பலஸ்தீனம் - மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் - வெ- ஜீவகிரிதரன்
நிர்வாகி
0
சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம். 2006ம் ஆண்டு முதலேயே இஸ்ராயீல் ராணுவம் காஸா பகுதியின் அனைத்து வழிகளை யும் மூடிவிட்டது. உணவு, மருந்து பொருட்கள்கூட வெளியிலிருந்து உள்ளே செல்ல முடியாது. இதனால் காஸா பகுதி மக்கள் பஞ்சத்தாலும், பட்டினியாலும், நோய்களாலும் கும்பல் கும்பலாக செத்து மடிகின்றனர். இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து உலகம் முழுவதுமுள்ள மனித நேய ஆர்வலர்கள் ‘‘காஸாவை விடுவிப்போம்’’ என்ற முழக்கத்துடன் உணவு, மருந்து பொருட்களை படகுகளில் ஏற்றிக் கொண்டு காசாவுக்கு செல்ல முயற்சி செய்தனர்.
இவர்கள் இத்தாலி, அயர்லாந்து, கனடா, கிரேக்கம், துனிசியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெ ரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, டென்மார்க், சைப்ரஸ், லெபனான் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். பல்வேறு சமூக தளங்களிலிருந்து வந்தவர்கள். பல்வேறு பணிகளில் உள்ளவர்கள். 2008ரூம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதன் முதலாக 17 நாடுகளைச் சேர்ந்த 44 ஆர்வலர்கள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் படகில் ஏறி காஸாவுக்குள் நுழைந்தனர்.
இதுபோல ஏறத்தாழ 10 முறைக்கும் மேலாக இவர்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்தனர். பலமுறை இஸ்ராயீல் ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாயினர். கடை சியாக கடந்த மே மாதம் இவர்களின் படகுகள்மீது இஸ்ராயீல் ராணுவம் தொடுத்த மிருகத்தனமான தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இவர்களெல்லாம் பலஸ்தீன பஃதா இயக்கத்தினரோ அல்லது காசாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினரோ அல்லது ஆயுதம் தரித்த வீரர்களோ அல்ல. மாணவர்கள், வழக்கறிஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருந்து வந்தவர்கள். இவர்கள் தரித்திருந்தது ‘மனித நேயம்’ என்ற ஆயுதம் மட்டுமே. இவர்களின் மீதான கொலை வெறித் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச அளவிலே இஸ்ராயீலின் கோர முகம் வெளிப்பட்டு பல்வேறு நாடுகளும் தம் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
இத்துணை கண்டனங்கள், எதிர்ப்புகள், அனைத்தையும் மீறி இன்றளவும் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் இஸ்ரேல் அடைத்தே வைத்துள்ளது. குறிப்பாக காஸாவின் கடல் பகுதி முழுக்க இஸ்ராயீல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதற்கென்ன காரணம்? ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாலா? அல்லது ஹாமாஸ் அமைப்பு காஸாவிலே மிகுந்த செல்வாக்கோடு இருப்பதாலா? ஹாமாஸ் 2006ம் வருடம்தான் காஸா தேர்தலில் பெரும்பான்மை பெற்றது.
ஆனால், காஸா முற்றுகைக்கான காரணம் 1999லேயே தொடங்கிவிட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
காஸா மீனவர்கள்
நாம் காஸாவைப் பற்றிய தகவலில் சற்று பின்னோக்கி செல்வோம். காசா கடல் பகுதியில் காஸா மீனவர்கள் சுமார் 3000 பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சிறிய, நடுத்தர, பெரிய படகுகள் என சுமார் 700 படகுகள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஐ.நா.வின் கடல் சார் பொரு ளாதார சட்டம் பிரிவுரூ5ரூன்படி ஒரு நாட்டின் கரையிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவு வரையிலான பகுதி கடல்சார் சிறப்பு பொருளாதார பகுதியாக கருதப்பட்டு அந்த நாடு அந்த பகுதியிலுள்ள கடல் செல் வங்களை அனுபவிக்கலாம் எனக் கூறுகிறது.
1993ரூம் ஆண்டு ஓஸ்லோ ஒப்பந்தத் தின்படி பலஸ்தீனம் காசாவின் கடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவு வரையிலான பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டது. 1978ரூக்கு முன்பு சினாய் கடற்கரை பகுதி வரையி லான சுமார் 75,000 சதுர கி.மீ. பரப்பளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பலஸ்தீன மீனவர்கள் இதன் மூலம் வெறும் 600 சதுர கி.மீட்டருக்குள் முடக்கப்பட்டனர். 1994ம் வருடம் பலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாஸர் அரபாத்தும் அன்றைய இஸ்ராயீல் பிரதமர் இட்ஜக் ரபினும் கசாரூஜெரிக்கோ ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி காசா கடல் பகுதியில் 20 கடல் மைல்கள் தொலைவு வரை மீன் பிடித்துக் கொள்ளலாம் எனவும் எகிப்து - இஸ்ராயீல் கடல் எல்லைப் பகுதிகளில் பலஸ்தீன மீனவர்கள் மீன் பிடிக்க நுழையக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
காஸாவின் எண்ணெய் வளம்
இந்நிலையில் 1999ம் வருடம் இங்கிலாந்தைச் சேர்ந்த பி.ஜி. குரூப் என்ற பெட்ரோலிய கம்பெனி ஒன்று காஸா கடல் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டுபிடித்தது. கடற்கரையிலிருந்து ஏறக்குறைய 10 முதல் 15 கடல் மைல் தொலைவு வரை இந்த எண்ணெய்ப் படுகைகள் பரந்து விரிந்து கிடப்பதையும் இதிலிருந்து சுமார் 1.3 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு கிடைக்க வாய்ப்புள்ளதையும் கண்டறிந்தது. இதன் மதிப்பு சுமார் 400 கோடி டாலர்களாகும். இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால் இதைவிட பல மடங்கு எண்ணெய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும், காஸா பகுதி இன்னொரு துபையாக மாற வாய்ப்புள்ளதையும் வெளிப்படுத்தியது.
இந்த எண்ணெய் வளம் பலஸ்தீனத்தின் 10 வருட மின்சார தேவையை நிறைவேற்றுவதோடு, ஏற்றுமதி செய்யும் வகையில் ஏராளமாக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டதும், யாசர் அரபாத் அந்த நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி கடலுக்கடியில் குழாய்களை பதித்து எரிவாயு காஸாவுக்குள் கொண்டுவரப்பட்டு மின்சார உற்பத்தியை துவக்குவது எனவும், உபரி எரிவாயுவை ஏற்றுமதி செய்வது எனவும் திட்டமிடப்பட்டது.
எரிவாயு திட்டம்
27.09.2000 அன்று எரிவாயு எடுக்கும் திட்டம் காஸாவின் கடற்கரையிலிருந்து 19 கடல் மைல்கள் தாண்டி கடலிலே யாசர் அரபாத் அவர்களால் தொடங்கியும் வைக்கப்பட்டது. இந்த எரிவாயுவை இஸ்ராயீலுக்கு விற்பது குறித்து பி.ஜி. குரூப் நிறுவனம் அணுகியபோது, பலஸ்தீனத்திலிருந்து எரிவாயுவை வாங்கத் தமக்கு விருப்பமில்லை எனக் கூறி இஸ்ராயில் மறுத்துவிட்டது. எனவே அந்நிறுவனம் எகிப்துடன் பேசி முடிவு செய்து அதன்படி கடலுக் கடியில் குழாய்கள் அமைத்து, அதன் வழியாக எரிவாயுவை எகிப்துக்கு கொண்டு சென்று அங்கிருந்து இஸ்ரே லுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்தது. ஆனால், இஸ்ராயீல் அதற்கும் உடன்படவில்லை. இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இந்த விவகா ரத்தில் தலையிட்டு பி.ஜி. குரூப் நிறுவனம் இஸ்ரேலுக்கு நேரடியாக எரிவாயுவை அனுப்ப நிர்பந்தித்தார். அதற்கான பேச்சு வார்த்தை இஸ்ராயீலுடன் நடத்த வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்தார்.
அதன்படி அந்நிறுவனம் இஸ்ரேலில் தன் அலுவலகத்தை திறந்தது. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன. கடைசிவரையிலும் இஸ்ரேல் இழுத்தடிக்கவே பி.ஜி. குரூப் நிறுவனம் தன் இஸ்ரேல் அலுவலகத்தை மூடிவிட்டது. பேச்சு வார்த்தையையும் நிறுத்திக் கொண்டது.
திட்டமிட்ட கலவரம்
இந்த சமயத்தில்தான் ஏரியல் ஷரோன் காட்சிக்கு வருகிறார். பாலஸ்தீனத்திடமிருந்து எரிபொருள் வாங்க முடியாது என சபதமிடுகிறார். 28.09.2000 அன்று ‘டெம்பிள் மவுண்ட்’ என்ற இடத்துக்கு யாசர் அரபாத் அவர்களின் எச்சரிக்கையையும் மீறிச் செல்கிறார். இந்துத்துவ மத வெறியாளர்களின் ரத யாத்திரை போல திட்டமிட்ட கலவரங்களை விதைக்கிறார். படுகொலைகள் அரங்கேறுகின்றன. நாடு முழுவதும் கலவரம். இதன் பலனாக 2001 பிப்ரவரியில் இஸ்ராயில் பிரதமராக ஷரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே காஸா முற்றுகை ஆரம்பமா னது. அத்தியாவசிய பொருட்களை காஸாவுக்குள் கொண்டு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்நிலையில் காஸா மீனவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது இஸ்ராயீல் கடற்படையின் கப்பல்கள் ஆறு கடல் மைல் தொலைவிலேயே மீன் பிடி படகுகளைத் தாக்கின. கண்மூடித்தனமாக இயந்திரத் துப்பாக்கிகளின் தாக்குதல்கள். 15 மீனவர்கள் கொல்லப்பட்டனர். 200ரூக்கும் அதிகமானோர் காயமடைந்த னர். இந்த தாக்குதலுக்கு ஹாமாஸ் அமைப்போ அல்லது இஸ்ரேலின் பாதுகாப்போ காரணமல்ல. காஸா கடல் பகுதியில் கொட்டிக் கிடக்கும் எண்ணெய் வளம்தான் காரணம்.
எண்ணெய் திருட்டு
இதுதவிர காசாவின் வடக்கு கடல் பகுதியில் இஸ்ராயில் ஒரு எண்ணெய் கிணற்றுக்கான தளம் அமைத்துள்ளது. உயர் தொழில்நுட்பம் மூலம் 10,000 அடி முதல் 15,000 அடி வரை பூமிக்குள் சாய்வாக துளையிட்டு காஸாவின் எண்ணெய் வளத்தை திருட்டுத்தனமாக உறிஞ்சி எடுப்பதுதான் அதன் திட்டம். குவைத் இது போலவே தன் நாட்டு எண்ணெய் வளங்களை திருடுவதாக ஈராக் புகார் கூறியது நாம் அறிந்ததே.
சர்வதேச நெருக்கடி
காசாவுக்கான உணவு, மருந்து பொருட்களின் விநியோகத்தை நிறுத்தியது, மீனவர்களைப் படு கொலை செய்தது - போன்ற இஸ்ராயீலின் மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் வெளிப்பட்டன. பன்னாட்டு நெருக்குதல் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் தன்னுடைய தூதராக கேதரின் பெர்ட்டினி அவர்களை காசாவுக்கு அனுப்பி வைத்தார். அங்குள்ள மனிதாபிமான தேவைகளை ஆய்வு செய்ய பணிக்கப்பட்டார். 2002ம் வருடம் ஆகஸ்ட் மாதம் காசாவுக்கு வந்து ஆய்வு செய்த கேதரின் பெர்ட்டினி விரிவான அறிக்கையையும் தன் பரிந்துரைகளையும் ஐ.நா. பொதுச் செயலரிடம் சமர்ப்பித்தார். அந்த பரிந்துரைகளில், காஸா மீனவர்கள் 12 கடல் மைல் எல்லை வரையிலாவது மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், 3 கடல் மைல் தொலைவை கடக்கும்போதே மீனவர்களை இஸ்ராயீல் கடற்படை தாக்கிக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. சர்வதேச நெருக்கடி காரணமாக இஸ்ராயீல் காஸா மீதான தன் பிடியை விலக்கிக் கொள்வதாக 12.09.2005ல் அறிவித்திருந்தது. ஆனால், வான்வழி, தரைவழி, கடல் வழி என காஸாவின் அத்தனை வழிகளையும் இஸ்ரேல் அடைத்துக் கொண்டு நின்றது. ஆதிக்கம் செலுத்தியது.
ஹமாஸ் வெற்றியும்
ராணுவ ஊடுறுவலும்
25.1.2006-காஸா சட்டமன்ற தேர்தல். மொத்தம் 132 இடங்களில் 76 இடங்களை கைப்பற்றிய ஹமாஸ் இயக்கம் காஸாவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. உடனே இஸ்ராயீலும், அமெரிக்காவும் ஹமாஸ் இயக்கத்தை ‘பயங்கரவாத இயக்கம்’ என பிரகடனப்படுத்தின. காஸாவின் அனத்து எல்லைகளையும் இஸ்ரேல் இராணுவம் மூடிவிட்டது. காசாவுக்குள் உணவு மருந்து பொருட்கள் எதுவுமே நுழைய முடியாமல் போனது. காஸா நகர மக்கள் பசி, பஞ்சம், பட்டினியாலும், நோய்களாலும் நூற்றுக்கணக்கில் மாண்டனர்.
மீண்டும் 2008-ல் இஸ்ராயீல் பி.ஜி. குரூப் எண்ணெய் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அதே வருடம் ஜூன் மாதம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹூத் பராக் தன் இராணுவ துருப்புகளை காசாவுக்குள் ரகசியமாக ஊடுருவ உத்தரவிட்டார். 19.06.08 -ல் இஸ்ராயீலுக்கும் ஹமாஸுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது. உணவு, மருந்து பொருட்கள் ஒரு நாளைக்கு 900 டிரக்குகள் காசா நகருக்குள் சென்று கொண்டிருந்த நிலை மாறி 70 டிரக்குகள் மட்டுமே சென்று கொண்டிருந்த நேரம் அது. இந்த ஒப்பந்தம் மூலம் மீண்டும் பழைய நிலை திரும்பும் என எதிர்பார்த்த ஹமாஸ் இயக் கத்துக்கு பலத்த ஏமாற்றம். 70 டிரக்குகள் வெறும் 90 டிரக்குகளாக உயர்ந்ததுதான் பலன். எனவே பழையபடி சுரங்கப் பாதை மூலமே அத்தியாவசிய பொருட்களை காஸா நகருக்குள் கொண்டு வர ஹமாஸ் இயக்கம் முடிவு செய்தது. இஸ்ராயீல் ராணுவம் இந்த சுரங்க பாதையை தேடுவதாகக்கூறி 6 பலஸ்தீனர்களை படுகொலை செய்தது. 5.11.2008 -ல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டது. உடனே ஹமாஸ் பதில் தாக்குதல் தொடுத்தது. 5 வார காலத்தில் சுமார் 237 ராக்கெட்டுகளை இஸ்ராயீல்மீது ஏவியது ஹமாஸ். காஸாவுக்குள்ளான இஸ்ராயீலின் ஊடுருவலுக்கு இந்த தாக்குதல்கள் நியாயம் கற்பித்துவிட்டன.
எகிப்து நீதிமன்றம்
இந்த நிலையில் இஸ்ரேல் எகிப்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. சுமார் 15 வருட காலத்திற்கு 1.7 மில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவை இஸ்ராயீலுக்கு விற்க ௨௦௦௫ல் எகிப்து ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் எகிப்து பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படாததால் சட்டப்படி செல்லாது என எகிப்து நீதிமன்றத்திலே ஒருவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரணை செய்து வந்த எகிப்து நீதிமன்றம் 18.11.2008ல் இந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவித்துவிட்டது. எகிப்து எரிவாயுவை வாங்கும் இஸ்ரேலின் திட்டம் நின்று போனதால் எவ்வாறேனும் காஸாவின் எரிவாயு வளத்தை அடைந்தே தீரவேண்டும் என இஸ்ரேல் முடிவு செய்தது. எகிப்து நீதிமன்ற தீர்ப்பு வெளியான அன்றே இஸ்ராயீலின் கப்பற்படை கப்பல்கள் தாக்குதலைத் தொடங்கின காஸா ரூ ஜெரிக்கோ ஒப்பந்தபடி 20 கடல் மைல் தொலைவு வரை காஸா மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்றிருந்தாலும் 7 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண் டிருந்த காஸா மீனவர்கள் மீது குண்டு மழை பொழிந்தது. மீன்பிடி படகுகள் நாசமாக்கப்பட்டன. மீனவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டனர்.
ஆபரேஷன் கேஸ்ட் லீட்
கடல் பகுதியில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ‘‘ஆபரேஷன் கேஸ்ட் லீட்’’ என்ற பெயரில் காஸா நகரத்தின் மீதே கடுமையான தாக்குதலை 27.12.08ரூல் தொடங்கியது. காஸா முழுவதும் குண்டு மழை பொழிந்தது. மீண்டும் சர்வதேச சமூகம் இஸ்ராயீலை கண்டித்தது. நெருக்கடிக்குள்ளான இஸ்ரேல் வேறு வழியின்றி 18.1.09ல் போர் நிறுத்தத்தை அறிவித்தது. ‘ஆபரேஷன் கேஸ்ட் லீட்’ முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனாலும், காஸாவின் கடல் பகுதியை தன் ஆதிக்கத்திலேயே இஸ்ரேல் வைத்துள்ளது. 24.1.09ல் காசா கடற்கரையில் நடை பயின்று கொண்டிருந்த ஒரு தந்தையும் மகளும் இஸ்ராயீல் கப்பற் படையால் சுடப்பட்டனர். கடற்கரைக்குக்கூட யாரும் வரமுடியாத நிலையை இஸ்ராயீல் ருவாக்கியது. இறுதி யாக 14.02.09 அன்று காஸா கடல் பகுதி முழுமையாக தடை செய் யப்பட்ட பகுதியாக இஸ்ராயீல் அறிவித்து விட்டது.
ஒரு நாட்டின் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் தொலைவு வரை ‘கடல் சார் சிறப்பு பொருளாதார மண்டலம்’ என அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள அனைத்து இயற்கை பொருளாதார வளங்களை யும் அந்த நாடு யாருடைய தலையீடு மின்றி அனுபவிக்கலாம் என ஐ.நா.வின் ‘கடல் சார் பொருளாதார சட்டம்’ கூறுகிறது. காசாவின் கடற் கரையிலிருந்து 10 முதல் 15 கடல் மைல் தொலைவுக்குள்ளாகவே எண்ணெய் படுகைகளும் அதில் இயற்கை எரிவாயு ஏராளமாக இருப் பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஸா இன்னொரு துபை என்ற அளவிலே மாற்றம் பெறுவதற்கு இந்த எண்ணெய் வளம் உதவும். இந்த இயற்கை வளத்தை திருடுவதற் காகத்தான் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலையும், முற்றுகையையும் தொடர்கிறது. உலகம் முழுவதும் உள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதற்காக பல ஆயிரம் மக்களை படுகொலை செய்து பழக்கப்பட்டது அமெரிக்கா. அதன் ஏவல் நாய் இஸ்ராயீலும் அதே வழியில்...