Breaking News

காஸ்ஸாவுக்கு மீண்டும் உதவிக்கப்பல்: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

பக்கர்Brothers.kollumedu
0

காஸ்ஸாவுக்கு மீண்டும் நிவாரண உதவிக் கப்பல்களை அனுப்பப் போவதாகவும்,அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸ்ஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.காஸ்ஸாவுக்கு உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்ற துருக்கிக் கப்பலை,கடந்த திங்கட்கிழமையன்று இரவு நடுக்கடலில் இஸ்ரேல் கடற்படையினர் வழி மறித்து உள்ளே நுழைந்து,சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.இதில் 15 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்துக்கு ஐ.நா. மற்றும் பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில்,காஸ்ஸாவுக்கு மீண்டும் உதவிக் கப்பல்களை அனுப்பப் போவதாகவும்,அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.காஸ்ஸாவுக்கு மீண்டும் உதவிக்கப்பல்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும்,இந்த கப்பல்கள் இன்னும் 2 வாரங்களில் காஸ்ஸா போய் சேரும் என்றும் அந்த இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இந்த கப்பலையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்துமா அல்லது அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

source:presstv

Share this