லால்பேட்டை பகுதியில் மாம்பழக்கடை- டீக்கடைகளில் சுகாதார துறையினர் அதிரடி சோதனை
நிர்வாகி
0
லால்பேட்டை பகுதியில் மாம்பழக்கடை மற்றும் டீக்கடைகளில் சுகாதார துறை யினர் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
சுகாதார துறையினர் சோதனை
கடலூர் மாவட்டம் லால் பேட்டை பேரூராட்சியில் உள்ள மாம்பழக்கடைகள், பெட்டிக் கடை, டீக்கடை ஆகியவற்றில் சுகாதாரமான முறையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சுகாதார மேற்பார்வையாளர் ராஜகோபால் தலைமையில் சுகாதார துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது லால் பேட்டை யில் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த சுமார் 50 கிலோ மாம் பழங்களை கண்டுபிடித்து அழித்தனர்.அதேபோல் குடி நீர் பாக்கெட்டுகளையும் அரசு அனுமதியின்றி விற்பனை செய்யக்கூடாது என்று சுகாதார துறையினர் எச்ச ரிக்கை செய்தனர்.
கலப்பட டீத்தூள்
மேலும் டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப் படுகிறதா? என்றும் சோதனை செய்தனர்.ஆய்வின் போது லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் சபியுல்லா, சுகா தார ஆய் வாளர்கள் ஜீவ ஜோதி, கைலாஷ்,நீதி தேவன், கருணாநிதி, அழகப் பன்,மன்ற உறுப்பினர்கள் இதாயத்துல்லா, அயுப் மற்றும் பலர் உடன் சென்றனர்.

Tags: பேரூராட்சி லால்பேட்டை