Breaking News

முஸ்லிம் லீக் கேரள மாநில முன்னாள் தலைவர் முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் நினைவு தபால்தலை டெல்லியில் வெளியிட்டு பிரதமர் புகழாரம்

நிர்வாகி
0
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில தலை வராகவும், சிறந்த ஆன்மிக அறிஞராக வும் அனைவரா லும் நேசிக் கப்பட்டவராகவும் திகழ்ந்து மறைந்த பானக் காடு செய்யது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் நினைவு தபால் தலையை டெல்லி யில் பராதப் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டு புகழாரம் சூட்டி னார்.

தபால் தலை வெளியீடு

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் பானக்காடு செய்யது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வம்சாவளி யைச் சேர்ந்த அவர் மிகச் சிறந்த ஆன்மிக அறிஞரா கவும், அனைவராலும் நேசிக்கப்பட்டவராகவும் திகழ்ந்தவர்.

ஷிஹாப் தங்ஙகளின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப் பட்டது. நினைவு நாளை முன்னிட்டு இந்திய அர சின் சார்பில் ஷிஹாப் தங்ஙள் நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. பிரதமர் புகழாரம்
தபால் தலையை வெளி யிட்டு ஷிஹாப் தங்ஙளின் பெருமைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் தெரி வித்ததாவது:

மறைந்த செய்யது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் அவர்களின் தபால் தலையை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடை வதுடன், இதனை எனது வாழ்வில் பெற்ற பெரும் பாக்கியமாக கருதுகின் றேன். தங்ஙள் அவர்களின் வாழ்க்கை நமக்கெல்லாம் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது. கேரள மண்ணின் சிறந்த மனிதர் களில் ஒருவராக அந்த மண்ணின் தலை சிறந்த மகனாக அவர் திகழ்ந்தார்.

அவர், சூஃபி பாரம் பரியத்தின் தலை சிறந்த ஆன்மிக வாதியாக திகழ்ந் துள்ளார். அரபி இலக்கி யங்களில் மிகுந்த ஞானம் கொண்டிருந்த அவர் புனித குர்ஆன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகிய வற்றில் மிகுந்த ஈடு பாட்டுடன் விளங்கினார்.

ஷிஹாப் தங்ஙள் தனித்தன்மை மிக்கவர்

நமது இந்தியா பல கலாச்சாரங்களை உள்ள டக்கிய தேசம், இத்தகைய கலாச்சார வேறுபாடுகளை ஒன்றிணைக்கக் கூடிய விஷயமாக ஆன்மிகம் திகழ்கின்றது. அத்தகைய ஆன்மிக கலாச்சாரத்திலும் ஷிஹாப் தங்ஙள் தனித் தன்மை வாய்ந்தவராக விளங்கினார்.

அவர், ஆன்மிக வாதி யாக இருந்த அதே நேரத் தில், முன்மாதிரியான அரசியல் தலைவராகவும் எல்லோராலும் மதித்து போற்றப்படக் கூடிய அரசியல் தலைவராகவும் திகழ்ந்தார்.

கேரள மாநில அரசியல் வரலாற்றில் முதன் முறை யாக கூட்டணி ஆட்சி ஏற்படுவதற்கு அடித்தள மிட்ட பெருமை அவரையே சாரும்.

அமைதிக்கு பாடுபட்டவர்

1992ம் ஆண்டு பாபர் மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையில் நாடு முழுவதும் விரும்பத் தகாத பல அசம்பாவி தங் கள் நடந்த நேரத்தில் கேரள மாநிலம் அமைதி யான சூழலும், சமூக நல்லிணக்கமும் நிலவ தங்ஙள் அவர்களின் சாதி, சமயம் கடந்த சேவையே காரணம் ஆகும். அவர், நாட்டில் அமை தியும், நல்லிணக்கமும், நாட்டு மக்களிடையே ஒற் றுமையும், புரிந்துணர்வும் ஏற்பட தொடர்ந்து பேசி யும், எழுதியும் வந்தார். அவருடைய பணிகள் கேரள மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக அமைந் திருந்தது.

காங்கிரஸ்-முஸ்லிம் லீக் உறவு
இந்திய அரசியல் வர லாற்றில் முதன் முறையாக காங்கிரஸ் கட்சியும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீகும் அரசியல் உறவு கொள் வதற்கு அவர்தான் காரணமாக அமைந்திருந் தார் என்பதை எண்ணி பெருமை கொள்கிறோம்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக் கப்பட்ட மக்களின் முன் னேற்றத்தில், கல்வி, சமூக, பொருளாதார முன்னேற் றத்தில் அவர்கள் வளர்ச்சி அடைய ஆக்கப்ப+ர்வமான பல காரியங்களை அவர் செய்து வந்தார். அரசுகளுக்கு அவர் அளித்த பல நல்ல யோச னைகள் புதிய பல திட்டங் கள் உருவாவதற்கு காரண மாக அமைந்தன.

லட்சோப லட்ச மக்க ளின் இதயங்களை கவர்ந்த தங்ஙள் அவர்களின் நினைவு தபால் தலையை வெளியிடுவதா னது இந்திய மக்கள் அவர் மீது கொண் டிருந்த அன் பின் சிறிய வெளிப்பாடாக அமைந் துள்ளது.

நாம், இந்த நேரத்தில் நமது தேசத்தில் மிகச் சிறந்த ஆன்மிகவாதியாகவும், அரசியல் தலைவராகவும் திகழ்ந்த பானக்காடு செய்யது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் அவர் களின் முன்மாதிரியான வழிகாட்டுதல் மிகுந்த அழகிய வாழ்க்கையை நினைவு கூர்வதுடன், அது போன்ற வாழ்க்கையை நாட்டின் இளம் உள்ளங் கள், மாணவ சமுதாயத்தி னர் வாழ்வதற்கான வழி வகைகளை போதிக்க கடமைப்பட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி அமைந் துள்ளது. இத்தகைய ஒரு சிறப்பான நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி யும், ப+ரிப்பும்அடைகின் றேன். நன்றியும் தெரிவித் துக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

இ.ய+.முஸ்லிம் லீக் தலைவர்கள் பங்கேற்பு
இவ்விழாவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய ரயில்வே இணையமைச் சருமான இ.அஹமது, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், மத்திய அமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.

Tags: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Share this