இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
நிர்வாகி
0
காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக் டர், சப் இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையைச் சேர்ந்தவர் அகமதுல்லா. இவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி கடலூர் சி.ஜே.எம்., கோர்ட்டில் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த அக்டோபர் 7ம் தேதி நடந்த லால்பேட்டை பேரூராட்சி 3வது வார்டு உறுப்பினர் தேர்தலில் தேசிய லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிராஜூதீனுக்கு முகவராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பகல் 12 மணிக்கு நடந்த தகராறில் காட்டுமன்னார் கோவில் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் முன்னிலையில் மனிதநேய கட்சியினர் 5 பேர் என்னை தாக்கினர்.
இரவு 11 மணிக்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என்னை தேடி லால்பேட்டை வந்து, அங்கிருந்த பெண்கள் பைஜூன்னிசா, முகமுதாபீபி ஆகியோரை ஆபாசமாக திட்டினர். பின்னர், என்னையும், எனது தம்பி அமீர் உல்கக்கையும் தாக்கி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எங்கள் இருவரையும் சட்டையை கழற்றி லாக்கப் கம்பியில் வைத்து அடித்ததாக மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சண்முகநாதன், இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் ஆகியோர் மீது அத்துமீறி நுழைந்து தாக்கியது (448), ஆபாசமாக திட்டியது (294), இரும்பு பைப்பால் தாக்கியது (324) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, வழக்கு விசாரணைக்காக இருவரும் வரும் 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்திரவிட்டார்.

Tags: லால்பேட்டை