெற்றுத் தந்த இயக்கம் முஸ்லிம் லீக். அதுமட்டுமின்றி நாங்கள் பிறப்பதற்கு முன்பே பேச்சு, எழுத்து, சுதந்தி ரத்தையும், ஆட்சி யில் அதிகார பங்களிப் பையும் அது பெற்றுத் தந்தது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. எனது மகள் திருமணத் தின்போது அநியாயமாக நான் கைது செய்யப்பட்டு, ரயில் குண்டு வெடிப்பு வழக்குகளில் சேர்க்கப் பட்டு 13 ஆண்டு காலம் சிறையில் இருந்தேன். கண் பார்வை மங்கி, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களெல்லாம் கூடி இன்று வெளியில் வந்துள் ளேன். என்னைப் போல் எத்தனையோ நிரபராதிகள் சிறையில் உள்ளனர்

எங்களுடைய விடு தலைக்கு ஒட்டு மொத்த சமுதாய அமைப்புகளும் போராடின. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பங்களிப்பு என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அனைவருமே குரல் கொடுத்த காரணத்தால் நாங்கள் வெளியில் வந்துள்ளோம். இதற்கெல் லாம் மனநிறைவான நன்றியை சமர்ப்பிக்கின் றோம்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆயுள்சிறைவாசிகள் விடுதலைக்காக தாய்ச்சபை யினர் குரல் கொடுத்தார் கள். முதல்வரையும், துணை முதல்வரை யும் பார்க்கும் போதெல்லாம் பேரா சிரியர் கே.எம் காதர் மொகிதீன் அவர்கள் எங்கள் விடுதலைக்காக வலியுறுத்தினார்கள். இறைவன் அருளால் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி நாங்கள் வெளியில் வந்துள்ளோம்.

ஆயுள் சிறைவாசிகள் ஏற்கனவே விடுவிக்கப் பட்டது போல் மீதியுள்ள வர்களும் விடுவிக்கப்படுவ தற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பெரு முயற்சி செய்ய வேண்டும். தாய்ச்சபை நம் சமுதாயத்திற்கு நிறைய செய்திருக்கிறது. இதையும் செய்து தர வேண்டும்.

இவ்வாறு குணங்குடி ஆர்.எம் ஹனீபா பேசினார்.

தலைவர் பேராசிரியர் வாழ்த்து

நீண்ட காலம் சிறையில் இருந்த குணங்குடி ஆர். எம். ஹனீபா இன்று விடுதலையாகி வெளியில் வந்துள்ளது நமக்கு மகிழ்வையும், மனநிறை வையும் தருகிறது. முறுக் கிய மீசையோடும், இளமை துடிப்போடும் சிறைக்குச் சென்ற அவர் இன்று தாடியோடும், தொப்பியோடும் பழுத்த ஆன்மீகவாதியாக, பக்குவப்பட்டவராக வெளியில் வந்துள்ளார்.

தனித்திருந்து, பசித்தி ருந்து, விழித்திருந்து, சிந்தனையில் ஆழ்ந்து புதிய மனிதராக இன்று வெளியில் வந்துள்ள அவர் சிறைச்சாலையை தவச் சாலையாக கருதி அவர் பெற்ற பக்குவத்தை இந்த சமுதாயத்திற்கு போதிக்க வேண்டும். பல்வேறு வகையான கஷ்டங்களை, அவநம்பிக்கைகளை, ஏமாற்றங்களை சந்தித்த அவர் அவைகளை பாட மாக கொள்ள வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தான் செய்த அனைத்தையும் சொல்லிக் காட்டுவதில்லை. ஆனால் அவர் விஷயத்திலும், சிறை வாசிகள் விடுதலை விஷயத் திலும் நாங்கள் என்ன செய்தோம்? செய்கிறோம் என்பது அவருக்கு நன்றா கத் தெரியும். அவருடைய நலத்திற்கும், வளத்திற்கும் வல்ல இறைவனை நாம் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

மாநில நிர்வாகிகள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில துணைத் தலைவர் கள் அரூர் அப்துல் ஹாலிக், சேலம் காதர் உசைன், கோவை எல்.எம். அப்துல் ஜலீல் ஹாஜியார், நெல்லை கோதர் மொகி தீன், திருப்ப+ர் ஹம்சா,

மாநிலச் செயலாளர்கள் தளபதி ஏ. ஷபீகுர் ரஹ் மான், ராமநாதபுரம் ஷாஜ ஹான், நெல்லை அப்துல் மஜீத், காயல் மஹபூப், கமுதி பஷீர்

காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., அணிகளின் அமைப்பா ளர்கள் திருப்பூர் சத்தார், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜாமுதீன், ஓசூர் ஹபீபுர் ரஹ்மான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this