Breaking News

இந்திய ஹஜ் பயணிகளுக்கு இடவசதி பிரச்சினை:பிரதமர் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்

நிர்வாகி
0
பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி கடிதம் எழுதி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் உள்ள மாநில ஹஜ் கமிட்டிகள் மூலமாக சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு புனித தலங்களான மெக்கா, மதினாவுக்கு இந்த ஆண்டு செல்லும் 1 லட்சத்து 16 ஆயிரம் ஹஜ் பயணிகள் தங்குவதற்கு தேவையான வாடகை கட்டிடம் இன்னமும் தேர்வு செய்யப்படாமல் உள்ளது.

இதனால் இந்திய ஹஜ் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாவார்கள். புனித தலங்களுக்கு வெகு தொலைவில் அல்லது பழைய கட்டிடங்களிலே அவர்கள் தங்க நேரிடும். இதற்கு தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, ஹஜ் பயணிகள் தங்குவதற்கு தகுதியான வாடகை கட்டிடத்தை போர்க்கால அடிப்படையில் தேர்வு செய்யும்படி இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Tags: ஹஜ் பயணி

Share this