Breaking News

இன்று வளைகுடா நாடுகளில் ரமலான் பிறை தெரிந்தது!

நிர்வாகி
0
சவூதி தலைநகரான ரியாத்தில் இன்று மாலை சற்று முன்னர் ரமலான் மாத முதல் பிறை தெரிந்ததாக அரசின் அதிகாரபூர்வ செய்தி சேனல் அல்இஹ்பாரியா தெரிவித்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் முஸ்லிம்கள் அதிகாலை முதல் மாலை வரையில் உண்ணா நோன்பு இருப்பார்கள் அதே சமயத்தில் இறைவனை வழிபட்டும் தீமையான விசயங்களை விட்டும் தங்களையும் பிறரையும் தடுத்து கொள்வார்கள். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இப்புனித மாதத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

இன்று சவூதியில் பிறை தென்பட்டதை தொடர்ந்து வளைகுடா நாடுக்ளிலும் பிறையை கண்டு துபாய் கத்தர் உள்ளிட்ட நாடுகளும் தங்கள் நாட்டில் புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ளதை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அரபு நாடுகளில் வசிக்கும் லால்பேட்டை நண்பர்கள் அனைவர் களுக்கும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளத்தின் புனித ரமலான் முபாரக் நல் வாழ்த்துக்கள்

Share this