பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த முஸ்லிம் எம்.பி.க்களின் முயற்சி வெற்றி
நிர்வாகி
0
நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக புலம் பெயர்ந்தோர் விட்டுச் சென்ற சொத்துக்கள் தொடர்பான எனிமி பிராபர்டீஸ் பில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்தது நிறுத்தப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏராளமானோர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தா னுக்கும், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர். அப்படி அவர்கள் புலம் பெயர்ந்தபோது தங்கள் சொத்துக்களை அப்படி அப்படியே விட்டுச் சென் றனர். அந்த சொத்துக்களை புலம் பெயர்ந்தோரின் வாரிசுகள் மற்றும் உறவி னர்கள் அனுபவித்து வந் தனர். இந்த சொத்துக் களில் பல அறக்கட்டளை களாகவும், முஸ்லிம்களின் நலனுக்கு பயன்படக் கூடியதாகவும் இருந்து வந் துள்ளன.
எனிமி பிராபர்டீஸ் பில்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று விட்டவர்கள் விட்டுச் சென்ற இந்த சொத்துக் களை அரசே கையகப் படுத்த வகை செய்யும் மசோதா நடப்பு நாடாளு மன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட இருந் தது. இந்த மசோதா நிறை வேற்றப்பட்டால் உச்சநீதி மன்றம் உள்ளிட்ட இந்தி யாவின் எந்த ஒரு நீதி மன்றமும் இந்த விவகாரத் தில் தலையிட முடியாது என்றும், எந்த விசாரணையு மின்றி அரசே இதை கையகப்படுத்தும் என்றும் கூறப்பட்டிருந்தது.
எனிமி பிராப்பரிட்டீஸ் பில் என்ற இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட் டால் பஞ்சாப், மகாராஷ் டிரா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களிலும், தென் னகத்திலும் ஏராளமான முஸ்லிம்கள் பாதிக்கப்படு வர் என்பதை உணர்ந்த முஸ்லிம் தலைவர்கள் இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முஸ்லிம் எம்.பி.க்கள் ஆலோசனை
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் உறுப்பினர்களின் ஆலோ சனை கூட்டம் நாடாளு மன்ற மாநிலங்களவை துணைத்தலைவர் ரஹ்மான்கான் இல்லத்தில் நேற்று மாலை (ஆகஸ்ட் 3-ம் தேதி) நடைபெற்றது. பிரதமரை சந்தித்து முறையிடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங் களவை துணைத் தலைவர் ரஹ்மான்கான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹமது, மத்திய மரபுசாரா எரி சக்தித் துறை அமைச்சர் பருக் அப்துல்லா, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச் சர் சல்மான் குர்ஷித், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட 26 முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர்.
எனிமி பிராப்பரிட்டீஸ் பில்
என்ற பெயரில் கொண்டு வரப்பட உள்ள இந்த மசோதா தேவையற்ற சர்ச் சைகளையும், விளைவு களையும் உருவாக்கும். புலம் பெயர்ந் தோர் விட்டுச் சென்ற சொத்துக்களை எனிமி பிராப்பரிட்டீஸ் என அழைக்கப்படுவது தேவையற்றது.
இதை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் ஏற்கவில்லை என்றும் எனவே, இதனை தாக்கல் செய்ய விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரதமர் உத்தரவு
நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் கோரிக் கைகளை கவனமாகக் கேட்ட பிரதமர் உடனடி யாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை தொடர்பு கொண்டு எனிமி பிராப் பரிட்டீஸ் பில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை நிறுத்த கேட்டுக் கொண் டார்.
பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப் படுவது நிறுத்தப்பட்டது. இது நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் ஒட்டுமொதத முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.