Breaking News

ஹஜ் பயணிகளுக்குசிறப்பு பயிற்சி வகுப்பு

நிர்வாகி
0
புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் கடலூரில் நடந்தது.கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்வதற்காக 450 பேர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.

இவர்களுக்கு ஹஜ் பயணத்தை நிறைவேற்றும் முறை குறித்து விளக்குவதற்காக தமிழ் நாடு ஹஜ் கமிட்டி சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு கடலூர் கே.எஸ்.ஆர்., மகாலில் நடந்தது.கூட்டத்திற்கு இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் முகமது ரபீத் வரவேற்றார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் பயிற்றுனர்கள் இப்ராகிம் ஜனாப் ராஜா முகமது, ஜனாப் கமாலுதீன் பயிற்சி அளித்தனர். செம்மண்டலம் பள்ளி வாசல் ஷர்புதீன் ரப்பாணி சிறப்புரையாற்றினார்.

ஹஜ் கமிட்டி கடலூர், விழுப்புரம் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ரகுமான், நியாஸ் அகமது, பாசுல் பாஷா, சையது சலாவுதீன், சையது மொகைதீன், அப் சல், சையது இம்தியாஸ், ஜாபர்சேட், அமானுல்லா, வக்கீல்கள் சங்கர், கவிப்பிரியா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

Tags: ஹஜ் பயணி

Share this