Breaking News

கல்வி சேவையில் TNTJ மாணவர் அணி வரலாற்று சாதனை!

நிர்வாகி
0
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 255 கல்வி சேவை நிகழ்சிகளை 154 இடங்களில் நடத்தி மாபெரும் சரித்திர சாதனை படைத்துள்ளது. அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவர் அணி இதுவரை 255 கல்வி சேவை நிகழ்சிகளை 154 இடங்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (புதுசேரி உட்பட) நடத்தி சரித்திர சாதனை புரிந்துள்ளது .


இதுவரை எந்த முஸ்லிம் அமைப்புகளோ, அறக்கட்டளைகளோ, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 150 இடங்களுக்கும் மேலாக நடத்தியது இல்லை, நமது மாணவர் அணி இதை சாதித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ் இந்த அரிய பணிக்கு அல்லாஹ் நம்மை தேர்ந்தெடுத்ததை எண்ணி மகிழ்ச்சியாக இருக்கின்றது. இரத்த தான சேவையை தொடர்ந்து, கல்வி சேவையிலும் நாமே முதல் இடத்தில் இருக்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ். இனி யாரவது இத்தகைய சாதனையை செய்தாலும் முதலில் அனைத்து மாவட்டங்களிலும் கல்வி சேவை செய்தது நமது TNTJ மாணவர் அணி தான் (இடங்களின் முழுவிபரம் கீழே தரப்பட்டுள்ளது). இது போக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 180 இடங்களுக்கு மேலாக மாணவர் அணியை நிறுவி உள்ளோம்.

தமிழகத்தில் முஸ்லீம்கள் மணவ, மாணவியருக்கு தமிழகம் தழுவி வழிகாட்ட யாரும் இல்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவர் அணி கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் முடுக்கிவிட்டது. கொட்டும் மழையையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் இந்த சாதனையை மாணவர் அணி சகோதரர்கள் செய்துள்ளனர். தவ்ஹீதை உயிர் மூச்சாக கொண்டவர்களால் மட்டுமே இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்ட முடியும் என்பதை மீண்டும் நிருபித்துள்ளனர்.

பெரிய, பெரிய அமைப்பு வைத்து நடத்துகின்றோம் என்று சொல்பவர்கள் கூட இந்த அளவிற்க்கு கல்வி சேவையை செய்ததில்லை, எங்காவது சில இடங்களில் நோட்டு, புத்தகம், கல்வி கட்டண உதவி என செய்துவிட்டு எங்கள் கல்வி சேவை முடிந்தது என் இருந்துவிடுகின்றனர், கல்வி அறக்கட்டளைகள் நடத்தும் பெரும்பாலோனோர் கல்வி நிறுவனங்களை நிறுவி முஸ்லீம்களிடம் கல்வி கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்கின்றனர்.

இந்த நிலையில் மாணவர் அணி கல்வி விழிப்புணர்வு பிரசாரத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் முடுக்கிவிட்டது. கல்வி விழிப்புணர்வு மட்டும் அல்லாமல் அனைத்துவிதமான கல்வி வழிகாட்டுதல்களையும் வழங்கிவருகின்றது.

10 ஆம் வகுப்பில் தொடங்கி IIT, IIM, IISc, NIT, AIMS, BL, IAS, Arts, Science என அனைத்து உயர்கல்வி வரை இலவசமாக வழிகாட்டுகின்றது. வழிகாட்டல் மட்டும் இல்லாமல் தேர்வுக்கு முன் பயிற்சியும் அளிக்கின்றோம். ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தையும் கல்வியில் முன்னேறியவர்களாக மாற்ற திட்டமிட்டு செயல்படுத்திகொண்டு இருக்கின்றது.

இந்த கல்வி சேவையில் ஈடுபட்டவர்கள் தவ்ஹீத்வாதிகளாக இருப்பதினால்தான் உலக ஆதாயம் கருதாமல் மறுமை வெற்றி மட்டுமே குறிக்கோளாக கொண்டு வேகத்தோடும், வீரியத்தோடும் இத்தகைய சாதனைகளை புரிய முடிந்தது. (அனைத்து மாணவர் அணி நிர்வாகிகளும் 30 வயதிற்கும் குறைந்தவர்கள்). மேலும் மாணவர்களையும் இளைஞர்களையும் வைத்து ஆதாயம் தேட முயலும் அமைப்புகளுக்கு மத்தியில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிமூலம் அவர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்க்காக பாடுபடுவதால் தான் நம்மால் சாதிக்க முடிகின்றது. மேலும் மாணவர்களும், தங்களை வைத்து ஆதாயம் தேடும் அமைப்புகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். மற்ற அமைப்புகள் இதை உணராவிட்டால் இளைஞர்கள் இல்லாத முதியோர் கூடாரமாகிவிடும்,

இனி மாணவர்கள் நோட்டு, புத்தகம், சிறிய கல்வி உதவி இவைகளுக்கு ஏமாற மாட்டார்கள், தாங்கள் எளிதாக படித்து சொந்த நாட்டிலே பிறரை போல் நல்ல வேலை செய்வதற்க்கு வழிகாட்டும் அமைப்பை நோக்கியே படை எடுப்பார்கள்.

பிற அமைப்புகளெல்லாம் பசித்தவனுக்கு மீன் (நோட்டு,புத்தகம், கல்வி உதவி) கொடுக்க முயலும் போது மாணவர்அணி மட்டுமே பசித்தவனுக்கு மீன் பிடிக்க கற்று (கல்விவிழிப்புணர்வு, வழிகாட்டுதல், பயிற்சி) கொடுத்து கொண்டுஇருக்கின்றது.

படிக்க பணம் தேவையில்லை, நம்பிக்கை, ஆர்வம், கடின உழைப்பு போதும் என்ற பிரச்சாரத்தை தமிழகம் முழுக்க முதன் முதலில் எடுத்து சென்றது மாணவர் அணி, அதிலே வெற்றியும் கண்டு வருகின்றது.

மாணவர் அணியில் உள்ள படித்த இளைஞர்களின் பண்பட்ட திட்டமிடுதல் மூலமாக பல்வேறு கல்வி பணிகளை செய்துள்ளது.

கல்வியில் சிறந்தவர்கள் என்றால் இன்று பிராமணர்களை உதாரணம் காட்டுவதுபோல் இன்ஷா அல்லாஹ் இனி முஸ்லீம்களை கல்விக்கு உதாரணம் காட்ட வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டுவருகின்றது நமது மாணவர் அணி.

மாணவர் அணி வளர்ச்சிக்கு உதவிய TNTJ மாவட்ட, கிளைநிர்வாகிகள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்நன்றியை தெரிவித்துகொள்கின்றோம். நமது மாணவரணியின்சேவை இன்னும் சிறக்க அல்லாஹ்விடம் துவா செய்யுமாறுஅன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அனைத்துமாவட்டங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் புகைப்டங்களை காண :  http://picasaweb.google.com/105433402059356874787
S.சித்தீக்.M.Tech, TNTJ மாணவர் அணி

அனைத்து மாவட்டங்களிலும் (தமிழகம் & புதுச்சேரி) கல்வி சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்ற 154 இடங்கள்


வட சென்னை மாவட்டம்

1. நேதாஜி நகர்

2. ஏழுகினறு

3. மண்ணடி

4. புளியந்தோப்பு

5. பெரம்பூர்

6. அயனாவரம்

7. வண்ணார பேட்டை

தென் சென்னை மாவட்டம்

8. சேப்பாக்கம்

9. தரமணி

10. MMDA காலனி

11. சூளைமேடு

12. அண்ணா சாலை

13. திருவல்லிக்கேணி

காஞ்சி (மேற்கு) மாவட்டம்

14. தாம்பரம்

15. பல்லாவரம்

16. குன்றத்தூர்

17.. காஞ்சிபுரம்

18. உத்திரமேரூர்

19. பீக்கங்கரனை

20. காமராஜபுரம்

21. ரங்கநாதஜபுரம்

22. ஆலந்தூர்

23. பட்டூர்

காஞ்சி (கிழக்கு) மாவட்டம்

24. கல்பாக்கம்

25. கானத்தூர்

26.. செங்கல்பட்டு

27. கூடுவாஞ்சேரி

திருவள்ளுர் மாவட்டம்

28. பட்டாபிராம்

29. அரக்கோணம்

30. மதுரவாயல்

31. அம்பத்தூர்

32. ஆழ்வார்திருநகர்

கடலூர் மாவட்டம்

33. மேல்பட்டம்பாக்கம்

34. பரங்கிப்பேட்டை

35. கடலூர் OT

36. பண்ருட்டி (CM பாளையம்)

விழுப்புரம் (கிழக்கு) மாவட்டம்

37. திண்டிவணம்

38. கோட்டை குப்பம்

விழுப்புரம் (மேற்கு) மாவட்டம்

39. சங்கராபுரம்

வேலூர் மாவட்டம்

40. பேர்ணாம்பேட்

41. வேலூர்

அரியலூர் மாவட்டம்

42. திருமனவூர்

திருவண்ணாமலை மாவட்டம்

43. திருவண்ணாமலை

44. வந்தவாசி

45. போளூர்

நீலகிரி மாவட்டம்

46. ஊட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம்

47. ஓசூர்

நாமக்கல் மாவட்டம்

48. நாமக்கல்

கரூர் மாவட்டம்

49. கரூர்

தர்மபுரி மாவட்டம்

50. தர்மபுரி

தஞ்சாவூர்(வடக்கு) மாவட்டம்

51. கும்பகோணம்

52. வழுத்தூர்

53. கதிராமங்களம்

54. சோழபுரம்

55. ஆவூர்

56. வலங்கைமான்

57. கோவிந்தகுடி

58. ஆடுதுரை அவனியாபுரம்

59. சன்னாபுரம்

60. ஐயம்பேட்டை

தஞ்சாவூர்(தெற்கு) மாவட்டம்

61. பட்டுக்கோட்டை

62. அம்மாப்பேட்டை

63. அதிராம்பட்டிணம்

திருவாரூர் மாவட்டம்

64. திருவாரூர்

65. கொல்லாபுரம்

66. பொதக்குடி

67. அடலங்குடி

68. திருத்துறைபூண்டி

69. வாழ்க்கை

70. கூத்தாநல்லூர்

71. அத்திக்கடை

72. மன்னார்குடி

73. முத்துப்பேட்டை

74. கட்டிமேடு

75. தண்ணீர் குன்னம்

76. கொடிகால் பாளையம்

77. விட்டுகட்டி

78. நாச்சிகுளம்

தேனி மாவட்டம்

79. கம்பம்

நாகை(வடக்கு) மாவட்டம்

80. மயிலாடுதுறை

81. அரசூர்

82. துளசேந்திரபுரம்

83. சீர்காழி

நாகை(தெற்கு) மாவட்டம்

84. நாகப்பட்டினம்

85. நாகூர்

திருச்சி மாவட்டம்

86. சிங்காரத்தோப்பு

பெரம்பலூர் மாவட்டம்

87. பெரம்பலூர்

88. லெப்பைகுடி காடு

புதுக்கோட்டை மாவட்டம்

89. புதுகோட்டை

90. அம்மாப்பட்டினம்

91. அறந்தாங்கி

92. கிருஷ்னாச்சிபட்டணம்

93. முக்கன்னாமலைபட்டி

94. ஆர்.புது பட்டிணம்

95. ஆலங்குடி

96. காரையூர்

97. கரம்பங்குடி

இராமநாதபுரம் மாவட்டம்

98. இராம்நாட்

99. கீழக்கரை

100. புது வலசை

102. தொண்டி

103. இராமேஸ்வரம்,

104. பெரியபட்டணம்

சிவகங்கை மாவட்டம்

105. திருப்பத்தூர்

106. காரைக்குடி

107. இளையான்குடி

108. புதுவயல்

109. தேவகோட்டை

110. சிவகங்கை

கோவை மாவட்டம்

111. போத்தனூர்

112. ஆனைமலை

113. ஆசாத் நகர்

114. ஆத்துபாலம்

115. செல்வபுரம்

116. பொள்ளாச்சி

117. மேட்டுபாளையம்

திருப்பூர் மாவட்டம்

118. கோம்பை தோட்டம்

119. மங்களம்

120. KNP காலணி

121. தாராபுரம்

122. சாதிக் பாஷா நகர்

ஈரோடு மாவட்டம்

123. ஈரோடு

124. பி.பி. அக்ரஹாரம்

சேலம் மாவட்டம்

124. சேலம்

மதுரை மாவட்டம்

125. காயிதேமில்லத் நகர்

126. அவனியாபுரம்

127. வில்லாபுரம்

திண்டுக்கல் மாவட்டம்

128. பேகம்பூர்

129. பழனி

விருதுநகர் மாவட்டம்

130. விருது நகர்

131. அருப்புக்கோட்டை

132. சிவகாசி

நெல்லை மாவட்டம்

133. மேலப்பாளையம்

134. பாளையங்கோட்டை

135. தென்காசி

136. கடைய நல்லூர்

தூத்துக்குடி மாவட்டம்

137. செய்யுதுங்க நல்லூர்

138. ஆராம்பன்னை

139. தொங்கராங்குறிச்சி

140. கேம்லாபாத்

141. ஆழ்வார்திருநகரி

142. காயல்பட்டணம்

143. தூத்துக்குடி

குமரி மாவட்டம்

144. தக்கலை

145. தேங்காய் பட்டினம்

146. மந்தாரன் புதூர்

147. திட்டுவிளை

148. கடையலுமூடு

149. செங்கம்புதூர்

150. திருவிதாங்கோடு

பாண்டிசேரி

151. சுல்தான்பேட்டை

காரைகால்

152. காரைக்கால்

153. TR பட்டினம்

154. நிரவி

பெங்களூர்

1. KG ஹள்ளி

வெளிநாடு (ஆன்லைனில்)

1.ரியாத்

2.குவைத்

மேற்கண்ட 154 இடங்கள் போக கீழ் காணும் 7 இடங்களில் இஃப்தார்நிகழ்சியும் நடத்தபட்டது. சென்னை செரியன் நகர், இராஜகம்பீரம், புதுமடம், இருமேனி, மண்டபம், பனை குளம், தேவிப்பட்டிணம். TNTJSW

Tags: TNTJ

Share this