Breaking News

இனி பொறுக்க மாட்டோம்! எவரும் அரசியல் கற்றுத் தர வேண்டிய அவசிய மில்லை!!

நிர்வாகி
0
கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தலைவர் பேராசிரியர் பேச்சு

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களை உண்மையில் மதிக்கக் கூடியவர்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராக செயல்பட மாட்டார்கள், அப்படி செயல்படக்கூடியவர்களுக்கு காயிதெ மில்லத் அவர்கள் குறித்து பேசும் தகுதியும், உரிமையும் கிடையாது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எடுக்கும் அரசியல் அணுகுமுறை களையே சமுதாயம் அங் கீகரித்து வருகிறது என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
கரூர் மாவட்டம் பள்ள பட்டியில் நடை பெற்ற ஹகல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தலைமை வகித்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதா வது-

காயிதெ மில்லத் பிறந்தநாள்
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் பிறந்த நாள் விழாவினை ஆண்டு தோறும் கல்வி உதவி வழங் கும் விழாவாக முஸ்லிம் லீக் நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஊரிலும் முஸ்லிம் லீக் பிரைமரிகள் சார்பில் அந்த தினத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவிகளும், இலவச நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித்தொகை போன்றவற்றை வழங்குவது வழக்கமாக நடந்து வரு கிறது.
இந்த ஆண்டு மாநில அளவில் இது ஹகல்வி விழிப்புணர்வு மாநாடாக| ஏற்பாடு செய்யப் பட்டு மிகச் சிறப்பாக நடை பெற்று கொண்டிருக்கி றது. மாநாட்டு வர வேற்பு குழுத் தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான நமது அருமைக்குரிய எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர் களுடன் இணைந்து கரூர்மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவ ரும் சிறப்பாக இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறார் கள்.

முதல்வர் கலைஞர், துணை முதல்வர் வாழ்த்து
நமது மரியாதைக்குரிய தமிழக முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இந்த மாநாட்டிற்கு தங்க ளது வாழ்த்துச் செய்தி களை அனுப்பி வைத்து நம்மை யெல்லாம் பெருமைப் படுத்தியிருக் கிறார்கள். நமது தேசியத் தலைவர் இ.அஹமது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்நாள், முன் னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், கல்வி யாளர்களும் பல மாவட் டங்களிலி ருந்தும் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளும், சாதனை படைத்த மாணவ - மாணவிகள், பெற்றோர் கள், ஆசிரியர்கள் என பலரும் கூடி சிறப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர் களின் வாழ்க்கையானது இந்திய சிறுபான்மை சமு தாய மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்க ளுக்கு வழிகாட்டுதலும், படிப்பினையும் நிறைந்த தாக அமைந்திருக்கிறது. காயிதெ மில்லத் அவர்கள் குறித்து பள்ளிக்கூட பாடப் புத்தகத்தில் பாட மாக இருந்தது. அதில் இடம் பெற்ற ஒரு சம்பவம் நம்மில் பலரும் படித்திருக் கலாம்.

ஒரு முறை காயிதெ மில்லத் அவர்கள் அவ ரது தாயார் இரவு உறங்கும் போது அவரது கால் மிகவும் வலிக்கிறது என் றும், சற்று நேரம் காலை பிடித்து விடுமாறும் காயிதெ மில்லத் அவர்களி டம் கூறியுள்ளார். தாயின் ஆணைப்படி காயிதெ மில்லத் அவர்கள் அவ ருக்கு பணிவிடை செய்துள் ளார். சற்று நேரத்தில் தாயார் உறங்கி விட்டார். ஆனாலும், காயிதெ மில்லத் அவர்கள் தாயா ரின் காலை பிடித்தபடியே இருந்திருக்கிறார். அதி காலை கண்விழித்தபோது காயிதெ மில்லத் உறங்கா மல் தனது காலை பிடித் துக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது தாயார் ஏன் மகனே நீ உறங்கவில் லையா? என்று கேட்டுள் ளார். அதற்கு காயிதெ மில்லத் அவர்கள், ஆமாம் அம்மா, தாங்கள் போதும் என்று சொல்லவில்லையே? அதனால்தான் நான் தாங்கள் இட்ட கட்ட ளையை தொடர்ந்து செய் தேன் என்று கூறினார். இந்த அளவுக்கு அவர் தாயாருக்கு பணிவிடை செய்தார் என்றால் நிச்சய மாக அவர் இறைவனுக்கு மிகவும் நேசமானவராக திகழ்ந்திருக்க வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சம்பவத்தை மார்க்க அறிஞர்கள் நமக்கு சொல்லிக் காட்டியிருக்கிறார்கள். ஒருமுறை காட்டில் மழைக்காக ஒரு குகையில் ஒதுங்கிய 3 நபர்கள் குகை வாயில் மூடிக் கொள்ள சிக்கிக் கொண்டனர். அந்த குகையை ஒரு மிகப் பெரிய பாறை மூடிக் கொண்டு விட்டது. அந்த குகையி லிருந்து மீள்வதற்கான எந்த வழிவகையும் அவர்களுக்கு தென்படவில்லை அப்போது அவர்கள் மூவரும் தாங்கள் கடந்த காலத்தில் இறைவனுக்கு அஞ்சி செய்த காரியங் களை நினைவுப்படுத்தி அதன் பொருட்டால் இறைவன் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.
இறைவன் மீது அச்சம்

ஒரு நபர், இறைவா நான் வயது வந்த என் பெற்றோருக்கு பணி விடை செய்தது உனக்கு அஞ்சிய காரணத்தால் தான் ஏழையான நான் தின மும் ஆட்டுப் பாலை கறந்து வந்து அதனை பெற் றோருக்கு அருந்தக் கொடுத்தேன். பெற்றோர் அதனை அருந்திய பிறகே எனது மனைவி, பிள்ளைக ளுக்கு கொடுத்து பிறகு தானும் உண்பதை வழக்க மாக கொண்டேன். அப் படி ஒரு முறை பெற்றோருக்காக பால் கொண்டு வந்தபோது, அவர்கள் இருவரும் உறங்கி விட்டார்கள். அவர்கள் விழிக் கும் வரை காத்திருந்து அவர்கள் அருந்திய பிறகே நானும், எனது குடும்பமும் அருந் தினோம். இதற்கு காரணம் இறைவன் மீதான அச்ச உணர்வே என்று கூறி, இதன்பொருட்டால் தங் களை சூழ்ந்துள்ள ஆபத் திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த் தித்தார். வாயிலை அடைத் திருந்த பாறை கொஞ்சம் விலகியது.

அதேபோன்று இரண் டாம் நபர் தனது நெருங் கிய உறவுக்கார பெண்ணி டம் தனிமையில் இருந்த போது, எனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினேன். அவள் மறுத்த போதும் நான் பலாத்காரத்திற்கு முற்பட்ட போது அந்த பெண் ஹஅல்லாஹ்வுக்கு அஞ்சி என்னை விட்டு விடு| என கூற, நானும் இறை வனின் அச்சத்தால் அந்த பாவகாரியத்தை செய்யா மல் விலகி விட்டேன் என்பதை கூறி அதன் பொருட்டால் தங்களை சூழ்ந்த ஆபத்திலிருந்து விடுவிக்கும்படி இறைவ னிடம் பிரார்த்தித்தார். பாறையும் இன்னும் அதிகம் விலகியது.
மூன்றாம் நபர், இறைவா, என்னிடம் ஒரு நபர் ஒரு ஆட்டைத் தந்து பின்னர் அதனை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னார். அந்த ஒரு ஆடு பல ஆடுகளாக பெருகி பெரிய மந்தையாகி விட் டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வந்து தான் கொடுத்த ஆட்டை கேட் டார். நான் அந்த மந் தையை காட்டி அது உன்னுடையது, எடுத்துக் கொள் என்றேன். நான் ஒரு ஆடுதானே தந்தேன் என்று அவர் சொன்ன நேரத்தில் அந்த ஒரு ஆட்டிலிருந்து பெருகியதுதான் இந்த மந்தை. அது உனக்கே சொந்தம் என்றேன். இறைவா உன் மீது உள்ள அச்சத்தின் காரணமாகத் தான் நான் இவ்வாறு சொன்னேன். அதன் பொருட்டால் இந்த ஆபத் திலிருந்து நீ எங்களை காப் பாற்று என்று பிரார்த்தித் தார்.
பாறை முழுவதுமாக விலகி மூவரும் குகையிலி ருந்து வெளிவர அல்லாஹ் உதவினான். நாம் செய்யக் கூடிய ஒவ் வொரு காரியமும் அல்லாஹ்வின் பொருத்தத் திற்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண் டும்.

சமுதாய வழிகாட்டி காயிதெ மில்லத்தை இந்த சமுதாயம் ஏற்று போற்றுகிறதென்றால் அவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி செய்த காரியங்களால்தான்.
காயிதெ மில்லத் என்ற சொல்லுக்கு சமுதா யத்தின் வழிகாட்டி என் பது பொருள். காய்து என்றால் ஒட்டகத்தை வழி நடத்திச் செல்பவர் என்று பொருளாகும். சாய்து என்றாலும் அதுதான் பொருள். ஆனால் சாய்து என்னும்போது ஒட்டகத் தின் மீது ஏறி அதனை ஓட்டிச் செல்பவர் என்றும், காய்து என்றால் ஒட்ட கத்தின் மூங்கணாங்கயிறை பிடித்துக் கொண்டு கற் களும், முட்களும் படாத வகையில் கவனமாக வழி நடத்துபவர் என்றும் பொருள்படும் என்று மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் எங்களுக் கெல்லாம் சொல்லிக் காட்டியுள்ளார்கள்.
இந்திய சிறு பான்மை முஸ்லிம் சமுதாயத்தை எந்த துன்பமும், துயரமும் தாக்கிடா வண்ணம் கவன மாக இந்த சமு தாயத்தை வழி நடத்துபவர் என்ப தால்தான் காயிதெ மில்லத் என்ற பெயரால் அவரை அழைக்கிறோம்.

தகுதியும்-உரிமையும் இன்று காயிதெ மில்லத் அவர்களை பற்றி அனைத்துக் கட்சியினரும் பேசுகின்றனர். நமது சமு தாயத்தில் பல அமைப்பு களும் காயிதெ மில்லத்தின் பெயரை, படத்தை பயன் படுத்துகின்றனர். காயிதெ மில்லத்திற்கு தாங்கள் மரியாதை செலுத்துவதாக சொல்லிக் கொள்கின்றனர். உண்மையில் காயிதெ மில் லத்தை மதிக்கக் கூடியவர் கள் அவரது கொள்கை களை, லட்சியங்களை கடைபிடிக்கக் கூடியவர்க ளாக அதனை பிரச்சாரம் செய்யக் கூடியவர்களாக அந்த லட்சியம் நிறைவேற பாடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பலப்படுத்தக்கூடியவர்களாக வளர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராக செயல்படக்கூடியவர்கள், கேடுபாடுகள் விளைவிக்கக் கூடியவர்கள் அதன் பணிக்கு - பயணத்திற்கு, வளர்ச்சிக்கு இடைய+று செய்யக் கூடியவர்களுக்கு நிச்சயம் காயிதெ மில்லத் குறித்து பேசும் தகுதியோ, உரிமையோ இருக்க முடியாது இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அரசியல் நிலைபாடுகளைத் தான் இந்த சமுதாயம் ஏற்று அங்கீகரிக்கிறது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் முடிவுகளை - தீர்மானங் களை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. அப்படியிருக்க இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எவரும் அரசியல் கற்றுத் தர வேண்டிய அவசிய மில்லை. எப்படி தீர்மானங் கள் எழுத வேண்டும் என்று எவரும் எங்களுக்கு சொல்லிக் காட்ட ஆசைப் படக் கூடாது.

இனி பொறுக்க மாட்டோம்
முஸ்லிம் லீகின் குரலுக்கு எதிரான குரலை ஒலிப்பார்களானால் அதனை இனிமேல் அனும திக்க முடியாது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராக எவராவது கையை தூக்குவார்களானால் இனி மேல் அவ்வாறு தூக்கும் கையை இறக்கும் பணியை நாம் செய்தாக வேண்டும். இவ்வளவு நாட்களாக நாம் இந்த விஷயங்களில் பொறுமை காத்தோம். ஆனால், நமது பொறு மையை - சகிப்புத் தன் மையை நமது சமுதாயம் விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தி வருகிறார் கள். சமுதாய உணர்வுக்கு மதிப்பளித்து நாமும் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம். இந்த மாநாடு அதற் கான துவக்கமாக அமைந் திருக்கிறது. இங்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்கு பல வகையி லும் பணியாற்றிய சான் றோர் பெருமக்களுக்கு காயிதெ மில்லத் பெயரால் விருதுகளும், பரிசளிப்புக ளும், சாதனை படைத்த மாணவ - மாணவிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டுச் சான் றிதழும், பரிசளிப்பும் செய் யப்பட்டு கவுரவிக்கப்பட் டுள்ளனர். இதன் மூலம் இன்னும் பலர் சமுதாய முன்னேற்ற காலங்களில் அக்கறை செலுத்த வேண் டும். ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் இவையெல்லாம் நடைபெறுகின்றன.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் பேசினார்.

Tags: முஸ்லிம் லீக்

Share this