Breaking News

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நிர்வாகி
0
கலைஞர் தலைமையிலான நல்லரசுக்கு துணை நிற்போம்

¨ ~ 1. தமிழ்நாட்டில் டாக்டர் கலைஞர் தலைமையிலான நல்லரசு அனைத்து தரப்பு மக்களின் கல்வி, பொருளாதார நிலைகளை உயர்த்தவும், அடிப்படை வசதிகளை பெருக்கவும் பாடுபட்டு வருகிறது. மக்களின் நலத் திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அரசுக்கு துணை நிற்பதோடு மீண்டும் இந்த நல்லரசு தொடர திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடர இம் மாநாடு உறுதி ஏற்கிறது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

2. ஜூன் 23 - 27 தேதிகளில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.

வரலாறு படைக்கும் வகையில் முதல்வர் கலைஞர் நடத்துகின்ற இந்த மாநாட்டில் தமிழக முஸ்லிம்கள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் கல்வி விழிப்புணர்வு மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துக

3. மத மற்றும் மொழி சிறுபான்மையினர் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை சட்டத்தின் மூலம் அமலாக்கப்படவும், குறிப்பாக சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு, அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு என்பதை விரைவாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகக் கிளை அமைத்திடுக!

¨ 4. உலகப் புகழ் பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளைகளை மேற்கு வங்காள மாநிலத்தில் முர்சிதாபாத் நகரிலும், கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்திலும் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதை இந்த மாநாடு மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறது.

தமிழகம் இந்தியாவின் கல்விக் கேந்திரம் என பண்டிதர் நேருஜி வருணித்துள்ளதை நினைவிற் கொண்டு, அலிகர் பல்கலைக் கழகத்தின் கிளை ஒன்றைத் தமிழகத்திலும் அமைக்க மத்திய அரசு முன்வருமாறு இந்த மாநாடு கோருகிறது.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் இதற்கான வழிமுறைகளை வகுத்தளித்து உதவிட வேண்டும் என இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகக் கிளையை அமைப்பதற்குத் தேவைப்படும் 250 ஏக்கர் நிலப் பரப்பை தமிழ்நாடு வக்பு வாரியம் மூலம் வழங்குவதற்கு வாரியத் தலைவரும் அலிகர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமாகிய கவிக்கோ அப்துல் ரஹ்மான் பெருமுயற்சி மேற்கொண்டுள்ளதை இந்த மாநாடு பாராட்டி வரவேற்ப துடன், வாரியத்தின் நன்முயற்சிகளுக்கு தமிழக முஸ்லிம் சமுதாயம் அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க முன்வர வேண்டும் எனவும் இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

உர்து மொழி பயில வழிவகை

5. உர்துவை தாய் மொழியாகக் கொண்ட சிறுபான்மை முஸ்லிம்கள் பல்லாண்டு காலமாக உர்து வழிக் கல்வி பயின்று வருகின்றனர். சமச்சீர் கல்வி முறையிலும் உர்து வழிக் கல்வி தொடரவும், உர்தூவை கட்டாய மொழிப் பாடமாகக் பயிலவும் வழிவகை செய்யுமாறு தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அரபி மொழி பயில வகை செய்க

6. செம்மொழி தமிழைப் போல் அரபியும் செம் மொழியாகவும், உலக முஸ்லிம்களின் அன்றாட சமய வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றதாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில மொழிகளில் ஒன்றாகவும், எழுபத்து இரண்டு நாடுகளில் ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் உள்ளதாகும்.

தமிழக சிறுபான்மை முஸ்லிம்கள் அரபியைப் பயிலுவதற்கு ஓரியண்டல் கல்வி முறையும், விருப்பப்பாடமாக பயிலும் முறையும் தொடர்ந்து இருந்து வருகிறது. தற்போது நடைமுறைக்கு வந்துள்ள சமச்சீர் கல்வி முறையில் அரபி பயிலுவதற்குரிய வழிவகை இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த அச்சத்தை நீக்கி அரபி மொழியையும், படிப்பதற்குரிய வகையை தொடரச் செய்யுமாறு தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம்

7. சிறுபான்மை நிதியுதவி பெறும் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரம் வருடந்தோறும் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது. சிறுபான்மைப் பள்ளி என்று ஒரு தடவை அங்கீகாரம் பெற்று விட்டாலே அதை நிரந்தர அங்கீகாரமாக கருதவும், கட்டிட உறுதிச் சான்றிதழ், சுகாதாரம் மற்றும் தீ தடுப்புச் சான்றிதழ்கள் இப்போதுள்ள முறைப்படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டால் போதும் எனவும் ஆணையிட வேண்டும் என இந்த மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

சுயநிதி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தரம் உயர்த்தல்

8. அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் சுயநிதியில் இயங்கி வரும் மேல்நிலை வகுப்புகளில் பத்து ஆண்டுகள் ப+ர்த்தி செய்தவற்றை பரிசீலனை செய்து அரசு நிதியுதவியுடன் கூடிய மேல்நிலை வகுப்புகளாக மாற்றித் தர வேண்டும் என இந்த மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

சொத்து ஜாமீன் இல்லாமல் சிறுபான்மை மாணவர்களுக்கு கடன்

¨ 9. ஏழை சிறுபான்மை மாணவ - மாணவியர்கள் மருத்துவம் ஃ பொறியியல் தொழிற்கல்வி பயில 2008-ம் ஆண்டு முதல் ஒரு வருடத்திற்கு ரூ.50,000ஃ- வீதம் கடன் வழங்க ஆணையிடப்பட்டதற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

இக் கடன் திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்துகின்றது.

இக் கடனை கூட்டுறவு வங்கிகள் சொத்து ஜாமீன் பெற்றும், தேசிய வங்கிகள், தனி நபர் சம்பள ஜாமீன் அடிப்படையிலும் வழங்குகின்றன. இதனால் ஏழை சிறுபான்மையின மக்கள் இக் கடன் பெற்று கல்வி பயில வாய்ப்பு இல்லாத நிலையில் உள்ளனர். எனவே, ஒரு தனிநபர் ஜாமீன் அடிப்படையில் இக் கல்விக் கடனை சொத்து ஜாமீன் இல்லாமல் வழங்கிட வழிவகை செய்யும் வகையில் ஆணையிட வேண்டுமென தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் மின்கட்டணம்

10. அரசு ஆரம்பப் பள்ளிகளில் மின் கட்டணத்தை அரசே செலுத்துவது போல், அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு மின் கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும் என இந்த மாநாடு தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கிறது

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம்

1.1 அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிக்கு பள்ளி இறுதி மான்யம், முன்னர் ஆசிரியர்களின் வருட ஊதியத் தொகையில் 6 சதவீதம் வழங்கப்பட்டு படிப்படியாக குறைந்து தற்பொழுது 1 சதவீதம் மட்டுமே வழங்கப்படுவதை மீண்டும் 6 சதவீத அளவே வழங்கப்பட வேண்டும் என இந்த மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

.ஆசிரியர் மாணவர் விகிதம்

12. பள்ளிக் கல்வியில் ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:30 என்று அமைத்து பள்ளிக்கூட ஆசிரியர்களை நியமனம் செய்திட தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மதரஸா மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

13. மதரஸாக்களில் பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச ரயில் பாஸ் வழங்குவது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான மத்ரஸாக்கள் தொடர்வண்டி வழித்தடங்கள் இல்லாத இடங்களில் இருப்பதையும் மத்ரஸா மாணவர்கள் எழைகள் என்பதையும் கருத்திற்கொண்டு அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டுமன தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

பள்ளபட்டி பெண்கள் கல்லூரிக்கு அங்கீகாரம்

¨ 14. பள்ளபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்கள் கல்லூரி இல்லாத குறைபோக்க உஸ்வத்துன் ஹஸனா மாமாஞ்சி ஹாஜி அப்துல் லத்தீப் மகளிர் கல்லூரியை தொடங்க முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறப்பாக செயல்படும் சிறுபான்மை நிறுவனமான உஸ்வத்துன் ஹஸனா இக் கல்லூரி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இக் கல்லூரிக்கு உரிய அங்கீகாரத்தை அளித்து விரைவில் இக் கல்லூரி செயல்பட வழிவகை செய்யுமாறு தமிழக அரசை இம் மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

லால்பேட்டையில் அரசினர் மகளிர் கல்லூரி

15. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் லால்பேட்டையை மையமாகக் கொண்டு இயங்கும் வகையில் தமிழக அரசு, அரசினர் மகளிர் கல்லூரி ஒன்றைத் துவங்க வேண்டுமென இந்த மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

சக்கராப்பள்ளியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

16. தஞ்சாவ+ர் மாவட்டம் பாபநாசம் தாலுகா சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியை பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக மாற்றியும், தரம் உயர்த்தியும் கொடுக்க வேண்டும் என இந்த மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

வெள்ளி விடுமுறை

17. நீண்ட காலமாக தமிழக முஸ்லிம் சிறுபான்மை கல்விக் கூடங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை தரும் மரபு இருந்து வந்துள்ளது. இந்த தொடர் மரபுக்கு குறுக்கீடு எதுவும் இல்லாமல், முந்தைய மரபு தொடர்ந்திட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென இந்த மாநாடு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறது.

வக்பு வாரியத்தின் முன்னோடித் திட்டம்

18. முஸ்லிம் ஏழை எளிய மாணவ - மாணவியர் உயர்கல்வி பெறுவதற்கு தமிழ்நாடு வக்பு வாரியம் ரூ.5 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கும் கல்வி மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கியுள்ளதை இந்த மாநாடு பாராட்டி வரவேற்கிறது.

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் கல்வி மேம்பாட்டு திட்டத்தை பிற மாநில வக்பு வாரியங்களும் பின்பற்ற வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

வக்பு திருத்தச் சட்டம்

19. இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் சார்பாக வக்பு பாராளுமன்ற கூட்டுக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் பலவும் ஏற்கப்பட்டு, வக்பு சட்டம் 1995-ல் வக்பு சொத்துக்களின் பாதுகாப்பு, வளர்ச்சி, நிர்வாகம், மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வந்து மக்களவையில் வக்பு திருத்தச் சட்டம் - 2010 நிறைவேற்றியுள்ள மத்திய அரசுக்கு இந்த மாநாடு நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

வக்பு சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்வது இரண்டு ஆண்டு வரை சிறைத் தண்டனை பெறக் கூடிய குற்றம் எனவும், மாநில வக்பு வாரியங்களின் செயல்பாடுகளை மத்திய வக்பு கவுன்சில் கண்காணிக்க அதிகாரம் உள்ளது எனவும், வக்பு சொத்துக்களைக் குத்தகைக்கு விடும் கால அளவு கல்விப் பணிகளுக்கு முப்பது ஆண்டுகள் எனவும், வர்த்தக நிலையங்களுக்கு பத்து ஆண்டுகள் எனவும், வக்பு சொத்துக்களை மேம்பாடு செய்வதற்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் வக்பு சொத்து வளர்ச்சி குழுமங்கள் உருவாக்கப்படும் எனவும், ஆண்டு ஒன்றுக்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் வருமானம் பெறும் வக்பு முத்தவல்லிகளுக்கு வாக்குரிமை உண்டு எனவும், இன்னும் பல வரவேற்கத்தக்க திருத்தங்களுடன் வக்பு திருத்தச் சட்டம் அமைந்துள்ளதை இந்த மாநாடு வரவேற்கிறது.

இந்த வக்பு திருத்தச் சட்டம் மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் விரைவில் சட்டமாக நடைமுறைக்கு கொண்டு வருமாறு மத்திய அரசை இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மத்திய அமைச்சர் இ.அஹமது, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற இந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags: தீர்மானம் முஸ்லிம் லீக்

Share this